கச்சாலீஸ்வரர் கோவில்

 கச்சாலீஸ்வரர் கோவில் (தரிசனம் 2.6.2025) 

அமைவிடம்

சென்னை பாரிஸ் கார்னரில் உள்ள அரண்மனைக்கார தெருவில் அமைந்துள்ள சிவன் கோவில்.

சிவபெருமானின் பல பெயர்களின் ஒன்றான கச்சாலீஸ்வரர் என்ற பெயரே பின்னாலில் கச்சபேஸ்வரர் என்றானது.

வரலாறு

தளவாய செட்டியார் என்பவர் காஞ்சிபுரத்தில் உள்ள கச்சபேஸ்வரர் மீது மிகுந்த பக்தி கொண்டு தினம் தரிசனம் செய்துவந்தார். ஒருநாள் கடும் மழைகாரணமாக காஞ்சிபுரத்திலிருந்து சென்னைக்கு வரமுடியாமல் அங்கேயே தங்கிவிட்டார். இந்தசெட்டியாரின் வேலையை இறைவன் இவர்ரூபத்தில் இங்கு வந்து செய்தார். இறைவனின் அன்பைகண்டு மகிழ்ந்து, காஞ்சிபுரம் கச்சபேஸ்வரர் கோவில் போன்றே இங்கு ஒரு சிவன் கோவிலை கட்டினார்.

கோவில் பற்றிய தகவல்கள்.

1725 ஆம் ஆண்டு தொடங்கி 1728 ஆம் ஆண்டு பனி நிறைவுபெற்றது. இந்தகாலகட்டத்தில் பிரிட்ஷ் அரசிடம் அனுமதி மற்றும், உயர்பிரிவினர் தாழ்பிரிவினர் என்ற பரிவினர் காரணமாக அவர்களிடம் அனுமதி என்று பல சவால்களை தளவாயசெட்டியார்  எதிர்கொண்டார். 

1962 ஆம் ஆண்டு பெரிய அளவில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. பின்னர் 1984 புதுப்பிக்க தொடங்கி 1989 ஜுலை மாதம் பெரிய அளவில் கும்பாபிஷேகம் நடைப்பெற்றது.

பஞ்சாசனம்.

சாதாரணமாக சிவன் கோவிலில் உள்ளது போன்ற பல சன்னதிகள் இருந்தாலும், ஐந்து அடுக்கு கொண்ட சிவலிங்கமான பஞ்சாசனம்  என்ற சன்னதி சிறப்புற்று விளங்குகிறது

Photo are follows.




























No comments:

Post a Comment

சப்தமங்கைதலங்கள்.

  சப்தமங்கைதலங்கள். (தரிசனம்-13.7.2025)  அமைவிடம் கும்பகோணம் - தஞ்சாவூர் செல்லும் வழியில் உள்ள ஐய்யம்பேட்டை என்ற ஊரை சுற்றி அமைந்துள்ளது. ச...