ஆதிகைலாயம்

 ஆதிகைலாயம் (தரிசனம் 18.5.2025)




ஆதிகைலாஷ் மற்றும் ஓம் பர்வத் யாத்திரை, சென்னையில் இருந்து 16.5.2025 வெள்ளிக்கிழமை காலை டெல்லிக்கு விமானத்தில் புறப்பட்டோம்  “தமிழ் அஞ்சல்” என்ற Traveler டன். மதியம் 2 மணிக்கு டெல்லியில் இருந்து டானக்பூர் என்ற இடத்திற்கு எங்கள் பிரயாணக்குழுவுடன் பஸ்சில் பயணித்தோம். இரவு சுமார் 2 மணிக்கு டானக்பூர் என்ற உத்ரகாண்ட் மாநிலத்தில் உள்ள ஊரை அடைந்தோம். 

17. 5. காலை மீண்டும் டானக்பூரில் இருந்து டார்சுலா புறப்பட்டோம்.

டார்சுலா

டார்ச்சுலா என்று இரண்டு நகரங்கள் உள்ளன. ஒன்று உத்ரகாண்ட் மாநிலத்திலும், மற்றொன்று நேபாள நாட்டிலும் உள்ளது. நேபாள நாட்டு டார்சுலாவில் வரலாற்று சிறப்பு மிக்க வியாபார சந்தை உள்ளது. அதைபற்றிய செய்தி, டார்சுலா மார்கெட் என்ற பதிவில் வெளியிடுகிறேன். நாங்கள் டார்சுலாவில் தங்கி, 17.5. அன்ற காலை ஆதிகைலாஷ் புறப்பட்டோம்.

இன்னர் லைன் பர்மிட். (Inner line Permit)

டார்சுலா நகரை தாண்டி செல்லும் சாலை சீனாவின் எல்லை பகுதி வரை செல்வதால், நாங்கள் இங்கு  பயணிக்க இன்னர்லைன் பெரிம்ட் ஒன்று வாங்க வேண்டும். அதாவது, I.D.B.P (Indo-Tibetan Border Police Force) அவர்களிடம் அனுமதி பெற வேண்டும். 

இன்னர்லைன் பெர்மிட்டி எவ்வாறு வாங்க வேண்டும்

1. உடல் நல தகுதி சான்றிதழ். (இமயமலை உயரம் காரணமாக)

2. காவல்துறை சரிபார்ப்பு சான்றிதழ். (அயல்நாட்டு எல்லை காரணமாக)

3. சொந்த பொறுப்பு சான்றிதழ்.( மலைஉயர்வு காரணமாக ஆக்சிஜன் குறைவால் மூச்சுதினறல் ஏற்பட வாய்புள்ளதால்)

இவைகளை அடிப்படையாக கொண்டு இந்தோ- திபெத் எல்லை பாதுகாப்பு காவலர் அலுவலகத்தில் சான்றிதழ் பெறுவதே இன்னர் லைன் பெர்மிட் என்பது. 

குஞ்சி கிராமம். 

ஒரே நாளில் பயணம் செய்ய முடியாத காரணத்தால் 10,000 அடி உயரத்தில் உள்ள இந்த கிராமத்தில் தங்க வேண்டிய சூழல் ஏற்படுகிறது. கிட்டத்தட்ட 300 நபர்கள் மட்டுமே வசிக்கும் இந்த கிராம்ததில், மக்கள் வருடத்தில் 6 மாதங்கள் மட்டுமே வசிக்கின்றனர் குளிர்காரணமாக. ஆக்டோபர் முதல் ஏப்ரல் வரை பனிகட்டியால் சூழ்ந்திருக்கும் இந்த கிராமம். மலைகிராமம் என்பதால் தனி தனியறை கிடைக்காது. இக்குளு (Igloo)வடிவில் டார்மிட்டரி கட்டி வைத்துள்ளனர். ஒரு அறையில் 8 நபர்கள் தங்க வேண்டும். தனித்தனி கட்டில்  மற்றும் குளிருக்கான சாதன வசதியுடன் கிடைக்கிறது.

நாம்  ஜீப்பில் பயணிக்கும் வழிகளில் பல இடங்களில் நமது இன்னர் லைன் பர்மிட் சோதிக்கப்படுகிறது. 

