சுயம்புநாதேஸ்வர் பேரளம்

 சுயம்புநாதேஸ்வர் பேரளம் -(தரிசனநாள் -27.1.2026-காலை)

அமைவிடம்

திருவாரூர் மாவட்டம் நன்னிலம் வட்டத்தில் அமைந்துள்ளது. மயிவாடுதுறையிலிருந்து 18கி.மீ. தொலைவில் பவானி உடனுறை சுயம்புநாதேஸ்வர் கோவில் அமைந்துள்ளது.

 நாங்கள் காலை 6-30க்கு மயிலாடுதுறையிலிருந்து கிளம்பி மதுவனேஸ்வரர் கோவிலுக்கு வரைபடம் போட்டுக்கொண்டு கிளம்பினோம். பேரளத்திலிருந்த இந்த கோவிலை பார்த்து விட்டு பயணத்தை நிறுத்தி இங்கு வழிபாட்டிற்காக சென்றோம். 

11 முதல் 12 நூற்றாண்டு காலத்தில் சோழமன்னர்களால் கட்டப்பட்ட கோவில்.  தர்மபுரம் ஆதினத்தின்கீழ் இந்த கோவில் பராமரிக்கப்படுகிறது. 2023 ஆண்டு தை மாதம் கும்பாபிஷேகம் நடைபெற்றது.  

ஐந்து நிலை ராஜகோபுரத்துடன் இந்த கோவில் அமைந்துள்ளது.  ஆதிகாரநந்தி அவரின் துணைவியுடன் உள்ள சன்னதிஅமைந்துள்ளது சிறப்பாக உள்ளது. 

பேரளம் மகரிஷி என்று ஒருசன்னதியுள்ளது. இந்த மகரிஷி பெயரேயிந்த ஊருக்கு வைத்திருக்கலாம். 

இக்கோவில் அர்சகர் வழிகாட்டிலின் படி பிறகோவில்களை தரிசனம் செய்தோம். எங்களின் அட்டவணையை பின்தள்ளினோம். 

பயண அனுபவம்.

நாங்கள் 24 ஆம் தேதி காலை புதுச்சேரியிலிருந்து கிளம்பி கும்பகோணம் வழியாக எங்களின் குலதெய்வம் கோவில் வரகூர் வெங்கடே பெருமாள் கோவிலில் ஆண்டுதோறும் வசந்த பஞ்சமி (தித்திரை மாதம் பஞ்சமி திதி) அன்று நடை பெறும் தரங்கிணி உற்சவத்தில் இரண்டு நாட்களும் பங்கு கொண்டு, பின்னர் மாயவத்தில் மூன்று நாட்களுக்கு தங்கி சுற்றியுள்ள தெய்வ திருதலங்கள் மற்றும், திருவாரூர் என்று சென்று, மீண்டும் எங்கள் ஊ ர் நல்லிச்சேரிக்கு வந்து, தை வெள்ளிக்கிழமை (30.1.2026) அகிலாண்டேஸவரி அம்மனுக்கு நடை பெற்ற சந்தனகாப்பில் கலந்துகொண்டு, அன்று மாலை பிரதோஷத்தில் இறைவனை வழிபட்டு, (31.1. 2026) மீண்டும், அய்யம்பேட்டை கும்பகோண வழிதடத்திலுள்ள ஐந்து திரு கோவில்களை வழி பட்டு சுபமாக 31.1.மாலை புதுச்சேரி வந்தடைந்தோம். 51 திருகோவில்கள் தரிசனம் செய்தோம்.  தேவார திருத்தலம்36 , திவ்யதேசம்5, 10 பழம்பெரும் ஆலயங்கள. கோவில் சிறப்பு பற்றிய பிளாக் தனி தனியாக வெளியிடுவேன்.

எங்களின் இலக்கு (வைணவம்)

2026 ஆம் ஆண்டுக்குள் 276 தேவார திருத்தலங்களும், 106 (திருபாற்கடல் மற்றும் வைகுண்டம் இரண்டும் இப்பூவுலகில்யில்லை). திவ்ய தேசங்கள் தரிசனம் செய்ய வேண்டும் என்று இலக்கு வைத்துள்ளோம்.  திவ்யதேசத்தில் தமிழ்நாட்டை தவிற பிறமாநிலங்களில்லுள்ள, அதாவது,  நேபாளம், முக்திநாத் உட்பட பிற திவ்ய தேசங்களை தரிசனம் செய்து விட்டோம். எஞ்சிய தமிழ்நாட்டு திருத்தலங்களை தரிசனம் செய்ய வேண்டும். ஓம் நமோ நாராயணா.

எங்களின் இலக்கு (சைவம்)

276 தேவாரதிருத்தலங்களில் கைலாய மானசரோவர் இந்த ஆண்டு  தரிசனம் செய்ய தீர்மானித்துள்ளோம். ஆந்திர மாநிலம் ஸ்ரீசைலத்தை தவிற பிற மாநில திருத்தலங்கள் தரிசனம் செய்விட்டோம். ஸ்ரீலங்கா கோணேஸ்வரம், கேதீஸ்வரம் உட்பட தரிசனம் செய்து விட்டோம். எஞ்சிய தமிழ்நாட்டு திருத்தலங்கள் உள்ளன. ஹர ஹர மகாதேவா.











No comments:

Post a Comment

யாகந்தி குகை (Yaganthi Caves),(ம) அருந்ததி அரண்மனை

  யாகந்தி குகை (Yaganthi Caves),(ம) அருந்ததி அரண்மனை (நாள் - 25.3.2026) அமைவிடம் ஆந்திரபிரதேச மாநிலம், நந்தியால் மாவட்டத்தில் அமைந்துள்ள கு...