திருப்பட்டூர் பிரம்புரீஸ்வரர் (தரிசனம்- 11.3.2025)
முன்னுரை
என் கணவரின் நணபர், மகன் திருமண வரவேற்பிற்காக நாங்கள் திருச்சிக்கு பயணித்தோம். இந்த சந்தர்பத்தை பயன்படுத்தி, 22 திருத்தலங்கள் தரிசனம் செய்யும் பாக்கியம் பெற்றோம்.
தேஜஸ் விரைவுரயில்.
பயணத்தில் நான் மிகவும் விரும்புவது புகைவண்டி பயணத்தை, அதன் அடிப்படையில் அனைத்துவகையான புகைவண்டியிலும் நான் பயணிக்க விரும்புவேன். 2017 ஆம் ஆண்டு மே மாதம்,24 ஆம் தேதி மும்மை சத்திரபத்சிவாஜி ரயில் நிலையத்தில் இருந்து, கர்மலி என்ற (கோவா அருகில்) ரயில் நிலையம்வரை, செல்ல இந்த ரயில் சேவை தொடங்கப்பட்டது. மணிக்கு 130 முதல் 180 கி;மீ. வேகம் செல்லக்கூடியது. 2017-ல் இந்த தேஜஸ் பற்றிய சிறப்பு வீடியோ வாட்ஸ்அப்பில் அதிகமாக பகிரப்பட்டது. 2017-ல் செல்ல வேண்டும் என்று நினனத்து, 2025;-ல் பயணித்தேன். நான் எதிர்பார்த அளவு சிறப்பாக இல்லை. தாம்பரம்- திருச்சி ஜங்சன் பயணம். நபர்ஒருவருக்கு 850ரூ. கட்டணம். 6.30 மணிக்கு வண்டியில் ஏறியவுடன் டீ மற்றும் பிஸ்கட் கொடுத்தனர். காலை உணவு இட்லி, பொங்கல், வடை, சராசரி உணவாக இருந்தது. 10.15மணிக்கு அரை மணிநேரம் தமதமாக திருச்சியை அடைந்தது.
பிரம்மபுரீஸ்வரர் அமைவிடம்.
திருச்சி மாவட்டம், மணச்சநல்லூர் வட்டத்தில் அமைந்துள்ள இந்த கோவிலுக்கு, சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில், சிறுகனூர் வழியாக 32 கி.மீ. பயணித்து இந்த கோவிலை அடையவேண்டும்.
தேவார பாடல் பெற்ற தலம்.
சுந்தரரால் பாடப்பெற்ற தலம். பிடவூர் என்று அழைக்கப்பட்ட தலம்.
அம்மானே ஆகம சீலர்க் கருள்நல்கும்
பெம்மானே பேரருளாளன் பிடவூரன்
நம்மானே தண்டமிழ் நூற்புலவாணர்க்கோர்
அம்மானே பரவையுண்மண்டளி அம்மானே.
தலவரலாறு
ஐந்து தலை கொண்ட பிரம்மா செருக்கு காரணமாக சிவன் போன்று முத்தொழிலையும் செய்யவல்லவன் என்ற எண்ணம் கொண்டார். சிவன் பிரம்மாவின் ஒரு தலையை கிள்ளி எரிந்தார். இதனால் வருத்தம் அடைந்த பிரம்மா படைப்பு தொழிலை நிறுத்தினார். இதனால் உலக இயக்கம் நின்றது. பின் தவறை உணர்ந்து இந்த தலத்தில் 12 லிங்கங்களை பிரதிஷ்டை செய்து சிவனை வழிபடலானார். இவர் வழிபட்டதன் காரணமாகவே இத்தல சிவன் ஸ்ரீபிரம்மபுரீஸ்வரர் என்று அழைக்கப்படலானார்.
பிரதிஷ்டை செய்த லிங்கங்களின் பெயர்கள்.
