காலாபாணி காளிமந்திர். (தரிசனம் 19.5.2025)
அமைவிடம்
குஞ்சி என்ற மலைகிராமத்திலிருந்து ஓம் பரிவத் செல்லும் வழியில் காலாபாணி என்ற ஒரு கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் அமைந்துள்ள கோவிலே காலாபாணி காளி மந்திர்.
காளி நதி
இந்த நதி காளி நதி என்றும் சாரதா நதி என்றும் அழைக்கப்படுகிறது. ஓம் பர்வதம் மற்றும் ஆதி கைலாஷ் செல்லும் வழி எங்கும் தொடரந்து வருவது இந்தநதியே. மிகபெரிய நதியான இந்த நதியின் சிறப்பு என்ன வென்றால். ஒரு சிறிய சுனையில் இந்த நதி உற்பத்தியாகிறது. இது நம்மை ஆச்சரியத்திற்குள்ளாகுகிறது. இந்த சுனை அருகில் கருப்பு நிறத்தில் ஒரு காளி பிரதிஷ்டை செய்யப்பட்டு ஒரு கோவிலாக உள்ளது. இந்த கோவிலே காலாபாணி காளிமாதா. சிவனும் பார்வதியும் நமக்கு அருள்பாளிக்கின்றனர். இந்த கோவிலை இந்தோ-திபெத் பார்டர் காவலர்களே கட்டி பாதுகாத்து வருகின்றனர்.
வியாசர்குகை
இந்த கோவிலுக்கு எதிரில் வியாசர் குகை அமைந்துள்ளது. நாம் இந்த குகைக்கு செல்ல முடியாது. மலை மீது ஏறுவது மிக கடினம். இந்த இடத்தில் தான், வியாசர் சொல்ல விநாயகர் மகாபாரதம் எழுhதினார் என்று கூறப்படுகிறது. இதே உத்ரகாண்ட் மாநிலத்தில் பத்ரிநாத் என்ற புன்னிய ஷேத்ரம் அருகில் உள்ள மானா என்ற கிராமத்திலும், வியாசர் குகை மற்றும் கணபதி குகை உள்ளது. இந்த இடமும் மாகாபாரதம் எழுதிய இடமாக கூறப்படுகிறது. மானா என்ற தலைப்பில் என்னுடைய பிளாக் ஒன்றும் உள்ளது.
இந்த சாரதா என்ற காளி நதியே இந்தியாவையும் நேபாளத்தையும் பிரிக்கிறது.
Videos and Photos
No comments:
Post a Comment