உறையூர் நாச்சியார் கோவில்(தரிசனம்-12.3.2025)
திருச்சியை அடுத்துள்ள உறையூரில் மூன்று புகழ்வாய்ந்த கோவில்கள் உள்ளன.
1.உறையூர் நாச்சியார்கோவில், 2. உறையூர் வெக்காளியம்மன், 3. உறையூர் பஞ்சவர்ணேஸ்வரர்.
கமலவள்ளி நாச்சியார் அழகிய மணவாளர் கோவில் என்று அழைக்கப்படும் இந்த கோவில், திவ்ய தேசங்களில் ஒன்றாக உள்ளது. திருமங்கையாழ்வார் இத்தல பெருமானை ஒரே ஒரு பாசுரத்தல்; மங்களாசாசணம் செய்துள்ளார்.
வரலாறு.
சோழவம்சத்தை சேர்ந்த தர்மவர்மன் என்ற அரசன் குழந்தை வரம் வேண்டி ஸ்ரீரங்கநாதரை பிரார்தனை செய்து வந்தான். குளத்து தாமரை அருகில் ஒரு பெண் குழந்தையை கண்டெடுத்து இறைவன் அருளிய குழந்தையாகவே வளர்த்து வந்தான். பருவவயதை அடைந்தவுடன் அந்த கமலவள்ளி இறைவன் ரெங்கநாதரையே மணந்தார்.
கோவில் சிறப்பு
ஸ்ரீரங்கத்தை பார்த்தவண்ணம் இந்த கோவில் வடக்குமுகமாக அமைந்துள்ளது. ராஜகோபுரத்தில், நாச்சியார் திருமணகோலம் செதுக்கப்பட்டுள்ளது. கோவில் கிழக்கு பகுதியில் பெருமாள் மற்றும் நாச்சியார் திருமணகோலம் உள்ளது. இதில் முப்பதுமுக்கோடி தேவர்கள் சிற்பமும் உள்ளது.
திருப்பாணாழ்வார் அவதார தலமாக இந்த இடம் அமைந்துள்ளது.
இறைவன் திருகல்யாண உற்சவம் பங்குனி மாதம், பிரம்மோர்சவமாக கொண்டாடப்படுகிறது.
கருடன், நம்மாழ்வார், திருப்பாணாழ்வார், உடையவர் (ராமானுஜர்) ஆகியோருக்கு தனி தனி சன்னதிகள் உள்ளன.
இத்தல புகைப்படங்கள்
No comments:
Post a Comment