திருமலைவையாவூர் (தரிசனம்- 1.6.2025)
அமைவிடம்
செங்கல்பட்டு மாவட்டத்தில் அமைந்துள்ளது இந்த வைணவதிருத்தலம். திண்டிவனம்- சென்னை தேசியநெடுஞ்சாலையில், வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயம் செல்லும் வழியில் அமைந்துள்ளது.
கோவில் பற்றிய செய்திகள்.
420 அடி உயரத்தில் அமைந்துள்ளது இந்த திருத்தலம். ஸ்ரீ பிரசன்ன வெங்கடேசபெருமாள் சமேத அலர்மேல்மங்கைதாயாராக பக்தர்களுக்கு இறைவன் அருள்பாலிக்கிறார். தென்திருப்பதி என்ற சிறப்பு பெயரும் பெற்றுள்ளது இந்த கோவில். லெஷ்மி நரசிம்மர், ஸ்ரீராமர், வீர ஆஞ்சநேயர், சக்கரத்தாழ்வார், சுதர்சன ஆழ்வார், ராமானுஜர் என்ற பல சன்னதிகளை கொண்ட இந்த திருத்தலம் 500 ஆண்டுகளுக்குமேல் தொண்மைவாய்ந்தது.
2020 ஆம் ஆண்டு என்கணவரின் பனிஓய்வுக்கு பிறகு நாங்கள் தரிசனம் செய்த முதல் இடம், திருமலைவையாவூரும், வேடந்தாங்கலும் தான்.
இந்த பள்ளியை காணவே நாங்கள் அன்று பயணித்தோம். குருகுலம் என்பது பெயரளவில் மட்டுமல்ல. செயல்பாடுகள் அனைத்துமே குருகுலகல்வி போன்றதே. இந்த மாற்றுப்பள்ளி, அருகில்தான் திருமலைவையாவூர் உள்ளது. கோடைகாலம் என்பதால் நாங்கள் வேடந்தாங்கல் செல்லவில்லை.
புனருத்ரான் வித்யாபீடம் வழியாக நான் படிக்கும் நல்லாசிரியர் பயிற்;சியின் ஒரு அங்கமே இந்த குருகுல கல்விமுறை. என்னுடைய புனருத்ரான் ஆசிரியர் திரு. வினோத்குமார் அவர்கள் தொடங்கியபள்ளி. என்னுடைய பிளாக் “ஆச்சார்ய அத்யயன் யோஜனா” படித்தவர்களே புனருத்ரான் வித்யாபீடத்தை அறிவர்.

No comments:
Post a Comment