இலுப்பைபட்டு நீலகண்டேஸ்வரர்.

 இலுப்பைபட்டு நீலகண்டேஸ்வரர். (தரிசனம்-28.1.2026-மாலை)

அமைவிடம்.

மயிலாடுதுறை மாவட்டம், மணல்மேடு என்ற ஊர் அருகில் அமைந்துள்ளது. பழையபெயர் பழமண்ணிபடிக்கரை, மற்றும் திருமண்ணிபடிக்கரை என்ற பெயர்களில் திகழ்கிறது.

சுந்தரரால் பாடப்பெற்ற காவிரி வடகரையில் 30வது தலம்.  

கோவில் சிறப்பு

பஞ்ச லிங்க ஷேத்ரமாகும். 

தர்மன் - நீலகண்டேஸ்வரர்

பீமன் - மகதீஸ்வரர்

அரச்சுணன் - படிக்கரைநாதர்

சகாதேவன் - முக்தீஸ்வரர்.

நகுலன் - பரமேஸ்வரர்.

 இவர்கள் சித்ராபௌர்ணமி அன்று தரிசனம் செய்ததாக கூறப்படுகிறது. திருவாடுதுறை ஆதினத்தின் கோவில். இரண்டு விநாயகர்கள் உள்ளனர். 1. வலம்புரிவிநாயகர் 2. நடனவினாயகர். திரௌபதி வழிபட்டது. வலம்புரி விநாயகர். 

தலபுராணம் 

பஞ்சபாணடவர்கள் அவர்களின் வனவாச காலத்தில் இந்த ஊரில் தங்கியிருந்தசமயம் வழிபாட்டிற்கு இலுப்பை மரத்திலிருந்து எண்ணெய் எடுத்து, விளக்கேற்றி வழிபட்ட நேரத்தில் சிவபெருமான் ஐவருக்கும் ஐந்து லிங்கமாக காட்சியளித்ததலம். 

சுந்தரரால் பாடப்பெற்ற தலம். மூன்றுநிலை ராஜகோபுத்தைகொண்ட கோவில். பிரகாரத்தில் பீமன் மற்றும் நகுலம் பூஜித்த சன்னதிகள் உள்ளன. படிமேல் சென்று நீலகண்டேஸ்வரர் சன்னதியும், சகாதேவன் வழிபட்ட சிவலிங்க சன்னதியுள்ளது. அம்மன் சன்னதியருகில் ஒரு சிவ சன்னதி அமைந்துள்ளது.

எங்கள் அனுபவம் 

நாங்கள் இரவு 7மணிக்கு சென்றிருப்போம். மணல்மேடு என்று பெயர் பலகையை பார்தவுடன், வரைபடத்தில் சிவன் கோவில் என்று தேடி சென்றோம். பிறகுதான் தெரிந்தது மணல்மேட்டில் உள்ள கோவில் நாகநாதர் கோவிலென்றும். இதைதவிற டி.மணல்மேடு என்று ஒரு ஊர் உள்ளது. இத்தல இறைவன் பெயர் மார்கண்டேயர். இந்த இலுப்பைபட்டு கோவில் அழிவுநிலையில்லிருந்தது. இக்கோவிலுக்கு சரியான அல்லது முறையான அர்சகர்யில்லை என்பதை பின்னர் கேள்விபட்டோம். இக்கோவில் அர்சக பரம்பரையினர் வெளிநாட்டு கோவிலில் பணிபுரிகர்pறார் என்றும், அறிந்து கொண்டோம். மிகவும் சிறிய விளக்கொளியில் இக்கோவிலை தரிசனம் செய்தோம். பிராகாரத்தில் உள்ள சன்னதிகளை தரிசனம் செய்வது சற்ற அச்சத்தை கொடுத்தது. என்கனவரின் உற்சாகத்தால் மட்டுமே கைபேசி விளக்கொளியை பயன்படுத்தி தரிசனம் செய்தோம். கோவில் பாதுகாவலர்வேறு எங்களை சீக்கரம் தரிசனம் செய்யுங்கள் என்று விரட்டி கொண்டிருந்தார். மிகஅர்புதமான கோவில் அழிவுநிலையில் உள்ளது வருத்தமளிக்க செய்தது. ஆதினங்கள் இக்கோவில் சிறக்க முயற்ச்சிபர்களா? தெருக்களில் கோவிலை தேடுவதும் கடினமாகயிருந்தது. வரைபடம் உங்கள் யிடத்தை அடைந்து விட்டீர்கள் என்று கூறுகிறது, ஆனால் தேடுவது சற்று கடினமாகதான்யிருந்தது. இரவு நாங்கள் எடுத்த காணொளியை பதிவிடுகிறேன். 

