புனர்ருத்ராண் வித்யாபீடம் (பயிற்சி வகுப்பு -6.7. முதல் 10.7.25 வரை)
ஆச்சார்ய அத்யயன் யோசனா (நல்லாசிரியர் பயிற்சி திட்டத்தின் என்னுடைய கல்வியின் தொடர்ச்சி)
இத்திட்டத்தின் படி ஆண்டுக்கு ஒரு முறை இந்த நேரடி பயிற்சி வகுப்பு, குஜராத் மாநிலம், அகமதாபாத்தில் நடைபெறும். இந்த ஆண்டு தென் பகுதி மக்களின் எண்ணிக்கை காரணமாக பெங்களுர், மகடி சாலையில் அமைந்துள்ள, “ஜெனசேவா வித்யகேந்ரா” என்ற இடத்தில் 5 நாட்களுக்கு நடைபெற்றது.
நான் தற்சமயம் பெங்களுரில் என் மகனுடன் வசிப்பதால், எனக்கு இந்த வாய்ப்பு மிக எளிதாக கிடைத்து. நான் தழிழ்நாட்டை கடந்து தனியாக பயணம் செய்த அனுபவமும் கிடைத்தது.
நாள் -1
ஞாயிறு அதிகாலை நான் கிளம்புவதாக தீர்மானித்த எனக்கு, இரவு, செல்ல வேண்டாம் என்ற மனநிலைஉருவாகியது. ஏன் செல்ல வேண்டாம் என்று தோன்றுகிறது என்பதை நன்கு ஆழ்ந்து யோசனை செய்ததில், பயணபயம் என்பதை உணர்ந்து, பின் என்னுடைய பயஉணர்வை தவிர்த்து கிளம்பினேன்.
காலை ஒன்பது மணிக்கு எங்களின் நிகழ்ச்சி தொடங்கியது, என்னுடைய தயக்கம் காரணமாக இரண்டு மணிநேரம் தாமதமாக நான் சென்றேன். இதனால் “வேதவிக்யான் குருகுலம்” பார்க்கும் வாய்பை இழந்தேன். எங்களின் வகுப்பு எப்பொழுதும் போல் அதிகாலை 5.45 மணிக்கு ஹோமத்துடன் தொடங்கி, எங்கள் அத்யயனின் (கல்வியின்) அங்கமான பிட்சைக்கு(யாசகம்) சென்று தானியங்கள் வாங்கி வந்து சமையல் அறையில் சேர்த்து பின் காலை உணவை முடித்துக்கொண்டோம். இந்த முறை தாய் ஜி ஐந்து நாட்களும் ஆன்லைன் மூலமே வகுப்பு எடுத்தார், வழக்கமான ஹிந்தி மொழியில். இதை தொடர்ந்து பேராசிரியர்களின் ஆங்கில மொழி வகுப்பு, மற்றும் எங்களது குழு ஆசிரியர் திரு. வினோத் ஜியுடன், கருத்துரை, கலந்துரையாடல் என்று எங்களின் வகுப்பு சென்றது. எங்களின் முறைப்படி சமையல், நாங்கள் தங்கியிருந்த இடம் பராமரிப்பு, உணவு பரிமாறல், பாத்திரம் துலக்குதல் இவை அனைத்திலும் நாங்கள் குழுக்களாக பிரிந்து செயல் பட்டோம்.
பெங்களுரின் மறுபக்கம்
பெங்களுர் மென்பொருள் நிறுவனத்திற்கு புகழ்வாய்ந்தது, என்று தெரிந்த மக்களுக்கு மத்தியில், குருகுல கல்விக்கும் மையமாக திகழ்கிறது என்பதை அறியமுடிகிறது. பல குருக்குலம் இருப்பதை நான் அவர்கள் மூலம் அறிந்தேன். பெங்களுர் கோவில்கள் மற்றும் இயற்கைசிறப்பு வாயந்த இடங்களை மட்டுமல்லாது குருகுலங்களையும் பார்வையிட முடிவு செய்தேன்.
செயல்முறை பாடத்திட்டம்.
இதன் அடிப்படையில் பெங்களுரில் உள்ள “வித்ய ஷேத்ரம்” என்ற குருகுலம், மற்றும், “ஆனந்தவனம்”; என்ற வேதம் கற்பிக்கும் வேத பாடசாலைக்கு சென்றோம்.
குருபூர்ணிமா
மாணவர்களிடமிருந்து எந்த கட்டணமும் வசூல் செய்கூடாது என்ற புனர்ருத்ராண் வித்யாபீடத்தின் கொள்கைபடி, குருபூர்ணிமா அன்று மட்டும் மாணவர்கள், அவரவர் விருப்பதிற்கிணங்க அவர்களின் குருதட்சணையை சமர்பித்தனர்.
10.7.2025 வியாழன் மாலையுடன் எங்களின் வகுப்பு நிறைவடைந்தது.
என்னுடைய மெட்ரோ பயணம்
நாங்கள் தங்கியிருந்த அறை
தினமும் காலை 4.30 மணிக்கு எங்களின் அறையில் (Alaram) ஒலித்த பாடல்,
ஜெனசேவா வித்யா கேந்ரா புகைப்படம், மற்றும் கானொளி.
உணவருந்தும் நேரம்.
செயல்முறை வகுப்புக்கு செல்லும் பயணம்.
வித்ய ஷேத்ரம் குருகுலம்.
ஆனந்தவனம் புகைப்படங்கள் மற்றும் கானொளிகள்.
இந்த சுவாமியின் ஆதிஷ்டானம் இங்கு அமைந்துள்ளனர். அவர் பெஜாவர மடத்தின் பரம்பரையில் 32வது நபராக இருந்தார். இவர் நிறுவிய பூர்ணபிரஜ்ஞ வித்யாபீடம், 1956 ல் நிறுவப்பட்டு, ஹிந்து மத தத்துவ நூல்களை பாதுகாப்பதற்கும், பரப்புவதற்கான நிறுவனமாக விளங்குகிறது.
அதிகாலை நாங்கள் ஹோமம் செய்யும் கானொளி
வகுப்பு பிரியாவிடை குழு புகைப்படம்.
No comments:
Post a Comment