நாகநாதசுவாமி

 நாகநாதசுவாமி தரிசனம்-12.3.2025)

அமைவிடம்

திருச்சி நகர பகுதியில் அமைந்துள்ளது. மிக பழமையான கோவில். தாயுமானசுவாமிக்கு மிக அருகில் உள்ள கோவில். நாகநாசுவாமியும் தாயுமானசுவாமியும் கிழக்குமுகம் மற்றும் மேற்குமுகம் என்று எதிர்ரெதிரே உள்ளனர்.

வரலாறு

சாரமாமுனிவர் என்பவர், வயதான காரணத்தால் என்னால் தினமும் மலை ஏறிவந்து தாயுமானவரை தரிசனம் செய்ய முடியவில்லை என்று மிகவும் வருந்தினாராம். இதனால் தாயுமானவரே இங்கு நாகநாதசுவாமியாக காட்சிஅளிக்கிறார். 

இரண்டு நுழைவாயில்களை கொண்ட மிக பெரிய கோவில். ஆனால் நகரமயமாக்கலின் காரணமாக இக்கோவிலின் தோற்றம் சிறப்பை இழந்ததாக எனக்கு தோன்றியது. 

ஆனந்தவல்லி அம்மன் நின்ற கோலத்தில் காட்சி அளிக்கிறார்.

நாங்கள் தரிசனம் செய்தஅன்று மாசிமகமாக இருந்ததால். சிறப்பு வழிபாடு மற்றும் தேர் பவனி இருந்தது. சுப்ரமணியருக்கு அபிஷேகம் பார்க்கும் பாக்கியமும் பெற்றோம்.

நாகநாதர் பெயர் காரணம்.

நாககன்னிகைள் வழிபட்ட தலம் என்பதாலும், சாரமாமுனிவர் நாக உலகத்திற்கு தலமைவகித்ததாலும் இத்தல ஈஸ்வரன் நாகநாதர் என்று அழைக்கப்படுகிறார். இரண்டு தட்சிணாமூர்த்தி சன்னதிகளை கொண்ட இந்த கோவிலில், ஒரு.தட்சிணாமூரத்;தி பாம்பின் மீது அமர்ந்துள்ளார்.

இக்கோவில் புகைப்படங்கள்



















No comments:

Post a Comment

சப்தமங்கைதலங்கள்.

  சப்தமங்கைதலங்கள். (தரிசனம்-13.7.2025)  அமைவிடம் கும்பகோணம் - தஞ்சாவூர் செல்லும் வழியில் உள்ள ஐய்யம்பேட்டை என்ற ஊரை சுற்றி அமைந்துள்ளது. ச...