புட்டபர்தி

 புட்டபர்தி (நாள் -16,17.1.2026)

அமைவிடம்

ஆந்திரபிரதேசமாநிலம், புட்டபர்தி என்ற ஊர். தற்சமயம் இவர் பெயர்கொண்டே ஸ்ரீசத்யசாய் மாவட்டம் என்று அழைக்கப்படுகிறது.

“சத்யசாய்பாபா” இவரைபற்றிய அடிப்படை செய்தி.

1926 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் ஈஸ்வரம்மா, பெட்ட வெங்கம ராஜு என்பவர்களுக்கு மகனாக பிறந்தார். இவர் அவரின் 14வது வயதில் சீரடி சாய்பாபாவின் அவதாரம் என்று கூறிக்கொண்டு அடியவர்களை நோக்கி வீட்டைவிட்டு வெளியேறினார். வீபூதி, கைகடிகாரம், மோதிரம், கழுத்தணி, சிவலிங்கம் என்று பல பொருட்களை அவரே உருவாக்கி கொடுத்துவந்தார். இதுமட்டுமல்லாது, உடல் மற்றும் மனசுகவீனங்களை சரிசெய்தல், உச்சமாக உயிர்தெழுதல்கள் செய்துவந்தார் என்று கூறப்படுகிறது (நம்பப்படுகிறது). 

1972 ஆம் ஆண்டு ஸ்ரீசத்யசாய்; அறக்கட்டளையை உருவாக்கினார். அதன் மூலம் பள்ளி, கல்லூரி மருத்துவமனை, சிகிச்சைகள், குடிநீர்திட்டம், பல்கலைகழகம், ஆசிரமங்கள், பல வழிகளிலும் சமூக சேவைமையங்களை உருவாக்கினார். அவர் பக்தி, இசை, நடனம், நாடகம் இவைகளில் அசாதாரணமான திறன்கொண்டிருந்தார் .1968 மும்பையில் சத்யம் என்ற மந்திரை உருவாக்கினார். 1973-ல் ஹைதராபாத்தில் சிவமந்திரை உருவாக்கினார். 1982-ல் சென்னையில் சுந்திரம் என்ற மந்திரை உருவாக்கினார். பல வளச்சியையும், பல உடல்நல குறைகளையும் எதிர்கொண்ட அவர் 2011 ஏப்ரல் மாதம் உயர் துறந்தார். அரசு மரியாதையுடன் இறுதி சடங்குகள் நடந்தது.

நானும் சத்யசாய்பாபவும்

1973 – 75 வரை என்னுடைய தந்தை டி.பி. சானிடோரியம் என்றயிடத்தில் போஸ்மாஸ்டராக பணியாற்றினார். ( இந்த ஊரை பற்றிய என்னுடைய நினைவலைகளை “நிஜடோலக்பூர்”; என்ற தலைபில் பிளாக வெளியிட்டுள்ளேன்) இந்த ஊரில் கோவில் என்பதே கிடையாது. இந்த காலத்தில் இந்த மருத்துவமணையில் கம்பௌண்டராக பணியாற்றியவர் ஒருவர் வீட்டில் வியாழன்தோறும் சத்யசாய் பஜன் நடைபெறும். சாதாரணமாக பஜனை பாடலை பாடிவிட்டு சத்யசாய் என்று முடிப்பார்கள். எங்களுக்கு வழிபாட்டு தலம்யில்லாத காரணத்தாலும், என் தாய்க்கு பாட்டு பாடுவதில் மிகுந்த ஆர்வமிருந்தகாரணத்தாலும், நானும் அவருடன் இந்த பஜனைக்கு செல்வேன். அந்த கம்பொளண்டர் குடும்பத்தினர், அடிக்கடி இந்த புட்டபர்திக்கு செல்வர். இந்த சூழலே நான் இவரைஅறிந்தது. நாங்கள் தற்சமயம் பயணத்தில் அதிகமாகயீடுபடுவதாலும், பெங்களுரில்லிருந்து 150 கி;மீ. தொலைவுயிருந்தகாரணத்தாலும், நாங்களே டிரைவ்செய்து சென்று வந்தோம். 

