சோழீஸ்வரர்.

 சோழீஸ்வரர். (தரிசனம் - 13.3.25)

அமைவிடம்

திருச்சியில் இருந்து 20கி.மீ. தொலைவில் உள்ளது துவாக்குடி. அங்குதான் உள்ளது இந்ததலம்.

நாங்கள் திருநெடுங்களம் தரிசனம் முடிந்து மலையடிப்பட்டி சென்றோம். துவாக்குடி வழியாக சென்றோம். இத்தலத்தை எங்கள் ஓட்டுனரே பரிந்துறை செய்தார்.

வரலாறு

இரண்டாம் குலோத்துங்க சோழன் கட்டிய கோவில். இந்த சோழனின் தங்கை கோமளவள்ளி. அவளுக்கு திருமணஏற்பாடு செய்ய ஜோதிடரிடம். ஜாதகத்தை காட்ட, அவர் நாகதோஷம் உள்ளது, என்று சொல்லி, அவரவர் நிலைமைக்கு ஏற்றவாரு பரிகாரமாக ஒரு சிவாலயம் கட்ட பணித்தார் ஜோதிடர். அவ்வாறு கட்டியதே இந்த ஆலயம்.

கோவில் சிறப்பு

இறைவன் சோழீஸ்வரர். 

குலோத்துங்கனின் தமக்கை பெயர் கோமளவள்ளி அதன் காரணமாக அம்மனுக்கு கோமளவள்ளி என்று பெயரிட்டான் அரசன். கோமளவள்ளி அம்மன் நான்கு கரங்களுடன், நின்ற கோலத்தில் அருள்பாலிக்கிறார்.  இரண்டுகரங்களில் தாமரை மலர்களும், இரண்டு கரங்களில் வரதம் மற்றும் அபயஹஸ்தமுமாக உள்ளார்.

கோவில் அமைப்பு  

நந்திகேஸ்வரரை கடந்த உடன், விசாலமான மண்டபத்தில் சோழீஸ்வரர் கிழக்குமுகமாக லிங்கவடிவத்தில் அருள்பாலிக்கிறார்.  நடராஜர், சிவகாமசுந்தரி, சூரியன், சந்திரன், விநாயகர், முருகன்,  போன்றோரும் காட்சி தருகின்றனர். 

பிரகாரம்

 (முதல் சுற்றில்) தட்சிணாமூர்த்தி, துர்கை சன்னதிகள் அமைந்துள்ளன. நாகதோஷத்திற்;கு சிறந்த பரிகார தலமாக விளங்குகிறது. அங்குள்ள பணியாளர்கள், தோஷநிவர்தியா? நான் அர்சகரை அழைக்கின்றேன் என்றனர். நாங்கள் இல்லை, இறைவனை வழிபட வந்தோம் என்று கூறிவழிபட்டு சென்றோம். ஓம்நமசிவாயா.

இத்தல புகைப்படங்கள்.














No comments:

Post a Comment

சப்தமங்கைதலங்கள்.

  சப்தமங்கைதலங்கள். (தரிசனம்-13.7.2025)  அமைவிடம் கும்பகோணம் - தஞ்சாவூர் செல்லும் வழியில் உள்ள ஐய்யம்பேட்டை என்ற ஊரை சுற்றி அமைந்துள்ளது. ச...