பயண அனுபவம்.

நாங்கள் 24 ஆம் தேதி காலை புதுச்சேரியிலிருந்து கிளம்பி கும்பகோணம் வழியாக எங்களின் குலதெய்வம் கோவில் வரகூர் வெங்கடே பெருமாள் கோவிலில் ஆண்டுதோறும் வசந்த பஞ்சமி (தித்திரை மாதம் பஞ்சமி திதி) அன்று நடை பெறும் தரங்கிணி உற்சவத்தில் இரண்டு நாட்களும் பங்கு கொண்டு, பின்னர் மாயவத்தில் மூன்று நாட்களுக்கு தங்கி சுற்றியுள்ள தெய்வ திருதலங்கள் மற்றும், திருவாரூர் என்று சென்று, மீண்டும் எங்கள் ஊர் நல்லிச்சேரிக்கு வந்து, தை வெள்ளிக்கிழமை (30.1.2026) அகிலாண்டேஸவரி அம்மனுக்கு நடை பெற்ற சந்தனகாப்பில் கலந்துகொண்டு, அன்று மாலை பிரதோஷத்தில் இறைவனை வழிபட்டு, (31.1. 2026) மீண்டும், அய்யம்பேட்டை கும்பகோண வழிதடத்திலுள்ள ஐந்து திரு கோவில்களை வழி பட்டு சுபமாக 31.1.மாலை புதுச்சேரி வந்தடைந்தோம். 51 திருகோவில்கள் தரிசனம் செய்தோம்.  தேவார திருத்தலம்36 , திவ்யதேசம்5, 10 பழம்பெரும் ஆலயங்கள. கோவில் சிறப்பு பற்றிய பிளாக் தனி தனியாக வெளியிடுவேன்.

எங்களின் இலக்கு (வைணவம்)

2026 ஆம் ஆண்டுக்குள் 276 தேவார திருத்தலங்களும், 106 (திருபாற்கடல் மற்றும் வைகுண்டம் இரண்டும் இப்பூவுலகில்யில்லை). திவ்ய தேசங்கள் தரிசனம் செய்ய வேண்டும் என்று இலக்கு வைத்துள்ளோம்.  திவ்யதேசத்தில் தமிழ்நாட்டை தவிற பிறமாநிலங்களில்லுள்ள, அதாவது,  நேபாளம், முக்திநாத் உட்பட பிற திவ்ய தேசங்களை தரிசனம் செய்து விட்டோம். எஞ்சிய தமிழ்நாட்டு திருத்தலங்களை தரிசனம் செய்ய வேண்டும். ஓம் நமோ நாராயணா.

எங்களின் இலக்கு (சைவம்)

276 தேவாரதிருத்தலங்களில் கைலாய மானசரோவர் இந்த ஆண்டு  தரிசனம் செய்ய தீர்மானித்துள்ளோம். ஆந்திர மாநிலம் ஸ்ரீசைலத்தை தவிற பிற மாநில திருத்தலங்கள் தரிசனம் செய்விட்டோம். ஸ்ரீலங்கா கோணேஸ்வரம், கேதீஸ்வரம் உட்பட தரிசனம் செய்து விட்டோம். எஞ்சிய தமிழ்நாட்டு திருத்தலங்கள் உள்ளன. ஹர ஹர மகாதேவா.

















No comments:

Post a Comment

யாகந்தி குகை (Yaganthi Caves),(ம) அருந்ததி அரண்மனை

  யாகந்தி குகை (Yaganthi Caves),(ம) அருந்ததி அரண்மனை (நாள் - 25.3.2026) அமைவிடம் ஆந்திரபிரதேச மாநிலம், நந்தியால் மாவட்டத்தில் அமைந்துள்ள கு...