சிவோகம் சிவன் கோவில் (தரிசனம்-14.6.2025)
அமைவிடம்
பெங்களுர் பழைய விமான சாலையில் அமைந்துள்ள, சிவன் கோவில்.
வரலாறு
இந்த கோவில் 65 அடி உயரத்தில் ஒரு சிவன் சிலையுடன், 1995 ஆம் ஆண்டு சிங்கேரி சங்கராச்சாரியாரால் பிப்ரவரி 26 ஆம் தேதி பிரதிஷ்டை செய்யப்பட்டது. சிவன் தரிசனம் மோட்ஷத்தை அடையசெய்யும், என்ற எண்ணம் உருவானதன் காரணமாக சிவோகம் என்ற பெயரிடப்பட்டது. ஒரு ஆண்டுக்கு 5லட்ச பக்தர்கள் மற்றும் பார்வையாளர்களை ஈர்கிறதாம் இந்த கோவில்.
சிவன் சிலை
65 அடி உயரத்தில் இமயமலை சூழலில் அமர்ந்து தியானப்பது போன்று இந்த சிலை வடிவமைக்கப்பட்டுள்ளது. தலையிலிருந்து கங்கை நீர் விழுவது போன்ற அமைப்பும் அனைவரையும் கவர்கிறது. ஜக்கிவாசுதேவின் ஆதியோகி சிவன் சிலை போன்று இந்த சிவன் சிலையும் மிகவும் புகழ்பெற்று விளங்குகிறது.
ஆன்மீக பொழுபோக்கு பூங்கா.
இந்த தலம் பலரையும், குறிப்பாக கோவிலைவிரும்பாதவர்களும் செல்வதால், இந்த சிவவோகம் என்னை மிகவும் தரிசிக்க தூண்டியது. இங்கு சென்ற பிறகுதான் இது ஒருஆன்மீக பொழுபோக்கு பூங்கா என்பது தெரிந்தது. நுழைiவாயில் ஒரு சிவலிங்க அமைப்பாக அமைத்திருந்தனர். அதனுள் சென்றவுடன், சுமார் ஒரு 15 படி இறங்கிசெல்வது போன்ற அமைப்பு இருந்தது. பின்னர் அனைத்தும், வழக்கம்போல், கார் பார்கிங், கடைகள், செருப்புவிடும் கவுண்டர் என்று. சாதாரண நுழைவு என்று பெயர் போட்டு 150 ரூ கட்டணம் வசூலித்தனர். சிறப்பு கட்டணம் 250 ரூ. இதைதவிர வி.ஐ.பி. வழி என்றுவேறுயிருந்தது.
நாங்கள் 150 டிக்கெட் வாங்கி சென்றோம். 150 மற்றும் 250 இரண்டையும் புகைப்படம் எடுத்துள்ளேன் நன்கு கவனியுங்கள்.
இரண்டு டிக்கெட்டுகளுக்கும் சில ஆன்மீக நிகழ்வுகள் வேறுபடுகின்றன.
நிகழ்வுகள் (150ரூ -நிகழ்வுகள்)
1.ருத்திராட்சம் போடுவது – ஒருபித்தளை கிண்ணத்தில் ருத்திராட்சம் கொடுக்கிறார்கள் அதை வேறுஒரு பித்தனை கிண்ணத்தில் நமச்சிவாய சொல்லிக்கொண்டே ஒவ்வnhன்றாக போடவேண்டும்;.
2.பெரிய பிள்ளளையார் தரிசனம்.
3. சிவலிங்கத்திற்;கு அபிஷேகம். (பால் அவர்களே ஒரு கிண்ணத்தில் தருகிறார்கள்)
4.ஜோதிர்லிங்க காட்சிகள் -( 12 ஜோதிர்லிங்கங்களையும், குகை போன்ற வடிவமைத்து, அதில் ஒலிஒளி காட்சியும் அமைத்துள்ளனர். புகைப்படம் மற்றும் கானொளி கீழே வெளியிடுகிறேன்.
5. 65 அடி சிலை அருகில் சென்று தரிசனம்.
6. ஒரு செப்பு காசு சிவன் படம் பொறித்தது, அதை நீரில் போட வேண்டும். மற்றும் மெழுகுவர்தியால்ஆன மிதக்கும் விளக்கை நீரில் விட வேண்டும்.
7. ஒவ்வொருவருக்கும் தீபாவளி பட்டாசு வெடிக்க பயன்படுத்தும் ஊதுவர்த்தி போன்று ஒன்று (வாசனையுடன்) தருகிறார்கள், அதை ஏற்றி அங்கேயே ஒரு கல்லில் சொருக வேண்டும்.
இதே போல் 250ரூ கட்டணம், செலுத்தியவர்களுக்கு சன்று அதிகமான நிகழ்வுகள். குறிப்பாக அமர்நாத், கேதார்நாத், ஹரித்வார், ரிஷிகேஷ் போன்ற அமைப்பு உருவாக்கியுள்ளனர். ஆனால் இது 250ரூ கட்டணம் செலுத்தியவர்களுக்கு மட்மே.
முத்தாய்ப்பு செய்தி
ஒருபுகைப்பட கலைஞரை நியமித்துள்ளனர், அந்த சிவனுடன் புகைப்பட எடுத்துக்கொள்ள. இதற்கு தனிகட்டணம். ஒரு சிறிய சிவன் சன்னதியுள்ளது.
உலகம் போன்று ஒரு உருண்டை வடிவம் அமைத்து அதனுள் நவகிரகம் வைத்திருந்தனர்.
பாதரட்ஷை பாதுகாப்பிற்கு கட்டணமில்லை. சிவதரிசனம் எனக்கு சிவோகம் கிடைக்க வேண்டவைத்தது.
Photo are follows
No comments:
Post a Comment