சாரங்கபாணி

 சாரங்கபாணி (தரிசனநாள்-24.1.2026)

 அமைவிடம்

கும்பகோணத்தில் அமைந்துள்ள இந்த கோவில், இரண்டு நுழைவாயில்களை கொண்ட இக்கோவில், கும்பேஸ்வரர் கோவில் எதிரில் ஒரு நுழைவாயில் உள்ளது. 

வரலாறு

பிருகு முனிவர் வைகுண்டத்திற்கு திருமாலை தரிசனம் செய்ய செல்கிறார். அப்பொழுது மனைவி இலக்குமியிடம் உரையாடிகொண்டடிருந்ததால், பிருகு முனிவரை கவனிக்கவில்லை. அதனால் கோபம் கொண்ட முனிவர் கோபத்தின் உச்சம் காரணமாக பெருமானை மார்பில் உதைத்துவிடுகிறார். ஆனால் பக்தன் மீது எந்த வருத்தமுமில்லை பெருமானுக்கு, ஆனால் மார்பில் உறைந்த லெஷ்மி கடும்கோபத்தில் பெருமானை பிரிந்து பூவுலகில் பத்மாவதியாக வடிவெடுத்துவாழ்கிறார். பெருமாள் ஸ்ரீநிவாசராக வந்து பத்மாவதி தாயாரை மணம்முடிக்கிறார். மணம்முடித்தவுடன் லெஷ்மிக்கு பழய நினைவு வந்து மீண்டும், கோபம் கொண்டு பெருமனை பிரிகிறார். ஆனால் பிரிய மனமில்லாத பெருமான் இந்த கோவிலில் உள்ள பாதாளத்தில் ஸ்ரீநிவாசராக உள்ளார.; (பாதாளஸ்ரீூநிவாசர் சன்னதியுள்ளது). இதற்கிடையில் பிருகு முனிவர் பெருமானிடம் மன்னிப்பு கேட்கிறார். இந்த பிருகு முனிவர் அடுத்தபிறவியில் ஹேமரிஷி என்ற முனிவராக வந்து பத்மாவதிதாயாரை,  கோமளவல்லி என்ற பெயரில் மகளாக வளர்த்து பெருமானுக்கு மணமுடித்து வைக்கிறார்.  சாரங்கபாணி பெருமான் ஆராவமுதனாக வந்து, கோமளவல்லியை மணமுடிக்கிறார். சாரங்கபாணி என்றால் கையில் வில் வைத்திருப்பவர் என்பது பொருள்.

திவ்யதேசம்

12 ஆழ்வார்களில் மதுரகவி ஆழ்வாரை தவிற ஏனைய 11 ஆழ்வார்களால் மங்களாசாசனம்(பாடப்பட்ட) செய்யப்பட்ட திவ்யதேசம். (என்னால் இந்த தகவல்ளை உறுதிசெய்யமுடியவில்லை)

கோவில் அமைப்பு 

கருவரை உள்ள இடம் தேர் போன்று கல்லினால் வடிவமைக்கப்பட்டது. தேரில் பூட்டிய குதிரை, யானை தேர்சக்கரம் அனைத்தும் கல்லில் மிக அற்புதமாக அமைக்கப்பட்டுள்ளது. இவையனைத்தும் சோழர்காலத்தில் கட்டப்பட்டது. மண்டபம் மற்றும், கோபுரம் நாயக மன்னர்காலத்தில் கட்டப்பட்டது. 

ஆராமுதன் செய்யும் திவசம் (திதி)

நூறாண்டுகளுக்கு முன்பு இக்கோவில் மடப்பள்ளியில் பணி செய்துவந்த ஸ்ரீலெஷ்மி நாராயண சுவாமி என்பவர் பெருமான் மீது மிகுந்த பக்தி கொண்டு, ஊர்மக்களின் ஆதரவுடன் இக்கோவில் கோபுரம் கட்டுவதையே வாழ்நாள் திருப்பணியாக செய்துவந்தார். கோபுர திருப்பணிமுடிந்து இறைவனடி சேர்ந்தார். இல்வாழ்வில் ஈடுபடாமல், இறைபணி செய்து வந்தயிவருக்கு பெருமான் ஆராஅமுதனே ஆண்டு தோறும் தை அம்மாவசையன்று ஒரு மகானக  திவசம் கொடுக்கும் நிகழ்வு இன்றளவும் நடைபெற்ற வருகிறது.

