ஆச்சார்யா அத்யயன் யோசனா (நல்லாசிரியர் பயிற்சி திட்டம்)
திட்டம் பற்றிய சிறிய விளக்கம். ( Date 10,11,12.5.2025)
“புனருத்தான் வித்யாபீடம்” என்ற கல்வியியல் அமைப்பு குஜராத் மாநிலம் அகமதாபாத்தை தலமையகமாக கொண்டு இயங்குகிறது. இதை ஒரு பல்கலைக்கழகம் என்றும் கூறுகின்றனர். இந்த கல்வி நிறுவனம் தன்னாட்சியாக விளங்குகிறது.
இந்துமதி காட்தரே என்பவரே குலபதியாக திகழ்கிறார். அதாவது, இவரே இந்த பாடத்திட்டத்தை உருவாக்கியவர்.
நம் பாரதநாட்டின், பண்டையகால நிலை போன்று “குருகுல “கல்வியை அமைப்பது. பழமைகாலம் போன்று கல்வி என்பது பண்பு மற்றும் ஞானத்தை தருவதான கட்டமைப்பாக உள்ள கல்வி திட்டம். பொருள் ஈட்டுவதை பிரதானமாக கொள்ளாத கல்விமுறை. மாணவர்களிடம் கட்டணம் வசூலிக்காத முறை.
பயிற்சி பரிமாணம்
இந்த ஆசிரியர் பயிற்சியானது, கீழ்கண்ட செயல் முறைகளை அடிப்படையாக கொண்டு கற்கின்றனர். அவையாவன, 1. சுயமாக கற்றல், 2. குழுவாக விவாதம் செய்தல், 3. கலந்துரையாடுதல், 4. கருத்துரை, 5.செயல்திட்டம், 6.மதிப்பீடு செய்தல் போன்றவை.
பயிற்சி தொடக்கநாள் சிறப்பு.
வித்யாபீடம் ஸ்தாபக தினமான வியாசபூர்ணிமா அன்று குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் ஐந்து நாட்கள் பயிற்ச்சியுடன் தொடங்குகின்றனர். இதற்கு முன் மூன்று நாட்கள் முன்முயற்சியாக நேரடி பயிற்சிமுகாம். நடத்துகின்றனர்.
ஆசிரியர் பயிற்சி திட்டத்தின் பிற முக்கிய செய்திகள்
விளக்க புத்தகங்கள் ஐந்து, விதிமுறை புத்தகங்கள் மூன்று, இரண்டு தொகுப்பு புத்தகங்கள் என்று மொத்தம் பத்து புத்தகங்கள் முதலாம் ஆண்டு படிக்க வேண்டும்.
கால அளவு ஐந்து ஆண்டுகள் என்று இந்த வித்யாபீடம் நிர்ணயம் செய்திருந்தாலும், மாணவரின் திறன் மற்றும் ஆர்வம் இவையே கால அளவை நிர்ணயம் செய்யும் என்ற நடை முறையும் உள்ளதாக இந்த வித்தாயாபீடம், சொல்கிறது.
நான் இந்த நல்லாசிரியர் பயிற்சி திட்டத்தில் இணைந்து படிக்க திட்டமிட்டு மூன்றுநாள் நேரடி பயிற்சி முகாமிற்கு சென்றிருந்தேன்.
நான் எவ்வாறு இந்த திட்டத்ததை அறிந்தேன்.
வித்ய பாரதியின் பாடநூல்களில் ஒன்றான "பாரதிய பண்பாட்டு பாட நூல்" என்ற புத்தகத்தை கொண்டு, திருநெல்வேலியை அடிப்படையாக கொண்டு பாரதிய பண்பாட்டு கல்வி என்ற ஒரு இணையவழி கல்வி நடை பெறுகிறது. இந்த கல்வியை கற்பவர்கள் மற்றும் கற்பிப்பவர்கள் இருவருமே எந்த பணபரிவர்தனையும் இல்லாமல் கற்கின்றனர் (அல்லது ) கற்பிக்கின்றனர். நான் கடந்த மூன்று ஆண்டுகளாக இந்த பாட திட்டத்தை கற்பிக்கும் ஆசிரியராக பணியாற்றுகின்றேன். இவர்கள் மூலம் நான் அறிந்ததே இந்த நல்லாசிரியர் பயிற்சி வகுப்பு.
