சிக்க திருப்பதி (தரிசனநாள் 27.4.2025)
அமைவிடம்
கோலார் மாவட்டம், மாலூர் தாலுக்காவில் அமைந்துள்ளது. சர்ஜாபூர் சென்று அங்கிருந்து செல்லவேண்டும். அல்லது மார்தஹள்ளியில் இருந்து ஹோப்பாம் சன்ன சந்திரா வழியாகவும் செல்லலாம். நாங்கள் ஹோப்பாமிலிருந்து சென்றோம்.
வரலாறு
ஸ்ரீதேவி பூதேவி சமேத பிரசன்ன வெங்கடேச பெருமாள். யுகங்களா இங்கிருந்து மக்களுக்கு அருள்பாலிக்கிறார். துவாபரா யுகத்தில் மகாபாரத போர் காலத்தில் பாண்டவர்களும், கௌரவர்களும் மாறி மாறி யாகம் செய்கின்;றனர். இதன் காரணமாக அக்னியில் பல பொருட்களையும் சேர்த்ததால், அக்னி தேவன் அவற்றை ஏற்று சரிமானம் செய்ய முடியாமல் வயிற்று உபாதையால் துன்பமுற்று பெருமாளை சரண்அடைகிறார். அவர் கர்நாடகாவில் கண்டவா பகுதியி;ல் உள்ள வனத்தில் மருந்து இருப்பதாக தெரிவிக்கிறார். அக்னிதேவன், மூலிகை செடி எது என்று தெரியாமல் அனைத்தையும் உட்கொள்கிறார். திருப்பதி போன்று இந்த இடத்திலும பெருமாள் மக்களுக்கு அருள்பாலிக்கவருவார் என்பதை அறிந்து இங்கு பெருமாள் தரிசனத்திற்காக இந்த காட்டில், நாகர்களின் மன்னனான தஷகா வின் குடும்பத்தினர், தவம் செய்து வருகின்றனர். அக்னியின் செயலால் “தஷகா”என்ற பாம்பின் குடும்பத்தினர் பலர் இறந்தனர். தஷகா உடலில் அதிகமான தீகாயம் ஏற்பட்டது. இதனால் கோபம் அடைந்த தஷகா, அக்னிதேவன், பொலிவிழந்து, வாழ சபிக்கிறான். இந்த சாபத்தை அறிந்து அக்னிதேவன் மீண்டும்;, மகாவிஷ்ணுவை சரன்அடைகிறான். மீண்டு;ம்; மகாவிஷ்ணு அக்னி தேவனுக்கு அருள்புரிகிறார். இதுமட்டுமல்லாது, திருப்பதி செல்லும் பக்தர்கள் இந்த வனம் வழியாக செல்லும் சமயம் நாகங்களை அழிக்கின்றனர் என்றும், அவர்களிடம் இருந்து காக்க இந்த வனத்தில் திருமால் எழுந்தருளி நாகங்களை காக்க வேண்டும் என்பதற்காகவும். இத்தலத்தில் இறைவன் எழுந்தருளினார் என்பதே இத்தல புராணமாகும்.
மன்னர்களின் பங்கு
கர்நாடகாவை, சோழர்கள், பல்லவர்கள், கடம்பர்கள், ஹொசாலயர்கள், விஜயநகர பேரரசர்கள் ஆட்சி செய்து பல கோவில்களை கட்டியும், புனரமைப்பும் செய்திருக்கிறார்கள். இக்கோவில் சோழர்கால பாணியில் அமைந்துள்ளது.
No comments:
Post a Comment