பயண அனுபவம்.

நாங்கள் 24 ஆம் தேதி காலை புதுச்சேரியிலிருந்து கிளம்பி கும்பகோணம் வழியாக எங்களின் குலதெய்வம் கோவில் வரகூர் வெங்கடே பெருமாள் கோவிலில் ஆண்டுதோறும் வசந்த பஞ்சமி (தித்திரை மாதம் பஞ்சமி திதி) அன்று நடை பெறும் தரங்கிணி உற்சவத்தில் இரண்டு நாட்களும் பங்கு கொண்டு, பின்னர் மாயவரத்தில் மூன்று நாட்களுக்கு தங்கி சுற்றியுள்ள தெய்வ திருத்தலங்கள் மற்றும், திருவாரூர் என்று சென்று, மீண்டும் எங்கள் ஊ ர் நல்லிச்சேரிக்கு வந்து, தை வெள்ளிக்கிழமை (30.1.2026) அகிலாண்டேஸவரி அம்மனுக்கு நடை பெற்ற சந்தனகாப்பில் கலந்துகொண்டு, அன்று மாலை பிரதோஷத்தில் இறைவனை வழிபட்டு, (31.1. 2026) மீண்டும், அய்யம்பேட்டை கும்பகோண வழிதடத்திலுள்ள ஐந்து திரு கோவில்களை வழி பட்டு சுபமாக 31.1.மாலை புதுச்சேரி வந்தடைந்தோம். 51 திருகோவில்கள் தரிசனம் செய்தோம்.  தேவார திருத்தலம்36 , திவ்யதேசம்5, 10 பழம்பெரும் ஆலயங்கள. கோவில் சிறப்பு பற்றிய பிளாக் தனி தனியாக வெளியிடுவேன்.

எங்களின் இலக்கு (வைணவம்)

2026 ஆம் ஆண்டுக்குள் 276 தேவார திருத்தலங்களும், 106 (திருபாற்கடல் மற்றும் வைகுண்டம் இரண்டும் இப்பூவுலகில்யில்லை). திவ்ய தேசங்கள் தரிசனம் செய்ய வேண்டும் என்று இலக்கு வைத்துள்ளோம்.  திவ்யதேசத்தில் தமிழ்நாட்டை தவிற பிறமாநிலங்களிள் உள்ள, அதாவது,  நேபாளம், முக்திநாத் உட்பட பிற திவ்ய தேசங்களை தரிசனம் செய்து விட்டோம். எஞ்சிய தமிழ்நாட்டு திருத்தலங்களை தரிசனம் செய்ய வேண்டும். ஓம் நமோ நாராயணா.

எங்களின் இலக்கு (சைவம்)

276 தேவாரதிருத்தலங்களில் கைலாய மானசரோவர் இந்த ஆண்டு  தரிசனம் செய்ய தீர்மானிதுள்ளோம். ஆந்திர மாநிலம் ஸ்ரீசைலத்தை தவிற பிற மாநில திருத்தலங்கள் தரிசனம் செய்விட்டோம். ஸ்ரீலங்கா கோணேஸ்வரம், கேதீஸ்வரம் உட்பட தரிசனம் செய்து விட்டோம். எஞ்சிய தமிழ்நாட்டு திருத்தலங்கள் உள்ளன. ஹர ஹர மகாதேவா.
















No comments:

Post a Comment

யாகந்தி குகை (Yaganthi Caves),(ம) அருந்ததி அரண்மனை

  யாகந்தி குகை (Yaganthi Caves),(ம) அருந்ததி அரண்மனை (நாள் - 25.3.2026) அமைவிடம் ஆந்திரபிரதேச மாநிலம், நந்தியால் மாவட்டத்தில் அமைந்துள்ள கு...