1. ஸ்ரீ பிரம்மபுரீஸ்வரர்
2. ஸ்ரீ பழமலைநாதர்
3. ஸ்ரீ பாதாளஈஸ்வரர்
4. ஸ்ரீ சுத்தரத்தினேஸ்வரர்
5. ஸ்ரீ தாயுமானவர்
6. ஸ்ரீ சப்தரிஷீஸ்வரர்
7. ஸ்ரீ காளத்திநாதர்.
8. ஸ்ரீ ஜம்புகேஸ்வரர்
9. ஸ்ரீ கைலாசநாதர்.
10. ஸ்ரீ அருணாச்சலேஸ்வரர்.
11. ஸ்ரீ ஏகாம்பரேஸ்வரர்.
12. ஸ்ரீ மண்டுகநாதர்.
இந்த சன்னதிகள் அனைத்தும் அம்பாள் சன்னதியை அடுத்துள்ளது. அருகிலேயே பிரம்மதீர்தம் உள்ளது. இந்த இடம் நந்தவனத்துடன்; இயற்கைசூழலில் அமைந்துள்ளது.
பிரம்மாவுக்கு தனி சன்னதி அமைந்துள்ளது. இங்கு பிரார்தனை செய்து கொண்டால் மக்களின் தலை எழுத்தையே மாற்றும் சக்தி இந்த பிரம்மனிடம் உள்ளது. இதன் காரணமாக பக்தர்கள் அதிகமாக தரிசனம் செய்ய வருகின்றனர்.
கோவில் சிறப்பு
7 நிலை கொண்ட ராஜகோபுரத்துடன் அமைந்துள்ள கோவில். சூரியனின் ஒளிக்கதிர் இறைவன் மீது விழும்படி கட்டப்பட்டுள்ள கோவில். ஒருநாளைக்கு சூரியபகவான் ஏழு நிலைகளை கடந்து செல்கிறார். இந்த ஏழு நிலையிலும் சூரியபகவான் ஈஸ்வரனை தரிசனம் செய்கிறார். என்பதே கூடுதல் சிறப்பு. இதை தவிர பாஸ்கராய அபிஷேகம் என்று பங்குனி மாதம், 15,16,17 தேதிகளில் சூரியனின் ஒளிக்கதிர் ஏழு நிமடங்கள் பிரம்புரீஸ்வரர் மேல் விழும். பின்னர் அம்மாபாள் மீதும் ஏழு நிடங்கள் சூரிய ஒளிக்கதிர் விழுவதும் சிறப்பு. நான்கு தூண்களில் நரசிம்மர் சிற்பம் செதுக்கப்பட்டுள்ளது.
பதஞ்சலிமுனிவர் ஜிவசமாதி.
இவர் 10 இடங்களில் சமாதிஅடைந்தார் என்று சொல்லார்கள். இதில் இத்தலம் ஒன்று.
வியாக்ரபாதகருக்கும் ஜீவசமாதியுள்ளது.
சண்முகநாதர் சன்னதி
முருகப்பெருமான் அசுரர்களை அழிக்க இத்தலத்தில் படை திரட்டியதால் இந்த தலம் திருப்படையூர் என்று அழைக்கப்பட்டதாகவும் வரலாறு உள்ளது.
மாசாத்தய்யனார்.
அரசன் சேரமான் மற்றும் சுந்ததரும் கைலாயம் செல்லும் சமயம், சேரமான் அவர்கள் சிவபெருமானை பெண்ணாக உருவகப்படுத்தி, ஒரு சிற்றிலக்கியம் பாடுகிறார். சிவபெருமான் இதை பூலோக மக்களிடம் சேர்க்கவிரும்பி மாசாத்தய்யனார் மூலம் அனுப்புகிறார். மாசாத்தய்யனார் அந்த நூலை இத்தலத்தில் அருங்கேற்றுகிறார். இந்த அய்யனாருக்கு ஒரு கோவில் சிவன் கோவில் அருகிலேயேயுள்ளது.
இக்கோவில் புகைப்படதொகுப்பு.
No comments:
Post a Comment