கோலார் சோமேஸ்வரர் (தரிசனம்-21.6.2025)
அமைவிடம்
கர்நாடகா மாநிலம் கோலார் என்ற நகரத்தில் அமைந்துள்ளது.
14ஆம் நூற்றாண்டின் விஜயநகர பேரரசால் கட்டப்பட்டது. தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் உள்ளது.
மிக அற்புதமான கட்டிட கலை நயத்துடன் விளங்குகிறது இந்த கோவில். சோமேஸ்வர சுவாமி சற்று பெரிய லிங்க வடிவத்தில் அருள் பாலிக்கிறார். முகப்பு மண்டபம், கொலு மண்டபம், பார்வதி சன்னதி என்று கோவில் அமைந்துள்ளது. தமிழ்நாடு கோவில் போன்று பெரிய நிலபரப்பில் பல பிரகாரங்களுடன் அமையவில்லை என்றாலும், சிற்பங்கள் அனைத்தும் மிக அற்புதமாக உள்ளன. புகைபடங்களை பார்த்து மகிழுங்கள். கட்டிட கலை ரசிகர்களை இந்த கோவில் மிகவும் ஈர்க்கும். சிவன் சன்னதியில் அருகில் அறுமுக கடவுள் காட்சி தருகிறார்.
இந்த கோலார் நகரை சுற்றி பல பழமைவாய்ந்த கோவில்கள் கலைநயத்துடன் உள்ளன. நாங்கள் முல்பாகல், அவானிபெட்டா, மற்றும் இந்த சோமேஸ்வரர் கோவிலை தொடந்து எங்கள் தரிசனம் தொடரும்.
Photo are follows.
No comments:
Post a Comment