வயலூர் (தரிசனம் 12.3.2025)
குமாரவயலூர் என்று அழைக்கப்படும் வயலூர் திருச்சியில் இருந்து 11கி.மீ. தொலைவில் உள்ளது.
பெயர் காரணம்
வயலுக்கு இடையில் இருந்த கரும்பை அகற்றும் நேரத்தில் ரத்தம் வந்ததைவைத்து, இங்கு சிவன் உறைந்திருப்பதை கண்டு, ஆதித்ய சோழநால் இந்த கோவில் கட்டப்பட்டது. வயலிடை கண்ட மூலவர் என்பதாலும், உய்யகொண்டான் ஆறு சூழப்பட்ட வயல்வெளியின் இடையில் அமைந்த தலம் என்பதாலும் வயலூர் என்ற பெயர் பெற்றது.
வரலாறு
ஆதித்த சோழனால் கட்டப்பட்ட சிவன் கோவில். சிவன் கோவிலில் உள்ள அனைத்து பரிவாரங்களுடன் இரண்டு பிராகாரம் கொண்ட கோவிலாக கட்டப்பட்டது. பின் காலத்தில் எழுப்பபட்டதே கோவில் கோபுரம். ஆதிநாயகி உடனுறை ஆதிநாயகனாக ஈசன் அருள்பாலிக்கிறார்.
திருப்புகழ் பாடல் பெற்ற தலம்.
திருவண்னாமலையில் அருணகிரிநாதரை தடுத்தாட்கொண்ட எம்பிரான். வயலூர் சிறப்பை கூறி, அருணகிரியாரை பாமாலை பாடவைத்தார். இக்கோவில் பொய்யாகணபதியை பாடியதே “கைத்தல நிறைக்கனி” என்ற திருப்புகழ்.
முருகன் சன்னதி
சிவன் கோவிலாக இருந்தாலும் பிரதான தெய்வமாக முருகப்பெருமானே உள்ளார். வயலூர் “முருகன் கோவில்” என்றானது. கந்த சஷ்டி, வைகாசி விசாகம், பங்குனி உத்திரம் இவைகளே பிரதான விழாக்கள் என்றானது. முருகன் சன்னிதானத்தில்தான் நாங்கள் வரிசையில் நின்று வழிபட்டோம்.
பொய்யாக்கணபதி
இந்த விநாயகர் கையில் விளாம்பழம் வைத்துள்ளார்.
உடல் மற்றும் மனம் சார்ந்த மாயை நீக்குவது என்ற பொருள்பட உள்ளதே இந்த விளாம்பழம். பொய்யான மாயையை அகற்றுவதால் இந்த தலம் முக்திதலம் என்று அழைக்கப்படுகிறது.
கிருபாணந்தவாரியாரின் அபிமான தலம்.
No comments:
Post a Comment