பயிற்சி முகாம் அனுபவம்.
சென்னை அருகில் உள்ள ஸ்ரீபெரம்புதார் என்ற இடத்தில் அமைந்துள்ள, சுவாமி விவேகானந்தா வித்யாபீடம் (C.B.S.E)என்ற பள்ளியில் நடைப்பெற்றது. இந்த பயிற்சி வகுப்பில் 24 நபர்கள் பங்கு பெற்றனர். பங்கு பெற்றவர்களில் பெரும்பாலானோர், பள்ளி ஆசிரியர்கள் மற்றும் பள்ளியின் தாளாளர்கள். குறிப்பாக வித்யபாரதி கல்வி திட்டத்தில் இணைந்து (Affiliated Vidya Bhatathi) பள்ளி நடத்துபவர்கள். வித்ய பாரதி கல்வியை நேரடியாக பள்ளிகளுக்கு கொண்டு செல்பவர்கள். நானும் இதன் அடிப்படையில் சில கல்வி நிறுவணங்களுக்கு சென்று அசிரியராக பணியாற்றிருக்கிறேன். ஆனால் இவர்கள் வித்யபாரதி என்ற முத்திரையை பயன் படுத்தி கற்பிக்கின்றனர்.
பங்கு பெற்ற பயிற்ச்சியாளர்களை நான்கு பிரிவாக பிரித்து, சமயல், துப்புரவு மற்றும் சிறிய சிறிய பணிகளை செய்ய அட்டவனையிட்டனர்.
ஆதிகாலை 4 மணிக்கே எழுந்து, நாங்கள் மூன்று நாட்களும் முதலில் “சமித்தாதானம் “செய்தோம்.
பின்னர் அவரவர்களுக்கு கொடுக்கப்பட்ட பணிகளை முடித்து வகுப்புகளுக்கு சென்று கற்றலில் ஈடுபட்டோம். திரு.மனுஜி மற்றும் திரு. முனித்ஜி, தாய் ஜி இந்துமதி ஆகியோர் வகுப்புகள் எடுத்தனர். எங்களை இரண்டு பிரிவாக பிரித்து, திரு. வினோத்குமார் அவர்கள், என்னுடைய வகுப்பாசிரியர் ஆனார். மொழி வேறுபாடு காரணமாக அனைத்து வகுப்புகளும் ஆங்கிலத்திலேயே இருந்தன. ஆனால் பாடத்திட்டங்கள் அனைத்தும் ஹிந்தியில் இருந்தது. தற்சமயம் ஒவ்வொரு அத்தியாகமாக தமிழில் மொழி பெயர்க்கப்பட்டு, Pdf. ஆக எங்களுக்கு அனுப்புகின்றனர். இணையவழியில் வாரத்திற்கு மூன்றுநாட்கள்அதிகாலை 5 மணி முதல் 6 மணிவரை வகுப்புகள் நடை பெறுகிறது. இதை தவிர வருடத்திற்கு ஒரு முறை இந்த வகுப்புகள் நேரடியாக குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் நடைபெறுகிறது. இந்த பாடத்திட்டம் ஒருநாளும் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்க தாய் ஜி விரும்பவில்லை. அதனால் அனைவரும் ஹிந்தி கற்கவும் தொடங்கியுள்ளனர்
இதன் அம்சங்கள்.
1. இத்திட்ட கல்விபடி குருகுலம் அமைப்பில் பள்ளி தொடங்களாம்.
2. வித்யபாரதி மற்றும் இத்திட்ட பள்ளிகளில் ஆசிரியராக பணியாற்றலாம்.
3. நான் எப்பொழும் போல் விருந்தினர் போல் வருகை புரிந்து பல பள்ளிகளில் என்னுடைய பணிணை தொடருவேன் இந்த புனருத்ரான் வித்யாபீட் முத்திரையில். பெரும்பாலும் இணையதள வகுப்பாகவே என்னுடைய பணி தொடரும்.
இந்த நல்லாசிரியர் படிப்பு தொடர்பான என்னுடைய நினைவலைகள் அவ்வப்போது பிளாக தொடரும்.
No comments:
Post a Comment