கோவிலடி அப்பக்குடத்தான்.

  கோவிலடி அப்பக்குடத்தான். (தரிசனம் 13.3.2025)

அமைவிடம்.

திருச்சியிலி;ருந்து 16 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள கோவில்.

அப்பாலரெங்கன்

இக்கோவில் ரெங்கநாதர் அப்பால ரெங்கன் என்று அழைக்கப்படுகிறார். ஸ்ரீரெங்கநாதருக்கு அப்பால் (கடந்து, பிறகு, பின்) இருப்பதால்.

திருப்பூர்நகர் 

திருமழிசைஆழ்வார் அவர் எழுதிய பிரபந்தத்தில், இத்தலத்தை இவ்வாறு குறிபிட்டுள்ளார்.

சிறப்பு செய்தி.

1. 21 படிகள் அமைந்து இந்த கோவில் உயர்வாக கட்டியுள்ளனர்.

2. பஞ்சரெங்கத்தில் ஒன்றாக இந்த கோவில் அமைந்துள்ளது.

3. தினமும் இரவு நெய்அப்பம் நிவேதனம் செய்யப்படுகிறது.

4. பெரியாழ்வார், திருமங்கையாழ்வார், திருமழிசைஆழ்வார், நம்மாழ்வார் இவர்களால் மங்களாசாசணம் செய்யபட்ட திருத்தலம்.

5. பெரியாழ்வார் பெருமாளின் பாதகமல சரண் அடைந்த இடம்.

 தலபுராணம்.

உபமன்யு என்ற அரசன் துர்வாச முனிவரின் கோபத்துக்ஆளானான். ஆதன் காரணமாக உடல் பலத்தை இழந்தான். முனிவரிடம் முறையிட்டு தன்னுடைய பாவம் நீங்க பரிகாரம் கூறும்படி கேட்டான். இதறக்கு துரவாச முனிவர், ஒருலட்சம்பேருக்கு உணவளிக்கபணித்தார். இத்தலத்திலேயே தங்கி ஒரு லட்சம் பேருக்கு உணவளித்து வந்தான். ஒரு நாள் ஒரு முதியவர் தமக்கு மிகுந்த பசி என்று கூறிவந்தார். அவர்  அன்று  சமைத்திருந்த உணவு அனைத்தையும் உண்டுவிட்டு, தனக்கு பசி தீரவில்லை என்று கூறியவுடன். அசரன் மீண்டும் சமைக்க உத்தரவிட்டான். ஆனால் அந்த பெரியவதோ தனக்கு அதுரவரை பசி தாங்காது என்று சொல்லி, ஒரு குடம்நிறைய அப்பம் செய்து தரும்படி கேட்டார். உடனே அப்பம் செய்ய உத்திரவிட்டான் அரசன். அப்பம் ஒன்று தின்னஉடன் அரசனின் சாபம் நீங்கியது. வந்த முதியவர் ஸ்ரீமன்நாராயணன் என்பதை அறிந்து, அவர்காலில் விழுந்து வணங்கினான். என்பது வரலாறு. அன்று முதல் இரவில் அப்பம் செய்து நிவேதனம் செய்வது வழக்கமாகியது.

பள்ளிகொண்ட ரெங்கநாதர் ஒருகையில் அப்பக்குடத்தை வைத்திருக்கும் வடிவிலேயே வீற்றிருக்கிறார். 

கோவிலடியும் நானும்

திருக்காட்டுப்பள்ளி அஞ்சலகத்தில், என் தந்தை மூன்று ஆண்டுகள்பணிபுரிந்தார். அந்த சமயம் கோவிலடி அஞ்சல் அதிகாரி என்அப்பாவின் நண்பர் என்பதால் நான் பல முறை இந்த ரெங்கநாதரை சேவித்திருக்கிறேன். 

2020ஆம்   ண்டு எங்கள் தரிசன புகைப்படங்கள்








இத்தல புகைப்படங்கள்.









No comments:

Post a Comment

சப்தமங்கைதலங்கள்.

  சப்தமங்கைதலங்கள். (தரிசனம்-13.7.2025)  அமைவிடம் கும்பகோணம் - தஞ்சாவூர் செல்லும் வழியில் உள்ள ஐய்யம்பேட்டை என்ற ஊரை சுற்றி அமைந்துள்ளது. ச...