புவியியல் அறிவோம்

இந்த குஞ்சி மலைகிராமத்தில் இருந்து, வடக்கே செல்லும் சாலையில் ஆதி கைலாயம் மலை உள்ளது. சின்லா மற்றும் லிம்பியதுரா என்று இரண்டு கணவாய்கள் செல்லும் வழி உள்ளது. கிழக்கே செல்லும் சாலையானது ஓம் பர்வத் மற்றும் லிபுலேக் கணவாய் செல்கிறது. இந்த லிபுலேக் கணவாயை தாண்டினால் 15 கி;மீ. தொலைவில் சீனாவின் எல்லை உள்ளது. பெரிய கைலாயம் என்ற கைலாஷ் மானசரோவர் 97 கி;மீ; தொலைவில் அமைந்துள்ளது. இதன் வழியாக தான் நம் முன்னோர்கள் கைலாஷ் மானசரோவர் சென்று வந்தனர். இதன் வழியாகத்தான் காரைக்கால் அமைமையார் பேய் உருவம் கொண்டும், சுந்தரர் ஜராவததத்திலும், மற்றும் ஒளவையார் விநாயர் ( இந்த காலமே நமக்கு விநாயகர் அவல் என்ற பக்தி பாடல் கிடைத்தது. இன்றளவும் விநாயகர் அகவல் தினம் பாராயணம் செய்தால், விநாயகர் அருளால் நாம் கைலாயம் செல்லலாம் என்ற எண்ணம் பக்தர்கள் மனதிலுள்ளது.) அருளால்யானை உதவியுடனும் கைலாச பதியை தரிசிக்க சென்றிருக்கலாம் என்று நமது மனதில் உள்ள பக்தியூகிக்கிறது.  

கைலாயம் பற்றிய சற்று கூடுதலாக அறிவோம்.

கைலாய யாத்திரை என்பது கைலாஷ் மானசரோவரை குறிக்கிறது என்பது அனைவரும் அறிந்ததே. இந்த கைலாயம் திபெத்நாட்டில் உள்ளது. 

சற்று வரலாறு அறிவோம்.

மங்கோலியாவின் தாக்குதல் சமயம் திபெத்தும், சீனாவும் இணைந்து செயல் பட்டது. மங்கோலிய ஆட்சிக்கு பிறகு திபெத் சுதந்திரமாக இயங்கியது. மீண்டும் 1951 ஆம் ஆண்டு சீன ராணுவம் திபெத்தை கைபற்றியது. தலாய்லாமாவால் ஆட்சி செய்யப்பட்ட திபெத், சீனாவுக்கு கட்டுப்பட்டது.  சீனா நமக்கு இந்தியர்களுக்கு (கடந்த இரண்டு ஆண்டுகளாக இந்திய குடியுரிமை பெற்றவர்களுக்கு மட்டும்) கைலாயயாத்திரை அனுமதியளிக்கவில்லை. இந்த ஆண்டுதான் அனுமதியளத்துள்ளதாக செய்தி வந்தாலும். இது வரை தனியார் டிராவலர்களுக்கு அனுமதியளிக்கவிலை. வெளியுறவுதுறை அமைச்சகம் (Ministry of External Affirs) வழியாகவே மக்கள் இந்த ஆண்டு அனுமதிக்கப்படுகின்றனர். 

பஞ்ச கைலாயம்.

ஆன்மீக அன்பர்களுக்கான தகவல்கள். கைலாயம் என்பது ஐந்து இடங்களை குறிக்கிறது.

1. கைலாஷ்- மானசரோவர் (திபெத் நாட்டில் உள்ளது)

2. ஆதிகைலாஷ் - உதரகாண்ட் மாநிலம், இந்தியா.

3.மணிமகேஷ் கைலாஷ் -  இமாச்சலபிரதேசம், சம்பா மாவட்டம்.

4.கின்னார் கைலாயம் - இமாச்சலபிரதேசம், கின்னார் மாவட்டம.

5. ஸ்ரீ கந்தமகாதேவ் மலை. இமாச்சல்பிரதேம், குல்லு மாவட்டம்.

மீண்டும் ஆதிகைலாயம் வருவோம்.

