மலையடிப்பட்டி (தரிசனம் 13.3.2025)
அமைவிடம்.
புதுக்கோட்டை மாவட்டம், குளத்தூர் வட்டத்தில் அமைந்துள்ளது.
துவாக்குடி, பொய்யாக்குடி, செங்களுர் வழியாக தேசியநெடுஞ்சாலை 67-ல் பயணித்து, 16 கி.மீ. செல்ல வேண்டும்.
சிவன் மற்றும் பெருமாள் குடைவரை கோவில்.
வாசீகர் என்ற சிவனும், கண்;நிறைந்த பெருமாள், கண்திறந்த பெருமாள், அனந்தபத்மநாபசுவாமி என்று பலவாராக அழைக்கப்படும், கிடந்த கோல பெருமாள் கமலவள்ளி தாயாருடன் காட்சி தருகிறார்.
சிறப்பு.
கி.பி. 730 ஆம் ஆண்டு, பல்லவர் காலத்தில், குவான் சாந்தம் என்னும் முத்தரையரால் குடையப்பட்டது. சிவன் கோவிலுக்கு பின்பே பெருமாள் கோவில் குடையப்பட்டுள்ளது. கி;பி;9 ஆம் நூற்றாண்டில் ஆரம்பித்து 16 ஆம் நூற்றாண்டுவரை இக்கோவிலை குடைந்துள்ளனர்.
தொல்லியல் துறை நினைவுச்சின்னம்
பக்திக்காக மட்டுமல்லாது, கலைநயம்மிக்க இடமாக விளங்குகிறது. எங்கும்மில்லாத, சயனக்கோலத்தில் தாயாருடன் உள்ள பெருமாள் 15 அடி நீளத்;துடனும், நின்ற, அமர்ந்த கோலத்தில் உள்ள, பெருமாள், மற்றும் ஹயக்ரீவர், நரசிம்மன் என்று ஐந்து மூர்திகளை ஒருசேர தரிசிக்கும் பாக்கியம் கிடைக்கிறது. பெயர் போன்றே கண்ணுக்கு நிறைவாக கண்நிறைந்து பெருமாள் உள்ளார்.
மலையடிப்பட்டியும் நானும்.
இந்த மலையடிப்பட்டி எங்களின் பட்டியலில் இல்லை. என் கணவர் அவர் நண்பரிடத்தில் கைபேசியில் பேசும் போது, நாங்கள் திருநெடுங்களத்தில் உள்ளோம் என்ற உடன். மலையடிப்பட்டி செல்லுமாரு எங்களிடம் கூறினார். எனக்கு முதலில் இந்த பெயர் எங்கேயோ கேட்டது போல் இருந்தது. சில நிமிடங்களில் நினைவுக்கு வந்து வட்டது. இரண்டு ஆண்டுகளக்கு முன்பு எனக்கு இந்த மலையடிப்பட்டி பெருமாள் வீடியோ Whatsapp -ல் வந்தது. நான் என்ன ஒரு அழகான குடைவரை கோவில் என்று நினைத்து, கட்டாயக தரிசிக்க வேண்டும் என்று என் மனதில் குறிப்பிட்டுக்கொண்டேன். அது மட்டுமல்லாமல், இந்த வீடியோவை Computer - ல் சேகரித்து வைத்துக்கொண்டேன். அடிக்கடி இந்த Video பார்ப்பேன். மலையடிப்பட்டி வீடியோவை இந்த Blog-ல் வெளியிடுகிறேன்.
மலையடிப்பட்டி வீடியோவை
புகைப்படங்கள்.
No comments:
Post a Comment