நீம்கரோலி பாபா ஆசிரமம்.

 நீம்கரோலி பாபா ஆசிரமம்.(தரிசனம் - 24.5.2025)

மே 24 சனிக்கிழமை நாங்கள் அல்மோராவிலிருந்து, பீம்தாலுக்கு பயணித்தோம் போகும் வழியில் “நீம்கரோலிபாபா” ஆசிரமத்தை தரிசனம் செய்தோம்.

நீம்கரோலிபாப அறிவோம்.

அந்த நாள் வரை நான் அறியாத ஒரு ஆன்மீகவாதி. “கைஞ்சிதாம்”; என்று அழைக்கப்படும் இந்த ஆசிரமம் 1964 ஆம் ஆண்டு ஆஞ்சநேயர் கோவிலுடன் இவரால் உருவாக்கப்பட்டது.

பாபாவின் வரலாறு.

அக்பார்பூர் என்ற உத்திரபிரதேச மாநிலத்திலுள்ள ஊரில் பிறந்தார். 11வது வயதில் பெற்றோர்களால் திருமணம் செய்துவிக்கப்பட்டார். வீட்டை விட்டு சென்று பல இடங்களில் திரிந்தார். பின்னர் அவரது தந்தையின் வற்புறுத்தல் கீழ் மீண்டும் குடும்வாழ்கைக்கு வந்து மூன்று குழந்தைகளுக்கு தந்தையானார். பின்னர் அவரின் 51வது வயதில், குடும்பத்தை பிரிந்து சென்றார். 1973 ஆம் ஆண்டு உயிர்நீத்தார். விருந்தாவன், மற்றும் கைஞ்சிதாம் என்ற இரண்டு ஆசிரமங்களும் இவரால் உருவாக்கப்பட்டன.  காலப்போக்கில் இவர் பெயரில் 100க்கு மேற்பட்ட கோவில்கள் கட்டப்பட்டுள்ளன. வியாபாரம்செழிக்க, கடன்நீங்க, மனஅமைதி, இல்லாழ்கை சிறக்க இவரிடம் மக்கள் கடலநீரை போல் அலைஅலையாக திரண்டுவந்து பிரார்தனை செய்கின்றனர். 

கைஞ்சிதாம் ஆசிரமத்தின் சுற்றுவட்டாரப்பகுதியில் 5 கி.மீ. க்கு குறையாமல், போக்குவரத்து நெரிசல் இருந்தது. இந்த செய்தியை கொண்டே மக்களின் அதிகவருகை உங்களுக்கு புரிந்திருக்கும்.

புகைப்படம் மற்றும் கானொளி.








 
Neemkaroli Baba



No comments:

Post a Comment

சப்தமங்கைதலங்கள்.

  சப்தமங்கைதலங்கள். (தரிசனம்-13.7.2025)  அமைவிடம் கும்பகோணம் - தஞ்சாவூர் செல்லும் வழியில் உள்ள ஐய்யம்பேட்டை என்ற ஊரை சுற்றி அமைந்துள்ளது. ச...