பெருங்குடி அகஸ்தீஸ்வரர்

 பெருங்குடி அகஸ்தீஸ்வரர். (தரிசனம் -12.3.2025)

அமைவிடம்

திருச்சியில் இருந்து வயலூர் செல்லும் வழியில், சோமரசம்பேட்டை என்ற இடத்திற்;கு அருகில் உள்ளது இந்த சிறிய கிராமம் பெருங்குடி.

கோவில் பற்றிய தகவல்கள்.  

கி;.பி.969ஆம் ஆண்டு, சுந்தரசோழனால் கட்டப்பட்ட கோவில்.  தொல்லியல்துறை கட்டுப்பாட்டின் கீழ் இயங்குகிறது இந்த கோவில். சுயம்பு லிங்கமாக தோன்றிய இந்த அகஸ்தீஸ்வரர் கோவிலில்,அம்மன் சன்னதி, சிறிய நந்தி மண்டபம், பலிபீடம், கொடிமரம், மற்றும் மகாகணபதி, வேங்கடவன், லெஷ்மி நாராயணன் என்று பிற கடவுள்களும் அருள்பாலிக்கின்றனர். வாராகி, வைஷ்ணவி, பிராமி இவர்களின் சிலைகளும் உள்ளன. 

அருணகரிநாதர் திருப்புகழ் பாட பெற்ற தலம்.

தெய்வானையுடன் காட்சி தரும் இந்த முருகனை அருணகிரிநாதர் பாடியுள்ளார்.

அற்புதம் நிகழ்திய அகஷ்தீஸ்வரர்

போசாள மன்னன் வீரராமநாதன் காலத்தில் கட்டபட்டது இந்த கோவில். கோவில் சிற்பம் செய்த சிற்பிகளுக்கு ஊதியம் கொடுக்கமுடியாத நிலையில் இருந்தது நிர்வாகம். ஆவ்வூரை சேர்ந்த மருதாண்டவர் என்பவர் மூன்று கழஞ்சி பொன் கொடுத்து உதவினார். இவரின் மகளுக்கு கண்பார்வை இல்லாமல் போனது. உடனே இந்த அகஷ்தீஸ்வரிடம் வேண்ட மீண்டும் பார்வை கிடைத்தது. மீண்டும் ஒரு கழஞ்சி பொன் கொண்டு தங்கப்பட்டம் செய்து மகிழ்வுற்றார் இறைவனுக்கு, என்று வரலாறு கூறுகிறது.

இத்தல புகைப்படங்கள்.


















No comments:

Post a Comment

சப்தமங்கைதலங்கள்.

  சப்தமங்கைதலங்கள். (தரிசனம்-13.7.2025)  அமைவிடம் கும்பகோணம் - தஞ்சாவூர் செல்லும் வழியில் உள்ள ஐய்யம்பேட்டை என்ற ஊரை சுற்றி அமைந்துள்ளது. ச...