தாமல் தாமோதர பெருமாள் (தரிசனநாள்-1.1.2026)
அமைவிடம்
காஞ்சிபுரம் மாவட்டத்தில் அமைந்துள்ளது. சென்னை வேலூர் நெடுஞ்சாலையில் பாலுசெட்டி சத்திரம் என்றயிடதிலிருந்து, 3கி.மீ. தொலைவி;ல் அமைந்துள்ளது இந்த தாமல்.
பெயர்காரணம்
திருமால் பெரும்பாலும் 12 நாமங்களில் (பெயர்களில்) மக்களுக்கு அருள்புரிகிறார். அவையாவன கேசவா, நாராயணா, மாதவா, கோவிந்தா, விஷ்ணு, மதுசூதனா, திருவிக்ரமா, வாமனா, ஸ்ரீதரா, ரிஷிகேஸா, பத்மநாபா , தாமதரா என்பதாகும். இத்தலத்தில் தாமோதரன் என்ற பெயரில் விளங்குகிறார். தாமோதரன் என்றால், “கையிற்றால் கட்டபட்ட வயிற்று தழும்பை உடையவன்”; கயிற்றின் தழும்பு என்பது பொருள்.
கிருஷ்ணாவதாரத்தில் குழந்தையின் விளையாட்டை தாங்கமுடியாமல் யசோதை கண்ணனை உரலில் கட்டி போடுகிறாள். இந்தநேரத்தில் கண்ணன் உரலுடன் தவழ்ந்து வந்து இரண்டு மரங்களுக்கிடையில் வந்து உரலைமிக வேகமாக இழுகிறார். இந்த இரண்டு மரங்களும் தேவர்கள் சாபம் காரணமாக இந்த உலகில் மரமாக வாழ்கிறார்கள். கண்ணன் உரலுடன் வேகமாகயிழுத்ததால் இந்த மரங்கள் முறிந்து, தேவர்களுக்கு சாபவிமோசனம் கிடைக்கிறது என்பது கிருஷ்ணலீலைகளில் ஒன்றாக உள்ள செய்தி. அவ்வாறு இழுத்தநேரத்தில் உண்டான தழும்பே கண்ணனுக்கு தாமோதரன் என்ற பெயரை தருகிறது. இக்கோவில் பெருமாள்யிடுப்பில் இந்த தழும்புயிருப்பதை நாம் கண்ணுற முடிகிறது. ஆனால் காலை திருமஞ்சன நேரத்தி;மட்டுமே இந்த தரிசனம் நமக்கு கிடைக்கும். மற்ற நேரங்களில் பட்டாச்சாரியார் இத்தல சிறப்பாக நமக்கு இதை கூறுகிறார்.
கஸ்தூரி திலகன்
பெரும்பாலும் கோவில்களில் பெருமாள், திருமண் மற்றும் ஸ்ரீசூர்ணமணிந்தே காட்சி தருவார். ஆனால் இத்தலத்தில் நெற்றியில் கஸ்தூரிதிலகமிடுகின்றனர். இத்தல பெருமானை 1000 ஆண்டுகளுக்கு முன்புவரை மத்வர்களே பூஜித்து வந்தனர். புpன்னர் இந்த ஆலயம் வைணவர்களுக்கு தானமாக வழங்கப்பட்டது, இதன் காரணமாக இன்றளவும் பெருமான் நெற்றியில் கஸ்தூரிதிலகமிடுகின்றனர்.
கிருஷ்ணர் அலங்காரம்.
பிரதிமாதம் பெருமானுக்கு ரோகிணி நட்ஷத்திரம் அன்று கிருஷ்ணர் அலங்காரம் செய்யப்படுகிறது. நாங்கள் தரிசனம் செய்தன்று ரோகிணி.
ஒரே நேர்கோட்டில் மூன்று பெருமாள் கோவில்கள்.
தாமல் தாமோதர பெருமாள் (நின்றகோலம்), திருபுட்குழி விஜயராகவபெருமாள் (அமரந்;தகோலம்), திருபாற்கடல் ரெங்கநாதன் (கிடந்தகோலம்), இந்த மூன்று நிலை பெருமாள் கோவில்களை, ஒரே நாளில் தரிசனம் செய்வதை இப்பகுதி மக்கள் ஒரு சிறப்பான தரிசனமாக கருதுகின்றனர். திருபுட்குழி மட்டுமே திவ்யதேசம். பக்தர்கள் திருப்பாற்கடல் கோவிலை பெருமான் வீற்றி;கும் திருபாற்கடலாக நினைத்து வழிபடுகின்றனர். இறைவன் அருளால் நாங்கள் மூன்று தலங்களையுமே தரிசனம் செய்திருக்கிறோம். (திபுட்குழி,திருபாற்கடல் -பிளாக் உள்ளது)
பயண அனுபவம்
ஆங்கில புத்தாண்டு அன்று நாங்கள் புதுச்சேரியிலிருந்து, பெங்களுரு பயணித்தோம். 1.அனந்தமங்கலம் 2. தாமல் தாமோதரபெருமாள், 3. தாமல் வராகீஸ்வரர் என்ற சிவன் கோவில் என்று மூன்று ஆலயங்களை வழிபட்டு சென்றோம்.







No comments:
Post a Comment