குஞ்சி என்ற கிராமத்தை கடந்து சென்றால் குதி என்ற கிராமம் வருகிறது. அதுவே மகாபாரதத்தில் வரும் குந்தி தேவியின் ஊராகும். இங்குள்ள ஒரு பாழடைந்த கோட்டை குந்திதேவியின் அரண்மனை என்று இப்பகுதி மக்கள் கூறுகிறார்கள். இதை தொடந்து கணபதி நளா என்ற ஓடை வருகிறது. கடந்த ஆண்டு அதாவது 2024 ல் தான் இந்த ஓடைக்கு பாலம் கட்டியுள்ளனர். நாங்கள் தான் இந்த ஆண்டு முதன் முதலாக இந்த பாலத்தில் சென்றுள்ளோம். இங்கிருந்து சில மீட்டர்களில் ஆதிகைலாய மலையடிவாரம் உள்ளது. இந்த மலை 14700 அடி உயரத்தில் உள்ளது. 

ஆதிகைலாய தல வரலாறு

இந்த மலையில் பல ஆயிரக்கனக்கான ஆண்டு பார்வதி தேவி சிவனைநினைத்து தவம் மேற்கொண்டுள்ளார். இந்த ஆதி கைலாயத்தில் தான் ராவணன் தவத்தில் மகிழ்ந்த சிவபெருமான் ராவனனுக்கு பல வரம் அளித்துள்ளார். 

கௌரிகுண்ட்

கௌரி நீராடிய சுனையே கௌரி குண்ட் என்று அழைக்கப்படுகிறது. பனி உருகி உருவாகிய சுனை இது. இங்கு தான் பார்வதி விநாயகரை பிடித்து பிள்ளையாராக உருவாக்கிய இடம். நாங்கள் மதியம் இரண்டு மணிக்கு இந்த இடத்தை சென்றடைந்தோம். ஆக்சிஜன் குறைவு காரணமாக நாங்கள் இங்கு செல்ல அனுமதிமறுக்கப்பட்டது. மத்திய அமைச்சர் ஜே.பி. நட்டா அவர்களும் வருகைபுரிந்திருந்தார். அவரும் கெளிகுண்ட் தரிசனம் செய்யவில்லை. 

பார்வதி சரோவர். 

கௌரிகுண்டில் இருந்து எதிர் திசையில் பார்வதி சரோவர் என்ற இடம் அமைந்துள்ளது. வானிலை மாற்றம் காரணமாக எங்களை ஜீப்பில் செல்ல அனுமதித்தனர். நான் பஞ்சகேதார். ருத்ரநாத் போன்று குளிருக்கு பயந்து, ஜீப்பிலேயே அமர்ந்து விட்டேன். பின் என் கணவரின் அறிவுரைபடி இறங்கி, தரிசனம் செய்தேன். மீண்டும் என் கணவருக்கு நன்றி. கால் ஷ{ மற்றும் சாக்ஸை கடந்து என்னுடைய காலில் குளிர் காரணமாக வலி ஏற்பட்டது. இது ராணுவ பகுதி என்பதால், பக்தர்களை மட்டுமே இந்த பார்வதி சரோவரில் அனுமதிக்கின்றனர்.

என் பயண அனுபவம்

நான் ஆர்வகோளாரு காரணமாக முதலில் ஆதி கைலாயத்தில் இறங்கியஉடன் என் கணவர் தடுத்தும் நடந்து சென்றேன். என் உடன் அவரும் வந்தார். பின் எங்களின் டிராவலஸ் உரிமையாளர் கடிந்து கொண்டதன் காரணமாக திரும்பினேன். ஆனால் சற்று சுவாச பிரச்சனை ஏற்பட்டது. அவர் வைத்திருந்த கை ஆக்சிஜனை சற்று பயன் படுத்திக்கொண்டேன்.

மற்ற மலைகள் பிரம்மபரவதம், பாண்டவ பர்வதம் என்றெல்லாம் அழைக்கின்றனர். இங்குள்ள சமவெளி பகுதியில் பீமன் பயிர் விளைவித்தாராம். இதன் காரணமாக இந்த இடம் பீம்கெட்டி என்று அழைக்கப்படுகிறது. மீண்டும் குஞ்சி கிராமத்திற்கு வந்து சேர்நதோம். 

நான் எடுத்த ஆதிகைலாய புகைப்படம் மற்றும் கானொளிகள்.


















































1 comment:

சப்தமங்கைதலங்கள்.

  சப்தமங்கைதலங்கள். (தரிசனம்-13.7.2025)  அமைவிடம் கும்பகோணம் - தஞ்சாவூர் செல்லும் வழியில் உள்ள ஐய்யம்பேட்டை என்ற ஊரை சுற்றி அமைந்துள்ளது. ச...