பாண்டிச்சேரி சித்தர்கள் (பகுதி-3)

  பாண்டிச்சேரி சித்தர்கள் (பகுதி-3) தரிசனம் நாள்- 6.4.2025

பாண்டிச்சேரி சித்தர் ஜீவ சமாதிகள் தரிசனம் தொடர்ச்சியாக இன்று நான்கு பீடங்கள் தரிசனம் செய்தோம்.

1.சிவ ஞான பால சுவாமிகள்.

அமைவிடம்

இ.சி.ஆர் சாலையில் பொம்மமையார்பாளையம் என்ற ஊரை தாண்டி சில மீட்டர் தொலைவில் பிரதான சாலையிலேயே இந்த சித்தர் பீடம் அமைந்துள்ளது.

அடிப்படை செய்தி

சிவ பூத கணங்களில் ஒருவரான சங்குன்னர் என்பவர், பால சித்தராக இங்கு கடும் தவம் புரிந்தார். அவர் தவத்தின் பயனாக வள்ளியும் தெய்வானையும் கன்னிகைகள் வடிவில் வந்தனர். ஒரு தந்தையாக இவர்களை வளர்த்து முருகபெருமானுக்கு மணம் முடித்துவைத்தார்.. இந்த சித்தரின் சன்னதி மயிலம் முருகன் கோவிலி; உள்ளது. இவரின் வழி வந்தவதவர்களே பொம்மபுர ஆதினம் ஆவார்கள். இவரின் ஆதிஷ்டானம் இந்த இடத்தில் உள்ளது.


















2. ஸ்ரீ சித்தானந்த சுவாமிகள்.

அடைவிடம்.

இ.சி.ஆர் காலையில் சிவாஜி சிலையை கடந்தவுடன், நான்கு ரோடு கூடும் இடத்தில் வலது புறம் அமைந்துள்ளது. எனக்கு தெரிந்தவரை புதுவையில் அனைவரும் அறிந்த இடம் இந்த சித்தானந்தர் கோவில்.

 அடிப்படை செய்தி.

 கடலூரின் அருகில் உள்ள வண்டிப்பாளையம் என்ற ஊரில் பிறந்தார். சிறவயது முதலே கடலூர் திருப்பாதிபுலியூர் இறைவன் மீது மிகுந்த பக்திகொண்டிருந்தார். இவரின் அம்மா திருப்பாதிரிபுலியூர் இறைவனுக்கு தினமும் பூ மாலை கொடுக்கும் தொழில் செய்து வந்திருந்தார். ஒருநாள் பூமாலையை மழை காரணமாக இறைவனிடம் சேர்க முடியாமல் போயிற்று. மழை நின்றவுடன் சென்றார். நடை அடைத்திருந்தார்கள். உடனே இந்த சித்த சிறுவன் மாலையை கோவில் கதவில் மாட்டிவிட்டு, இறைவா நீ எடுத்தக் கொள் என்று கூறி செல்கிறார். மறுநாள் காலை கோவில் அர்சகர் நடைதிறந்தவுடன், சிவனுக்கு சூட்டிய மாலையை பார்த்து அதிசயித்து, இந்த சிறுவன் ஒரு மகான் என்று கூறி அவனின் காலில் விழுந்து நமஸ்கரிக்கிறார். அன்று முதல் கடலூர் மற்றும் சுற்றுவட்டார மக்கள் அவர்கள் குறை தீர இவரை தரிசனம் செய்ய வருகின்றனர். 

புதுவையை சேர்ந்த குமாரசாமி பிள்ளை இவரை பாரக்க வந்து, இவரின் மனவி உடல் நலமின்மையை கூறி இவரை வேண்டுகிறார்.  குமாரசாமி, அவர் மனைவியை குணப்படுத்தியவுடன், அவருடன் புதுவையில் வந்து தங்க வேண்டுகிறார். இவ்வாறு தான் சித்தானந்த சுவாமி புதுவைக்கு விஜயம் செய்கிறார்.. ஒருநாள் பிள்ளையுடன் கருவடிக்குப்பம் செல்லும் சமயம் அவரின் தோட்டத்தை காண்பித்து தான் இங்குதான் ஜீவசமாதியடைய போவதாக கூறுகிறார். இதுவே சித்தனந்தர் கருவடிக்குப்பத்தில் சமாதியடைந்த வரலாறு.

