பாதளபுவனேஷ்வர்

 பாதளபுவனேஷ்வர் (தரசனநாள் 21.5.2025)

அமைவிடம்

உத்ரகாண்ட் மாநிலம்,  பித்தோரகர் என்ற நகரில் இருந்து 95கி.மீ. தொலைவில் உள்ள கங்கோலிட் என்ற இடத்தில் உள்ளது.

நாங்கள் 20.5 இரவே கங்கோலிகாட் என்ற இடத்தை அடைந்துவிட்டேம். 21.5. காலை 9 மணியளவில் கோவிலுக்கு கிளம்பினோம்.

குகை அமைப்பு

இந்த குகையானது 90 அடி ஆழமும், 160 அடி நீளமும் கொண்டது. இதனுள் நுழைவதற்;கு 30 அடி ஆழம் கொண்ட ஒரு குறுகலான, ஒரு துவாரம் வழியாக செல்ல வேண்டும்.

திரேதாயுக வரலாறு.

பல யுகங்களாக இந்த இடம் இருப்பதாக அறியப்படுகிறது. இந்த குகையில் உள்ள சிவபெருமனை திரேதாயுகத்தில் இருந்த சூர்ய வம்ச அரசனான ரிதுபர்ணா என்பவர் கண்டுபிடித்து வழிபாடு செய்திருக்கிறார்.  ரிதுபர்ணா அரசன் சென்ற போது ஆதிஷேன் நாகமே இவருக்கு வழிகாட்டியாக அழைத்து சென்று இறைவனை வழிபட செய்ததாம். முப்பத்து முக்கோட்டி தேவர்கள். என்று நாம் வழக்கில் கூறுவோம் அல்லவா. இதில் “கோட்டி” என்ற வார்த்தை “வகை” என்ற பொருள்படுகிறது. இதன்படி 33 வகை தெய்வங்கள் இந்த குகையில் வீற்றிருப்பதாக பொருள்படுகிறது.

துவாபரயுக வரலாறு 

அரசன் ரிதுபர்ணாவிற்கு பிறகு, துவாபர யுகத்தில் பஞ்ச பாண்டவர்கள் இந்த குகை சிவனை வழிபட்டதாக மகாபாரதம் வழியாக அறியப்படுகிறது. பஞ்ச பாண்டவர்கள் சொர்கத்திற்;கு செல்வதற்காக பத்ரிநாராயணன் கோவிலுக்கு அருகில் உள்ள மானா கிராமத்தில் உள்ள “ஸ்வர்கரோகிணி” வழியாக செல்கின்றனர். இப்படி செல்வதற்கு முன்பு பூலோகத்தில்   உள்ள இந்த பாதாளபுவனேஷ்வரை வழிபட்டு சென்றதாக குறிப்பிடுகிறார்கள்.

கலியுக வரலாறு.

மண்மூடியிருந்த குகையை கி.பி.819 ல், ஆதிசங்கரர்   கந்தபுராணத்தை அடிப்படையாக கொண்டு இங்கு சென்று தரிசனம் செய்திருக்கிறார்.  6ஆம் நூற்றாண்டை சேர்ந்த ஸ்கந்த புராணத்தில் 103வது அத்தியாயத்தில் இந்த பாதள புவனேஸ்வரர் பற்றிய குறிப்புள்ளதாம்;.

தற்பொழுது இந்த குகை தொல்பொருள் ஆய்வுதுறையால் பாதுகாக்கப்படுகிறது

குகை பற்றிய பிற செய்திகள்.

இந்த பாதளத்தில் உள்ள புவனேஸ்வரர் கோவிலுக்கு நான்கு வழிகள் உள்ளதாக கூறுகின்றனர். 

1 யுத்த துவார் - குருஷேத்ரம் போர் முடிந்த பிறகு இந்த யுத்ததுவார் என்ற வழி மூடப்பட்டதாகவும்,

2. பாவ்துவார் - ராவணனின் மரணத்திற்கு பிறகு மூடப்பட்டதாகவும்,

மற்ற இரண்டு துவார்களான

3. மோட்ஷத்துவார் 4. தர்மத்துவார் என்ற இரண்டுவழியும் தற்பொழுதும் உள்ளதாக கூறுகின்றனர். 

என் அனுபவம்.

மிகவும் கடினமான குகைதான். சற்று பயத்துடனேயே உள்ளே சென்றேன். நுழைவது சற்று எளிதாக உள்ளது. வெளியில் வருவதுதான் மிக கடினமாக உள்ளது. பயணித்த பக்தர்கள் நாங்கள் அனைவரும் மறுநாள்தான்  உடல் வலியை உணர்ந்தோம். குகைக்குள் ஆக்சிஜன் சிலின்டர்களும், மின் விளக்குகளும் இருப்பது தரிசனத்தை மிக எளிமைபடுத்துகிறது. நான்கிற்கு மேற்பட்ட, வழிகாட்டிகள் (Guide) இருந்தனர். இவர்கள் குறிப்பிட்டு சொன்ன செய்திகள், 1. விநாயகரின் தலை வெட்டப்பட்டு பின்தான் யானை முகம். இந்த வரலாறு அனைவரும் அறிந்ததே. வெட்டுபட்ட விநாயகரின் முகம் என்று ஒரு பெரிய கல்லை காட்டினார்கள். அதன் மேல் தாமரைவடிவில் அமைந்த ஒரு கல்லில் இருந்து நீர் விநாயகர் மேல் விழுந்து (சொட்டு சொட்டாக) கொண்டே இருந்தது.

 2. காமதேனு மற்றும் கல்பவிருட்சமரம் என்று காய்ந்து போன கல்லாக மாறக்கூடிய தன்னையில் உள்ள மரத்தை காட்டினர். 

3. சுந்தரர் கைலாயம் செல்ல பயன்படுத்திய ஐராவதத்தின் கால்

4. லிங்கத்தின் மேல் உள்ள பித்தளை கவசம் ஆதிசங்கரர் அருளியது 

என்று,நிறைய செய்தி சொன்னார், ஹிந்தியில் சொன்னதால் என்னால் முழுமையாக தெரிந்துகொள்ள முடியவில்லை. வீடியோ கேமரா வைத்து நம் ஒவ்வொருவரையும் கவனித்துக்கொண்டே இருக்கிறார்கள். கைபேசியை அவர்களிடம் ஒப்படைக்க வேண்டும். ஆனால் என்னை போன்று சிலர் எடுத்து வந்தனர். வீடியோ கேமரா மூலம் கவனித்து வந்ததால், சிலரின் கைபேசியை வாங்கி கானொளி மற்றும் புகைப்படத்தை அழித்து விட்டனர். நான் எடுத்ததை எவரும் அறியவில்லை போலும்.

இங்கிருந்து பத்ரிநாத் கேதார்நாத், அமர்நாத் செல்வதற்கான சுரங்கப்பாதை உள்ளதாக கூறினர்.

சமவெளியிலும், பாதாளபுவனேஸ்வர் என்ற பெரில் லிங்க வடிவில் சிவபெருமான் அருள்பாலிக்கிறார்.

புகைப்படம் மற்றும் கானொளி





























No comments:

Post a Comment

சப்தமங்கைதலங்கள்.

  சப்தமங்கைதலங்கள். (தரிசனம்-13.7.2025)  அமைவிடம் கும்பகோணம் - தஞ்சாவூர் செல்லும் வழியில் உள்ள ஐய்யம்பேட்டை என்ற ஊரை சுற்றி அமைந்துள்ளது. ச...