இலங்கை முருகன் கோயில்கள். (இலங்கை பயணநாட்கள்- 11.9.23 முதல்-16.9.23 வரை).
மாதம்பே. (தரிசனநாள்-11.9.23)
யாழ்ப்பாணம், புத்தளம் மாவட்டம், மாதம்பே என்ற ஊரில் அமைந்துள்ளது இந்த கோவில். இது தமிழர்களின் கதிர்காமம் என்று அழைக்கப்படுகிறது. கோவில் வெளிப்பிரகாரத்தில் அனைத்து இறையுருவங்களும், நம் ஊர் விநாயகர் சதுர்த்தி விநாயகர் போன்று, பெரிய உருவமாக அமைத்துள்ளனர். கோவில் “பாலாலயம்” செய்யப்பட்டு இருந்தது.
நல்லூர் கந்தசாமி. (தரிசனநாள்-12.9.23)
யாழ்பாணத்தில் இருந்து இரண்டு கி.மீ. தொலைவில் உள்ள நல்லூர் என்ற இடத்தில் அமைந்துள்ளது இந்த கோவில். யாழப்பாண அரச வம்சாவழியினர், இந்த கோவிலை கட்டி வழிபட்டுவந்தனர் என்று “வைபவமாலை” கூறுகிறது. 1620-ல் போச்சுகீசியர்கள் கைபற்றி, யாழ்பாணத்தை தலைநகரமாக்கி, முதல் வேலையாக கந்தசாமி கோவிலை இடித்து தேவாலயம் கட்டினர். 1658 முதல் 1798 வரை “ஒல்லந்தர்” ஆட்சி காலத்தில் இந்து கோவில் அமைப்பிற்கான இறுக்கம் தளர்ந்தது. முன்பு கோவில் இருந்த இடத்தில் தேவாலயம் இருந்ததால், வேறு இடத்தில் கந்தசாமிக்கு கோவில் கட்டப்பட்டது. இந்த கோவிலில் “வேல்”தான் பிரதானமாக உள்ளது. இதை சுற்றி பல சன்னதிகள் அமைக்கப்பட்டுள்ளன. கிழக்கு, தெற்கு என்ற இருவாயில்களை கொண்ட பிரும்மாண்டமான கோவில். இன்றைய நிலைக்கு ஆறுமுக நாவலரும், அவரது மாணவர்களுமே காரணம் என்று அறியப்படுகிறது.
நல்லூரில், சட்டநாதர், வீரமாகாளி, கைலாசநாதர், இணுவில் பிள்ளையார், இணுவில் கந்தசாமி என்ற பழம் பெரும் கோவில்களும் உள்ளன.
மாவிட்டபுரம் (தரிசனநாள்-12.9.23)
சைவசமய திருத்தலங்களில் மிகவும் பழமையானது இந்த கோவில். இதன் வரலாறு நகுலேஸ்வரத்துடன் தொடர்புடையதாக உள்ளது. மாருதபுரவீகவல்லீ என்ற இளவரசியின் குதிரை முகம், இத்தல ஈஸ்வரனால் நீங்கப்பெற்றார் என்று பார்த்தோம். ஒரு முனிவரின் வழிகாட்டலின் படி இந்த மாவிட்டபுரம் கந்தசாமியையும் வழிபட்டார். பின் அவரின் அறிவுரைப்படி இந்த கோவிலை கட்டி குடமுழுக்கும் செய்துவித்தார். மதுரையில் இருந்து கருங்கல், சிற்பகலைஞர்கள் என்று அனைத்தையும் தருவித்தார். இக்கோவிலின் அர்சகரும், மதுரையில் இருந்தே அழைத்துவரப்பட்டனர். இவர்களின் சந்ததியினரே இன்றளவும் பூஜை செய்து வருகின்றனர். 5000 ஆண்டுகள் பழமைவாய்ந்தது என்று வரலாறு கூறுகிறது. மா-குதிரை, விட்ட-விலகிய, புரம்-புனிதநகரம். என்பதே இந்த ஊர் பெயர் காரணம். 2011 டிசம்பர் மாதம் முதல் இந்த கோவில் இலங்கை தொல்லியல் பாதுபாப்பு சின்னமாக அறிவிக்கப்பட்டது.
கண்டி முருகன் கோவில் (தரிசனநாள்-14.9.23)
இந்த கோவில் பற்றிய ஒரு சிறிய விளக்கம், கண்டி என்ற இடத்தில் உள்ள முருகன், கோவில் கதிர்காமதேவாலயம் என்று அழைக்கப்படுகிறது. கதிர்காமம் என்ற இடத்திலும் ஒரு முருகன் கோவில் உள்ளது. கண்டிக்கும், கதிர்காமம் என்ற ஊருக்கும் குறைந்தது 300 கி;மீ. தொலைவு இருக்கும். நரேந்ரசின்ஹா என்ற அரசரால் இந்த கோவில் கட்டப்பட்டது. 1707 முதல் 1739 வரை இவரின் ஆட்சி காலம். இந்து மக்களுக்காக இந்த கோவிலும், பௌத்த மக்களுக்காக தலிதமாளிகாவும் கட்டப்பட்டது.
கதிர்காமம் முருகன் கோவில்.
இந்த ஆலயமும் நரேந்ரசின்ஹா என்ற மன்னராலரயே கட்டப்பட்டது. இந்த தலமுருகனின் பெயர் “ஸ்கந்தர் (எ) கதிகாமர். 14 ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட இந்த கோவில் வெற்றியை குறிக்கும் என்று கூறுகின்றனர். போருக்கு செல்வதர்க்கு முன்பும், நற்காரியங்கள் செய்வதற்க்கு முன்பும் அந்த இறைவனை வணங்குவதை வழக்கமாக்கி கொண்டனர். இந்த கோவிலின் வளாகத்தின் உள்ளே புத்தமடாலயமும் உள்ளது. இந்த மடாலயம் 1880-ல் கட்டப்பட்டதாம். மடாலய வழிபாட்டின் ஒலியை நான் பதிவிடும் காணொளியில் கேட்கலாம். சிங்களர்களே இறைவனுக்கு பூஜை செய்கின்றனர். வெள்ளை வேட்டி வெள்ளை சட்டை அணிந்துள்ளனர்.
கதிரமலை.
கதிர்காமத்திற்க்கு மிக அருகில் அமைந்துள்ள ஒர் மலை முருகன் கோவில். இந்த மூன்று ஆலயங்களின் வரலாறும் கோவிலில் உள்ள வரலாற்று பலகையை அடிப்படையாக கொண்டு எழுதியுள்ளேன். “துட்டுகெமுனு” என்ற மன்னர் நாட்டை கைபற்றுவதற்க்கு முன்னர். கதிர்காமத்திற்க்கு வந்து ஒரு நேர்த்தி கடன் வைத்தார். நாட்டை கைபற்றிய பின் கதிரமலைக்கு வந்து நேர்தி கடன் செய்தார். கதிர்காம ஸ்கந்தன் கோவிலை சுத்தபடுத்தும் நேரத்தில், கதிரமலையின் உச்சிக்கு வருவதற்க்கு கடினமாக இருந்ததால், ஈட்டியை எரிந்து அது விழுந்த இடத்தில் ஆலயம் கட்டுமாறு பணித்தார்.
இந்த மூன்று கோவில்களிலும் முருகன் வள்ளி, தெய்வானையுடன், மயில் ஆசனத்தில் அமர்ந்திருக்கும் “திரைசீலையே” பிரதான கடவுளாக வணங்குகின்றனர்.
No comments:
Post a Comment