காதர்மால் சூரியன் கோவில்.(தரிசனம்-23.5.2025).
சூரியகடவுள் பற்றி அறிவோம்.
நமது பாரதத்தில் “ஷண்மதங்கள்” என்று ஆறுபிரிவுகளாக இறைவனை வழிபட்டு வந்தனர்.
1.கணாபத்யம் - விநாயகர் வழிபாடு.
2.கௌமாரம் - முருகன் வழிபாடு
3.சௌரம் - சூரியன் வழிபாடு
4.சாக்தம் - அம்மன் வழிபாடு
5. சைவம் - சிவன் வழிபாடு
6. வைணவம் - பெருமாள் வழிபாடு.
என்று ஆறு பிரிவுகள் இருந்தனர். ஆதிசங்கரரே இவற்றை ஒன்றிணைத்து, ஷண்மதம் என்ற அழைத்து, இந்த ஜகத்திற்கே குருவாக விளங்குகிறார். “சௌரம்” என்ற பிரிவினர் சூரியவழிபாடு செய்தனர் என்பதை கூறுவதற்காகதான் இந்த செய்திகள் அனைத்தும். சூரியனை கண்ணுதற்கடவுள் என்றும் கூறுவர். உலகமக்கள் பலராலும் வணங்கப்படும் தெய்வம். சூரியன். தற்சமயம் சைவம் மற்றும் வைணவம் போன்று இந்த சௌரம் இல்லை. ஆனால் அனைத்து மக்களாலும் சூரியன் வணங்கப்படுகிறார். நாம் நன்கு உற்று கவனித்தால் பெரும்பான்மையான மக்கள் சூரியனை பாரத்து வணங்குவதை நன்கு அறியலாம். நானும் தற்சமயம் பிரயாணத்தின் சமயமும், காலை எழுந்தவுடன், இறைவுருவம் காணாத நேரத்தில் ஜன்னல் வழியாக சூரியனை வணங்குவதை வழக்கமாக்கிகொண்டுள்ளேன்.
நம் நட்டில் உள்ள சூரியன் கோவில்கள்.
1. கோனார்க்(.ஒடிசா மாநிலம், புகழ்பெற்ற சுற்றுலாதலம், என்னுடைய பிளாகும் உள்ளது.)
2.மோதேரா (குஜராத்;)
3.மார்டண்ட் (காஷ்மீர்)
4. காதர்மால் (உத்ரகாண்ட்)
5. சூரியனார் கோவில்(தமிழ்நாடு)
6 .ரணக்பூர் சூரியனார் கோவில் (ராஜஸ்தான்)
7. தட்சினார்க்கா (பீகார்)
8. பிரம்மன்யா (மத்தியபிரதேசம்)
9. சூர்ய பிரகார் (அஸ்சாம்)
10. குவாலியர் (1988 –ஜி.டி.பிர்லாவின் உருவாக்கம்)
11 ரான்சி
12 தேவகா (ராஜஸ்தான்)
13. ஜெய்பூர் (ராஜஸ்தான்
கோவில் பற்றிய தகவல்கள்.
இந்த காதர்மால் சூரியனார் கோவில் அல்மோராவில் இருந்து 17கி.மீ. தொலைவிலும், கடல்மட்டத்திலிருந்து 6900 அடி உயரத்திலும் அமைந்துள்ளது. ஏழுகுதிரைகள் பூட்டப்பட்ட தேரில் நின்றபடி அருள்பாலிக்கிறார், சூரியன் 8ஆம் நூற்றாண்ல் கத்யூரி மன்னன், கட்டரம்மல்லா என்பவரால் கட்டப்பட்டது. சிவன் பார்வதி, லெஷ்மி நாராயணன் போன்றோரும் அருள்பாலிக்கின்றனர். ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர்22 ஆம் தேதி மற்றும் பிப்ரவரி 22 ஆம் தேதி சூரிய ஒளிக்கதிர் சூரியபகவான் மீது விழுகிறது. இந்தயா முழுவதும் இவ்வாறான நிகழ்வு பல கோவில்களில் நடைபெருகிறது.
புகைப்படங்கள் மற்றும் கானொளிகள்
No comments:
Post a Comment