உத்தமர்கோவில் (தரிசனம் - 11.3.2025).
அடைவிடம்
திருச்சி மாவட்டம், ஸ்ரீரங்கத்தில் இருந்து, 4கி.மீ தொலைவில் உள்ளது.
பெயரும் அதன் காரணங்களும்
உத்தமர்கோவில் (உத்தமனான இறைவன் அமர்ந்த இடம்.) பிட்ஷாண்டார் கோவில், ( சிவன் பிட்சாடனராக அருள்பாலிப்பதால்) திருக்கரம்பனூர் (கடம்ப மரமாக விஷ்ணு தோன்றிய இடம்).என்று பல பெயர்களை கொண்டது.
இந்த ஊர்.
புருஷோத்தமபெருமாள் பூர்ணவல்லி தாயார், பிட்சாடணர் சௌந்தர்யநாயகி, பிரம்மா சரஸ்வதி என்று மூம்மூர்திகளுக்கும், இங்கு தனி தனி சன்னதிகள் அமைந்துள்ளது.
திவ்யதேசம்.
திருமங்கையாழ்வாரால் மங்களாசாசம் செய்யப்பட்டது. திருவாய்மொழி;
பேரானை குறுங்குடியெம் பெருமானை
திருத்தண்கால்
ஊரானை கரம்பனூர் உத்தமனை
முத்திலங்கு காரார்தின் கடலேழு
மலையேழிவ்வுலகேழுண்டும் ஆராதென்றிருந்தானை கண்டது தென்னரங்கத்தே
.
தேவாரபாடல்பெற்ற தலம்.
சுந்தரர், அப்பர், ஞானசம்மந்தர் இவர்களின் பாடல் தொகுப்பே, தேவாரம் என்று அழைக்கப்படுகிறது. இவ்வாறு 274 தலங்கள் உள்ளன. இவற்றில் சில வைப்புத்தலங்கள் என்று அழைக்கப்படுகிறது. உதாரணமாக ஸ்ரீலங்காவில் உள்ள கேதீஸ்வரம் மற்றும் கோனேஸ்வம் இவற்றை வைப்புத்தலங்கள் என்று கூறுவர். ஒரு இடத்தில் இருந்து வேறோரு தல இறைவனை மனதில் இருத்தி இங்கிருந்தே பாடுவது வைப்புத்தலம் எனப்படும். அவ்வகையான வைப்புத்தலமே இந்த உத்தமர்கோவில். திருபைஞிசீலியில்லிருந்தே இத்தலஇறைவனை பாடியுள்ளனர்.
சிவபிரகாச சுவாமிகள்.- பிட்சாடனர் நவமணிமாலை என்று இத்தலத்தில் ஒரு பாடல் பாடியுள்ளார் அவை மிகவும் புகழ்பெற்றது
.
உத்தமர்கோவிலும் நானும்
என் அம்மாவின் பிறந்த வீடு இந்த ஊர். நான் இங்கு தான் பிறந்தேன். தாத்தாவும் பாட்டியும் என் மாமாவுடன் மும்பைக்கு குடியேறிய பிறகு, என் பெரியம்மா (அம்மாவின் அக்கா) இந்த வீட்டில் வசித்துவந்தார். அந்த காலகட்டத்தில் நான் அங்கு பல முறை உத்தமர்கோவில் சென்று, பெருமானை தரிசனம் செய்துள்ளேன் குழந்தை பருவத்தில் இந்த பெருமாளை தரிசனம் செய்ய மிகவும் பயப்படுவேன். கைகளால் முகத்தை மூடிக்கொண்டு விரல் ஓட்டைவழியாக தான் பாரப்பேன். பிற சன்னதிகள் என் நினைவில் இல்லை. இன்றுவரை கிடந்தகோலத்தில் உள்ள நெடிய பெருமாளை தரிசனம் செய்தால், இந்த புருஷோத்தபெருமாளே என் நினைவில் இருப்பார்.
இக்கோவில் படத்தொகுப்பு
No comments:
Post a Comment