திருவெள்ளரை செந்தாமரைக்கண்ணன். (தரிசனம்-11.3.2025)
அமைவிடம்.
திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர் வட்டத்தில் அமைந்துள்ளது. திருச்சி – துறையூர் செல்லும் வழிதடத்தில் 20 கி.மீ. பயணித்து இந்த கோவிலை அடைய வேண்டும்.
திவ்யதேசம்.
பெரியாழ்வார் மற்றும் திருமங்கையாழ்வாரால் மங்களாசாசனம் செய்யபட்டது இந்த கோவில். திருமங்கையாழ்வார் 24 பாசுரங்களும், பெரியாழ்வாரின் திருவாய்மொழி 192 பாடல்களும் பாடப்பெற்ற இடம்.
இந்திரனோடு பரமன் ஈசனின்மையவரெல்லாம்
மந்திர மாமலர்கொண்டு மறைந்தவராய்வந்து நின்றார்.
சந்திரன் மாளிகைசேரும் சதுரர்கள் வெள்ளரை நின்றாய்
அந்தியம் போதிவாகும் அழகனே காப்பிடவாராய். (திரு வாய்மொழி)
கோவில் காலம்
பல்லவமன்னன் நந்திவர்மனால் கி.பி 805 இந்த கோவில் கட்டப்பட்டது. பின் சோழர்கள் விஜயநகர பேரரசின் நாயகர்கள் இவர்களால் மேம்படுத்தப்பட்டது. இந்த தலம் ஆதிதிருவரங்கம் கோவிலைவிட பழமையானது. இதன் காரணமாக ஆதிதிருவள்ளறை என்று அழைக்கப்படுகிறது.
இறைவன் புண்டரிகாட்சபெருமாள் பெரிய உருவத்துடன் நின்ற கோலத்தில் காட்சி தருகிறார். வலதுபக்கம் சூரியன் இடதுபக்கம் சந்திரன் நின்றபடி சாமரம் வீசுகின்றனர். வலது பக்கம் கருடனும் இடதுபக்கம் ஆதிஷேஷனும் மனித உருவில் நின்று வணங்குகின்றனர். வலதுபக்கம் அமர்ந்த நிலையில் மார்கண்டேய மகரிஷி, மோட்ஷம் வேண்டி தவம்புரிகிறார். இடதுபுறம் பூமாதேவி தாயார் உலக நம்மைக்காக தவம் புரிகிறார்.
தாயார் சிறப்பு
இந்த தலத்தில் அனைத்து விழாக்களிலும் தாயார் முன்செல்ல பெருமாள் பின் தொடர்ந்து செல்வார். (ஆதிபத்யம்) முன்னுரிமை அல்லது பிரதானம் தாயார்தான். நாழி கேட்டான் வாயில் என்று ஒரு இடம் இக்கோவிலில் உள்ளது. பெருமாள்வர தாமதமான காரணத்தை தாயாரிடம் கூறியபிறகுதான் செல்லவேண்டும்.
கோவில் கட்டுமான சிறப்பு.
உத்ராயணம், தட்சிணாயனம் என்று இரண்டுவாயில்கள் உள்ளன.
18படிகள் - பகவத்கீதை அத்யாயங்கள்.
4படிகள் - வேதங்கள்.
5படிகள் - பஞ்சபூதங்கள்.
8படிகள் - அஷ்டாக்ஷரமந்திரம் (ஓம் நமோநாராயணா)
24படிகள்- காயத்ரிமந்திரத்தின் எழுத்துக்களின் எண்ணிக்கைகள் இந்த அனைத்து படிகளையும் கடந்தபின்பே பெருமாளை தரிசனம் செய்ய முடியும்.
எங்கள் தரிசன அனுபவம்.
நான் புகைபடம் எடுத்த சில படிகளை மட்டும் வெளியிடுகிறேன்.
18 படிகள் கட்டுமான வேலையில் உள்ளது. சில படிகளை புகைப்பட எடுக்க முடியவில்லை. நல்ல மழைபெய்ததே காரணம். ஸ்வஸ்திக் குளம் பார்க்க முடியாமல் போனதற்கும் இதுவே காரணம். பகல்பொழுதாக இருந்தால் எப்படியாவது குளத்தில் கால் நனைத்து புரோஷனம் செய்து கொண்டிருப்போம். என் சிறுவயதில் என்பெற்றோருடன் இந்த கோவிலை தரிசனம் செய்திருக்கிறேன். ஆனால் ஸ்வஸ்திக் குளத்தை தவிர வேறு எதுவும் நினைவில் இல்லை. இதை மாமியார் மருமகள் குளம் என்று அழைப்பார்கள். ஏன் என்றால் ஒரு படித்துறையில் உள்ளவர்களை வேறு படித்துறையில் உள்ளவர்களை பார்க்கமுடியாது.
திருவெள்ளறை பெயர்காரணம்.
இக்கோவில் பெரிய கோட்டைக்குள் அமைந்திருக்கும் அமைப்பில் இருக்கும். கோவில் கட்டமைபிலுள்ள பாறைகள் வெண்மையான பாறைகள், இதன் காரணமாகவே வெள்ளறை என்ற பெயர் பெற்றது. திரு என்பது உயர்வானது என்பதற்கான ஒரு அடைமொழி.
இக்கோவில் புகைப்படதொகுப்பு.
![]() |
Thanks to google |
No comments:
Post a Comment