அரசர் கோவில். (தரிசனநாள்-29.9.2023)
அமைவிடம்.
சென்னை –திண்டிவனம் தேசிய நெடுஞ்சாலையில், படாளம் கூட்டுரோடில் இருந்து இடதுபக்கம் சுமார் 5கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. ஊரின்பெயரே அரசர் கோவில்.
மூவலர் வரதராஜபெருமாள், ஸ்ரீதேவி,பூதேவி சமேதராக நின்ற கோலத்தில் அருள்பாலிக்கிறார். அதிகம் அறியப்படாத 1000 ஆண்டுகள் பழமைவாய்ந்த கோவில். சாளகிராமத்தினால்ஆன பெருமாள்.
சுந்தரமகாலெஷ்மி.
இந்த ஆதிலெஷ்மி பத்மாசனத்தில் தாமரைமேல் வீற்றிருக்கிறார். பக்தர்கள் “சுந்தரமகாலெஷ்மி கோவில்” என்றே இந்த கோவிலை அழைக்கின்றனர். தாயாரின் “வலதுகாலில் ஆறுவிரல்கள்”; உள்ளன. அழகிய வேலைபாடுடன் கூடிய மண்டபத்துடன் தாயார் சன்னதி அமைந்துள்ளது. லெஷ்மிதேவி சிலாரூபமாக இருக்கிறார் என்றும், அங்கதில் 13 மேற்பட்ட மச்சங்கள் உள்ளதாக கோவில் அர்சகர் தெரிவித்தார். தீபாராதனையின் சமயத்தில், இடதுபக்க கண், மற்றும் மூக்கிற்கு அருகில் உள்ள மச்சத்தை சுட்டிகாட்டினார். பல்லவர்கள், மற்றும் சோழர்கள் பராமரிப்புபணி செய்துள்ளனர். சிதலம் அடைந்திருந்த கோவில், தற்பொழுது பராமரிப்பு பணிகள் நடைபெற்று புதுபொலிவுடன், காட்சியளிக்கிறது.
No comments:
Post a Comment