பிரசாந்தி நிலையம் 

இவர் பிரத்தியேகமாக உருவாக்கியயிடம் பிரசாந்தி நிலையம் என்ற அழைக்கப்படுகிறது. பெரியயளவில் ஒரு வழிபாட்டு கூடம் ஒன்றுள்ளது. இந்த கூடத்தில் தினமும் காலை 8மணி முதல் 10.15 வரையிலும், மாலை 4.30 முதல் 6.45 மணிவரையிலும் சிறப்ப வழிபாடு நடை பெறுகிறது. ருத்ரம் என்ற சிவன் மந்திரமும், புருஷஷ{க்தம் என்ற பெருமாள் மந்திரமுமம் ஜெபிக்கின்றனர். புpன்னர் அனைத்து இந்து மத கடவுள்களின் பாடல்களை பஜனை வடிவில் பாடுகின்றனர். இதுவே இங்கு சிறப்பாக கருதப்படுகிறது. இந்த சத்தசாய்பாபா உயிருடன்யிருந்தகாலத்தில் இந்த வழிபாட்டில் கலந்துகொள்வார். நாங்கள் 16ஆம் தேதி மாலை இந்த பிரார்தனையில் கலந்துக்கொண்டோம். 

பிறவசதிகள்

தங்கும் அறைகள் டார்மிட்டரி, ஒரு படுக்கை அறை, இரண்டு படுக்கையறை, ஏ.சி. டீலக்ஸ் மற்றும் சாதா டீலக்ஸ் அறைகள் உள்ளன. நாங்கள் ஏ.சி. டீலக்ஸ் ரூம் ஒருநாளைக்கு 1300 ரூ செலுத்தி முன்பதிவுசெய்து கொண்டோம். சாப்பாடு சவுத் இந்தியன், நார்த்இந்தியன், துரித உணவகம் மற்றும் வெஸ்டன் கண்டீன் என்று பல வகை உள்ளன. உள்ளே புகைபடம் எடுக்க அனுமதி மறுக்கப்படுகிறது. ஆனாலும் நான் எடுத்த சில புகைப்படங்களை வெளியிடுகிறேன். எங்களுடன் ஸ்ரீலங்கா பயணித்த சகபயணி நண்பர் எங்களுக்கு இங்கு தங்க மற்றும் இவ்வூரை சுற்றிபாரக்க மிகவும் வழிகாட்டியாயிருந்தார். இதை தவிர சிறிய சிறிய இறைசன்னதிகள், ஆங்காங்கே குடிநீர்வசதி மற்றும் கழிவறை வசதி, கார்பார்கிங் வசதி, இயற்கையில் பொழுதை கழிக்க இயற்கை சுழல் என்றிருக்கிறது, உருவாக்கப்பட்ட இந்த பிரசாந்தி நிலையம். வெளிநாட்டினரின் வருகை மிக அதிகமாகயிருந்தது.  குறிப்பாக இந்த வளாகத்தில் இரண்டுசக்கரம் மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் மிக மெதுவாக, ஹாரன்யில்லாமல் இயக்கப்படுகிறது. இது மிக அமைதியான சுழலை உருவாக்குகிறது.

17.1.26- புட்டபர்தி ஒருநாள் சுற்று.

நாங்கள் காரில் சென்றாலும் எங்கள் பயண அனுபவத்தை அடிப்படையாக கொண்டு ஒரு ஆட்டோ பிடித்து,1. சாய்பாபா பிறந்தயிடம், 2.;ஆஞ்சநேயர் கோவில் 3.சித்ராவதி ஆறு, 4.சாய்பாபவின் பெற்றோர்கள் சமாதி, 5. கல்பவிருட்சம், 6.பஞ்சமுக ஆஞ்சநேயர் 7. கோமாதாகுடில் 8.பிளாணடோரியம், 9. அருங்காட்சியகம் புதியது 10. பழைய அருங்காட்சியகம்  என்று 10 இடங்களுக்கு சென்றோம்.

 புகைப்படம் மற்றும் காணொளி 






















































No comments:

Post a Comment

யாகந்தி குகை (Yaganthi Caves),(ம) அருந்ததி அரண்மனை

  யாகந்தி குகை (Yaganthi Caves),(ம) அருந்ததி அரண்மனை (நாள் - 25.3.2026) அமைவிடம் ஆந்திரபிரதேச மாநிலம், நந்தியால் மாவட்டத்தில் அமைந்துள்ள கு...