சிறுபுலியூர் தலசயனப்பெருமாள் (தரிசனம்-29.;1.;2026- காலை)
அமைவிடம்
திருவாரூர் மாவட்டம், மாயவரம் -திருவாரூர் வழிதடத்தில் நன்னிலம் முன்பாகவே அமைந்துள்ளது.
தெற்கு நோக்கி சயனகோலத்தில் ஸ்தலசயனபெருமாளாகவும், தாயார் திருமாமகள் நாச்சியாராகவும் பக்தர்களுக்கு அருள்பாலிக்கன்றனர். உற்சவர் கிருபா சமுத்ரபெருமாள். தயார் தயாநாயகி.
திருமங்கையாழ்வாரால் 10 பாடல்கள் மங்களாசாசனம் (பாடப்பட்ட) செய்யபட்ட திருத்தலம்.
அரியும் சிவனும் ஒன்று.
வியாக்ரபாதர் (புலிகால்சித்தர்) சிதம்பரம் நடராஜரின் தாண்டவத்தை காண விரும்பினார். ஆனந்ததாண்டவத்தை தரிசனம் செய்தவுடன். மோட்சம் பெற விரும்பினார். ஓன்பது சிவதலங்களை தரிசனம் செய்து, இத்தல சயனபெருமாளை தரிசனம்செய்தால் மோட்சபிராப்தி கிடைக்கும் என்று சிவன் அருளினார். அவ்வாறிவர் தரிசனம் செய்த “சிவதலங்கள் நவபுலியூர்”; என்று அழைக்கப்படுகிறது. இத்தல பெருமானை வணங்கி மோட்சம் அடைந்தார். இதுவே இத்தலபுராணம்.
கோவில் சிறப்பு
1.இத்லத்தில் மிக சிறியவடிவில் பொருமாள் புஜங்கசயனத்திலிருப்பார். திருமங்கையாழ்வார் தரிசனம் செய்து, மனதளவில் குறைப்பட்டுக்கொண்டார். உடனே பெருமான் அவரது குறைதீர திருகண்ணமங்கையில் மிகபெரிய உருவை காண செய்தார்.
(திருகண்ணமங்கை, திருகண்ணபுரம்) தரிசனத்திற்காக பெருமானை வணங்கினோம்);.
2. இங்கு பூமிக்கு கீழ் கருடன் சன்னதியும், மிக உயரத்தில் ஆதிசேஷன் சன்னதியும் உள்ளது.
3. கருவறையில், பெருமான் ஸ்ரீதேவி, பூதேவியுடனும், வியாக்ரபாதகர், வியாசர் மற்றும் கங்கையுடன் காட்சிதருகிறார்.
4.திருவாய்மொழி மண்டபம் ஒன்றுள்ளது.
சிறுபுலியூர் ஸ்ரீகங்காளநாதர் (தரிசனம் 29.1.2026-காலை)
எங்களின் தரிசனம்
நாங்கள் பெருமாளை தரிசனம் செய்துவிட்டு, நவபுலியூர் கோவில்களில் ஒன்றான இத்தலத்தை தேடி சென்றோம். இந்தசிவாலயம் பழமையான ஒன்கத்தான் ஆனால் மிகசிறியதாகயிருந்தது. வழிபடும்நேரத்தில் இதன் பழமையை எங்களால் உணரமுடிந்தது. ஆனால்யிக்கோவில்லருகில் உள்ள நாடகுடி என்ற சிறிய கிராமத்தில் உள்ள கோவில்தான் புலியூர் தலம் என்றும் கூறுகின்றனர். நாங்கள் புலியூர்தலங்கள் தரிசனம் செய்யும் சமயம்யிக்கோவிலுக்கு சென்று வழிபட்டு விட்டு என்னுடைய விரிவான வலைபதிலை வெளியிடுகிறேன்.
பயண அனுபவம்.
நாங்கள் 24 ஆம் தேதி காலை புதுச்சேரியிலிருந்து கிளம்பி கும்பகோணம் வழியாக எங்களின் குலதெய்வம் கோவில் வரகூர் வெங்கடே பெருமாள் கோவிலில் ஆண்டுதோறும் வசந்த பஞ்சமி (தித்திரை மாதம் பஞ்சமி திதி) அன்று நடை பெறும் தரங்கிணி உற்சவத்தில் இரண்டு நாட்களும் பங்கு கொண்டு, பின்னர் மாயவத்தில் மூன்று நாட்களுக்கு தங்கி சுற்றியுள்ள தெய்வ திருதலங்கள் மற்றும், திருவாரூர் என்று சென்று, மீண்டும் எங்கள் ஊர் நல்லிச்சேரிக்கு வந்து, தை வெள்ளிக்கிழமை (30.1.2026) அகிலாண்டேஸவரி அம்மனுக்கு நடை பெற்ற சந்தனகாப்பில் கலந்துகொண்டு, அன்று மாலை பிரதோஷத்தில் இறைவனை வழிபட்டு, (31.1. 2026) மீண்டும், அய்யம்பேட்டை கும்பகோண வழிதடத்திலுள்ள ஐந்து திரு கோவில்களை வழி பட்டு சுபமாக 31.1.மாலை புதுச்சேரி வந்தடைந்தோம். 51 திருகோவில்கள் தரிசனம் செய்தோம். தேவார திருத்தலம்36 , திவ்யதேசம்5, 10 பழம்பெரும் ஆலயங்கள. கோவில் சிறப்பு பற்றிய பிளாக் தனி தனியாக வெளியிடுவேன்.
எங்களின் இலக்கு (வைணவம்)
2026 ஆம் ஆண்டுக்குள் 276 தேவார திருத்தலங்களும், 106 (திருபாற்கடல் மற்றும் வைகுண்டம் இரண்டும் இப்பூவுலகில்யில்லை). திவ்ய தேசங்கள் தரிசனம் செய்ய வேண்டும் என்று இலக்கு வைத்துள்ளோம். திவ்யதேசத்தில் தமிழ்நாட்டை தவிற பிறமாநிலங்களில்லுள்ள, அதாவது, நேபாளம், முக்திநாத் உட்பட பிற திவ்ய தேசங்களை தரிசனம் செய்து விட்டோம். எஞ்சிய தமிழ்நாட்டு திருத்தலங்களை தரிசனம் செய்ய வேண்டும். ஓம் நமோ நாராயணா.
எங்களின் இலக்கு (சைவம்)
276 தேவாரதிருத்தலங்களில் கைலாய மானசரோவர் இந்த ஆண்டு தரிசனம் செய்ய தீர்மானித்துள்ளோம். ஆந்திர மாநிலம் ஸ்ரீசைலத்தை தவிற பிற மாநில திருத்தலங்கள் தரிசனம் செய்விட்டோம். ஸ்ரீலங்கா கோணேஸ்வரம், கேதீஸ்வரம் உட்பட தரிசனம் செய்து விட்டோம். எஞ்சிய தமிழ்நாட்டு திருத்தலங்கள் உள்ளன. ஹர ஹர மகாதேவா.











No comments:
Post a Comment