அவானி ராமலிங்கேஸ்வரர்

 அவானி ராமலிங்கேஸ்வரர். (தரிசனம்- 21.6.2025)

அமைவிடம்

கர்நாடகா மாநிலம், கோலார் மாவட்டத்தில்,  முல்பாகல் என்ற இடத்திலிருந்து 14 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது.  

வரலாறு

தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் உள்ள இந்த ஆலயம்  அவர்களின் ஆராய்சிபடி 10 ஆம் நூற்றாண்டில்” நொளம்ப” வம்சத்தினரால் கட்டப்பட்டது. விஜயமன்னர்களால் முன்மண்டபம் மற்றும் கோபுரமும் கட்டப்பட்டது.  சோழர்களும் இக்கோவிலை மேம்படுத்தியுள்ளனர். 

ராமலிங்கேஸ்வரா குழுமம்

ராமலிகேஸ்வரர், லக்ஷ்மணலிங்கேஸ்வரர், பரதலிங்கேஸ்வரர், சத்ருக்னலிங்கேஸ்வரர் என்று நான்கு பிரதான சன்னதிகள் உள்ளதாலும் மற்றும் ராமாயண கதாபாத்திரங்களில் சிலரின் பெயரில் சிறிய சன்னதிகள் அமைந்திருந்ததாலும், குழுமம் என்று  அழைக்கப்படுகிறது. கட்டிட கலையில் மிகவும் சிறப்புற்று விளங்குகிறது. நான் வெளியிடும் புகைப்படங்கள் உங்களுக்கு உணர்த்தும். ஆனால் கோவிலில் சிதிலம் மிக அதிகமாகவேயிருந்தது.

சிங்கேரி சாரதா மடம்

கோவில் அருகில் சிருங்கேரி சாரதா பீடத்தின் மடம் மற்றும் சாரதாம்பாள் சன்னதியும் உள்ளது.

சீதா கோவில் மலைஏற்றம் 

வால்மீகியின் வசிப்பிடமாகவும், ராமர் இலங்கையிலிருந்து அயோத்திக்கு திரும்பும் சமயம், இந்த அவானிக்கு வந்ததாகவும் கூறப்படுகிறது. இந்த கோவில் அருகில் உள்ள மலையில்தான் லவ, குசா என்ற ராமரின் புதல்வர்கள் பிறந்ததாக கூறுகின்றனர். இந்த மலையை நாங்கள் ஏறியிறங்க ஒன்றரை மணிநேரம் கடந்தது.  எங்களை போல் சாமிதரிசனம் செய்ய வந்த  குழந்தைகள் உட்பட பலர்  அசாதாரணமாக மலையேற்றம் செய்தனர். இந்த இடம் “தெற்கு கயா” என்ற அழைக்கப்படுகிறது.

Photo and Video are follows.



























































 








No comments:

Post a Comment

சப்தமங்கைதலங்கள்.

  சப்தமங்கைதலங்கள். (தரிசனம்-13.7.2025)  அமைவிடம் கும்பகோணம் - தஞ்சாவூர் செல்லும் வழியில் உள்ள ஐய்யம்பேட்டை என்ற ஊரை சுற்றி அமைந்துள்ளது. ச...