திருபைஞ்சீலி

 திருபைஞ்சீலி (தரிசனம் -11.3.25)

 அமைவிடம்

தமிழ்நாடு, திருச்சி மாவட்டத்தில் அமைந்துள்ளது. திருச்சியில் இருந்து, 25 கி.மீ.. திருவள்ளறைக்கு மிக அருகில் உள்ளது.

கோவில் சிறப்பு 

ஐந்து பிரகாரம், மொட்டை கோபுரம், மற்றும், ராவணன் (ராவணன் இந்த கோபுரம் வழியாகவே வந்து இத்தல சிவபெருமானை வணங்கினாராம்.) கோபுரம் என்ற நுழைவாயில்களை கொண்டது. ஏழு தீர்த்தங்களை கொண்ட மிக பெரிய கோவில். தேவாரபாடல்பெற்ற தலம்.

நீள்நெடுங்கண்நாயகி மற்றும் விசாலாட்சி என்று இரண்டு அம்மன்கள் உள்ளனர்.

சப்த கன்னிகைகளே கல்வாழைகளாக உள்ளனர். இந்த வாழைகளுக்கு திருமண தடை நீங்க தாலிகட்டி வழிபாடுசெய்கின்றனர்.

இத்தலத்தின் பிற பெயர்கள்.

தென் கைலாயம், ஞீலிவனம், கதலிவனம், அரம்பைவனம், விமலாரண்யம், தரளகிரி, சுவேதகிரி,வியாக்ரபுரி, மேலைச்சிதம்பரம்.

எமதர்மன் சன்னதி.

திருகடையூரில் காலால் சிவபெருமான் உதைத்தன் காரணமாக உயிர் இழந்தான் எமதர்மன். இதன் காரணமாக உலகில் பிறப்பு மட்டுமே இருந்தது. இறப்பு இல்லாததன் காரணமாக பூமியின் பாரம் அதிகமானது. அதனால் இத்தலத்தில் எமதர்னனுக்கு மீண்டும் உயிர் கொடுத்தார் சிவபெருமான். இதன்காரணமாக இக்கோவிலில் எமதர்ராஜனுக்கு தனி சன்னதியுள்ளது.

திருகட்டமுது பெருவிழா

அப்பர் பெருமான், மலைக்கோட்டை தாயுமானவர், திருவானைக்கா ஜெம்புகேஸ்வரர், திருப்பராய்துறை தாருகாவனேஸ்வரர். இவர்கனை தரிசனம் செய்து விட்டு மிகுந்த பசி மற்றும் அதிக வெய்யிலினால் உடல் சோர்வு மற்றும் தாகத்துடன் வந்துகொண்டிருக்கிறார், திபைஞ்சீலிக்கு. இதை பார்த்த சிவபெருமான் ஒரு அந்தணர் வடிவில் வந்து, சாப்பிடுவதற்கு உணவைகொண்டுவந்து, வெய்யலுக்காக ஒரு பெரிய மரத்ததை உண்டு செய்து, பெரிய குளம் ஒன்றையும் உருவாக்கி, அப்பரை அமரச்செய்து உணவு கொடுக்கிறார். அப்பர் அந்த அந்தணரிடம் திருபைஞ்சீலி எப்படி செல்வது என்று கேட்க, அவரே கோவில் வரை அவரை அழைத்து வந்து, பின் அம்பிகையுடன், ரிஷபவாகனத்துடனும் காட்சி தருகிறார் இத்தலத்தில். இந்த நிகழ்வு சித்திரை மாதம் அவிட்ட நட்ஷத்திரம் அன்று நடை பெற்றது. இந்த நாளையே திருகட்டமுது பெருவிழாவாக இக்கோவிலில் கொண்டாடுகின்றனர்.

இதன் அடிப்படையிலேயே சோற்றுடை ஈஸ்வரன் என்ற சன்னதியுள்ளது. 

பங்குனி மற்றும் புரட்டாசி மாதம் 6,7,8 ஆகிய தேதிகளில் சூரியனின் ஒளிக்கதிர் இறைவன் மீது விழுகிறது.

நவகிரகாமாக உள்ள ஒன்பது படிகள்.

தரிசன அனுபவம்.

 நாங்கள் இரவு ஏமுமணிக்கு மேல் இத்தலத்தை தரிசனம் செய்தோம். மழைவேறு அதிகமாக இருந்தது. இதன் காரணமாக நாங்கள் ஜந்து பிரகாரமும் செல்லவில்லை. எமதர்மராஜன் சன்னதி இரவில் மூடிவிடுகின்றனர். கல்வாழையை தரினசம் செய்யஇயலவில்லை. பிரதோஷகால அபிஷேகம் பார்கும் பாக்கியம் பெற்றோம். மீண்டும் இக்கோவிலை தரிசனம் செய்யும் பாக்கியம் பெற இறைவனை வேண்டுகிறேன். 

இக்கோவில் புகைப்படதொகுப்பு.


Thanks to Google.

























No comments:

Post a Comment

சப்தமங்கைதலங்கள்.

  சப்தமங்கைதலங்கள். (தரிசனம்-13.7.2025)  அமைவிடம் கும்பகோணம் - தஞ்சாவூர் செல்லும் வழியில் உள்ள ஐய்யம்பேட்டை என்ற ஊரை சுற்றி அமைந்துள்ளது. ச...