கொலு தேவதா (தரிசனம்-22.5.2025)
அமைவிடம்
உத்ரகாண்ட் மாநிலத்தில், அல்மோரா என்ற இடத்திலிருந்து, 10 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது, இந்த கொலுதேவதா என்ற நினைவு ஆலயம். கடல் மட்டத்திலிருந்து, 5636 அடி உயரத்தில் உள்ளது. இந்த அல்மோரா என்பது மிகவும் புகழ்வாய்ந்த சுற் றுலாதலங்களில் ஒன்று.
வரலாறு
6ஆம் நூற்றாண்டிலிருந்து , 13 ஆம் நூற்றாண்டிற்கு இடைப்பட்ட காலத்தில் இப்பகுதியின் மன்னனாக ஆட்சி செய்தவர்தான், கொலு தேவதா. இந்த கத்யூரி மன்னன், குழந்தையாக இருந்த பொழுதே மக்கள் தெய்வ குழந்தையாக கொண்டாடினர். மன்னராகி இறந்த பிறகு தெய்வாம மக்கள் மனதில் உள்ளார்.
ஒரு சிறந்த அரசராக இருக்க வேண்டும். இவர் மீது உள்ள அபிமானத்தில், இவருக்கு கோவில் கட்டியுள்ளனர். இன்றளவும் மக்களின் குறைதீர்கும் அரசனாகவே உள்ளார். மக்கள் அவர்களின் விருப்பங்களை காகிதத்தில் எழுதி இங்கு ஒரு இடத்தில் கட்டிவிடுகின்றனர். அவர்களின் விருப்பம் நிறைவடைந்தவுடன், பித்தளையில் மணிவாங்கி கட்டுகின்றனர். இந்த பித்தளை மணி கட்டும் வழக்கம் இந்த பகுதிகோவில் அனைத்திடத்திலும் உள்ளது.
வியாபார தலங்கள், தனியார் லாரி வேன், பேருந்து, கடைகள் என்று இந்த பகுதியில் எங்கும் அவரின் பெயரும், வெள்ளை ஆடையில் வெள்ளை குதிரையில் பயணிக்கும் இந்த கொலுதேவதாவின் படங்களும்தான் நிறைந்துள்ளன.
அன்று இரவு அல்மோரா என்ற இடத்திற்கு சென்று தங்கினோம்.
Photo follows.
No comments:
Post a Comment