காலிகோட்டை (Galle fort). (பயணநாள் 15.9.23)
இந்த கோட்டை 17ஆம் நூற்றாண்டில் டச்சுகாரர்களால் கட்டப்பட்டது. 430 ஆண்டுகளுக்கு பிறகும், வரலாறு, மற்றும் கட்டிடகலை தொல்பொருள் சின்னமாக விளங்கிவருகிறது. தொல்பொருள் துறையினரால் மெருகூட்டப்பட்டு சிறப்பாக காட்சியளிக்கிறது. சுற்றுலாவை இலங்கை மையமாக கொண்டுள்ளதால், சிறப்பு கூடுகிறது. இந்த இடத்தில் உள்ள கட்டிடங்களுக்கு இன்றளவும், டச்சுகாரர்களும், இலங்கையினரும் உரிமையாளர்களாக உள்ளனர். கட்டிடங்கள், தெருக்கள், ரயில்நிலையம் என்று பல இடத்திற்;கும் “காலி” என்ற பெயர் சூட்டப்பட்டுள்ளது இதன் முக்கியத்தை உணரமுடிகிறது.
கன்யா வெண்ணீருற்று Kanya Hot Springs (பயணநாள் 13.9.23)
தரிகோணமலையில் அமைந்துள்ளது. சதுர வடிவில் ஏழுகிணறுகள் உள்ளன.இந்த ஊற்று ராவணனால் உருவாக்கப்பட்டதாகவும், கூறுகின்றனர். ராவணன் அவரின் பெற்றோர்களுக்கு ஈமக்கிரியை செய்யும் நேரத்தில், நீராடுவதற்காக உருவாக்கினான், என்றும், இலங்கை பாரம்பரிய புத்தகங்கள் குறிப்பிடுகின்றன. இதைதொடர்ந்து இடிந்த நிலையில் புத்தமடாலயம் ஒன்று உள்ளது. இந்தநீருற்று புத்த பிச்சுகளின் பயன் பாட்டிற்காக உள்ளதாக கூறப்பட்டு வநத்து. 1955-ல் வெளியிட்ட கையேட்டில், இந்த 7 நீர்ஊற்றுகள் இந்து, பௌத்தம், இஸ்லாமியர்கள் இவர்களின் புனிதமான இடமாக குறிப்பிட்டுள்ளது.
சுதந்தர நினைவு மண்டபம். Independence Squere Colombo. (பயணநாள் 16.9.23)
கொழும்பு, இலவங்கப்பட்டை தோட்டத்தில் சுதந்திர சதுக்கத்தில் இந்த இடம் அடைந்துள்ளது. 1955-ல் இந்த கட்டிடம் நிறைவுப்பெற்றது. 10.000 சதுரஅடி நிலப்பரப்பில் அமைக்கப்பட்டுள்து. மாண்புமிகு ஸ்டீபன்சேனநாயகா என்ற இலங்கையின் முதல் பிரதமர் சிலையும் அமைக்கப்பட்டுள்ளது. தற்பொழுது தேசிய கொண்டாட்ட இடமாக உள்ளது.
யாழ்ப்பாண நூலகம். Yazhpanam Library
1983 - இனக்கலவரத்தில் தீக்கிறையானது. தற்பொழுது மீண்டும் புனரமைக்கப்பபட்டுவருகிறது.
கொழும்பு தாமரை கோபுரம். Colombo Lotus Tower.
கொழும்பில் அமைந்துள்ள 1,153 அடி கோபுரம். 2019 ஆம் ஆண்டு நிலவரப்படி, தெற்காசியாவின் மிக உயரமான சுய ஆதரவு கோபுரம். இதன் மதிப்பு, டாலர் கணக்குப்படி 113 மில்லியன் டாலர்கள். தகவல் தொடர்பு, மற்றும் கண்காணிப்பிற்கு பயன் படுத்தப்படுகிறது.
Srilanka Currency
No comments:
Post a Comment