இதுவே பாரதியாரின் குயில் பாட்டு உருவாகிய இடம் என்றும் சொல்லப்படுகிறது.

இந்த சித்தரை பற்றிய பாடல் ஒன்றும் பாரதியார் இயற்றியுள்ளார்.
















3. தொல்லை காது சித்தர்.

அமைவிடம்

மணக்குள விநாயகர் கோவில் பிரகாரத்தில், இந்த சித்தருக்கு, சிறிய மாடம் போன்ற சன்னதியுள்ளது. 

அடிப்படை செய்தி.

சிறுவயதில் தந்தையை இழந்த இவருக்கு, உரிய வயதில் தாய் திருமண ஏற்பாடு செய்தார். இவர் திருமணதில் விருப்பமின்மை காரணத்தால் அவர்களின் குலதெய்வமான அம்மனிடம் முறையிட்டார். முத்துமாரியம்மனை வேண்டிய பிறகு இவருக்கு ஞானம் கிடைத்தது. கடற்கரையில் உள்ள மனற்குளத்து விநாயகரை வழிபட்டு வந்தார். காதில் ஒரு பெரிய தொள்ளையுடன் இருந்ததால் தொள்ளைகாது சித்தர் என்று மக்களால் அழைக்கப்பட்டார். 



4. நாகலிங்க சித்தர்.

அமைவிடம்.

கொசக்கடைதெரு என்று அழைக்கப்படும் அம்பலத்தடையான் மடத் தெருவில் உள்ளது.  மிஷன்  வீதியில் உள்ள காளத்தீஸ்வரர் கோவிலுக்கு அம்பலத்தடையார்மடம் வீதியில் ஒரு வாயில் உள்ளது அதன் அருகில் உள்ளது, இந்த பீடம்.

அடிப்படை செய்தி

இங்குள்ள அம்மபலத்தில் ஆடும் மடம் என்ற  மடத்தின் 10 வது பரம்பரையான இந்த நாகலிங்கர், சிதம்பரம் கோவிலில், மாணிக்கவாசகர் அருளிய திருவாசகத்திற்கு, ஆபத்து வந்ததன் காரணமாக, திருவாசக ஏட்டு சுவடிகளை, பிணத்தை தூக்கி செல்வது போன்று பாடை கட்டி அந்த திருவாசக ஏட்டை இங்கு கொண்டுவந்து பாதுகாத்து பூஜித்து வந்தார். இன்றளவும் அந்த ஏடுகள் இங்கு பூஜிக்கப்பட்டு வருகிறது. நாங்கள் சென்ற நேரத்தில் இந்த திருவாசக பெட்டி பூஜை நடை பெற்றது. திருவாசம் பாதுகாத்து வரும் தங்க பெட்டியானது, சிவராத்திரி அன்று மட்டும் திறந்து பூஜை செய்யப்படுகிறது. இவரின் ஜீவ சமாதி இந்த மடத்தின் பின்புறததில் அமைந்துள்ளது.




முடிவுரை

நாங்கள் பாண்டிச்சேரியை விட்டு பயணிக்கும் காலம் வந்ததால், மீண்டும் புதுவைக்கு செல்லும் நேரத்தில் எங்களின்  சித்தர் பீட தரிசனம் தொடரும்.



No comments:

Post a Comment

சப்தமங்கைதலங்கள்.

  சப்தமங்கைதலங்கள். (தரிசனம்-13.7.2025)  அமைவிடம் கும்பகோணம் - தஞ்சாவூர் செல்லும் வழியில் உள்ள ஐய்யம்பேட்டை என்ற ஊரை சுற்றி அமைந்துள்ளது. ச...