நேபாள டார்சுலா (20.5.2025)
நாங்கள் உத்ரகாண்ட மாநிலத்தில் உள்ள டார்சுலாவில் தங்கியமையால் நேபாளநாட்டு டார்சுலாவையும் பார்க்க சென்றோம். இந்த இடம், இந்திய-சீனா போர்வரை, லிபுலேக்கனவாய் வழியாக திபெத் மக்கள் வந்து வியாபாரம் செய்யப்பட்ட இடம். கைவினை பொட்களுக்கு மிகவும் புகழ்வாய்ந்த இடம். தற்சமயமும் இங்கு வியாபார சந்தையே உள்ளது. ஆனால் கைவினை பொட்கள் உள்ளதா? என்பது கேள்விகுறியாத்தான் உள்ளது. சாராதண சந்தையாகவே காட்சியளித்தது. வரலாற்று முக்கியத்துவம் நிறைந்த இடம் என்பதற்காக நாங்கள் இங்கு சென்றோம். சாரதா என்ற காளி நதியே இரண்டு நாட்டையும் பிரிக்கிறது. நதியின் இரண்டு பக்கமும் இரண்டு நாடுகளும் உள்ளன. நமது நட்பு நாடு என்பதன் காரணமாக நமது ஆரார் அடையாளத்தை காண்பித்தே நேபாளத்தினுள் செல்லலாம். நேபாளம் ஒருபக்கம் திபெத்தையும், மற்ற பக்கங்களில் இந்தியாவில் உள்ள உத்திரபிரதேசம், பிகார், உத்திராகாண்ட், சிக்கிம், மேற்குவங்கம் என்ற பல மாநிலங்களை எல்லையாக கொண்டுள்ளது. 2022 செப்படம்பர் மாதம் நாங்கள் பிகார் வழியாக சென்று, உத்திரபிரதேசம் வழியாக நேபாளநாட்டை விட்டு வந்தோம்.
டார்சுலா சந்தை மற்றும் நதியின் புகைப்படங்கள் மற்றும் கானொளிகள்.
No comments:
Post a Comment