பூலோகநாதர்

 பூலோகநாதர் (தரிசனம் 12.3.2025)

அமைவிடம்

திருச்சி மாநகரத்திலேயே அமைந்துள்ள 1000 ஆண்டுகள் பழமையான ஒருசிவன் கோவில்.

எங்கள ஓட்டுனரின் பரிந்துரையில் நாங்கள் சென்ற கோவில். முன்று நிலை ராஜகோபுரம், ஓருசுற்று கொடி மரம் மற்றும் நந்தியை உள்ளடக்கியது இந்த கோவில். 

ஜெகதாம்பிகை.

புலோகநாதர் சமேத ஜெகதாம்பிகை, நான்கு கரங்களுடன் அருள்புரிகிறார். மேல் இரண்டுகரத்தில், பத்மம் மற்றும் அல்லி மலர்களும், கீழ் இரண்டு கரங்களில், அபய, வரதஹஸ்தமுடன் தரிசனம் தருகிறார். முதல் பிரகாரத்தில் வன்னி விநாயகர், சப்தகன்னிகைகள், காசிவஸ்வநாதர், ஆஞ்சநேயர், வள்ளி தெய்வாhனை, சமேத சுப்ரமணியர், சண்டிகேஸ்வரர், நவகிர கங்கள், மற்றும் காலபைரவருக்கு  சன்னதிகள் இருந்தன. 

கோவில் சிறப்பு

சிவவிருட்சம் என்று சொல்லக்கூடிய வில்வமரம், மகிழமரம், அத்திமரம், வன்னிமரம், குருந்தைமரம் இக்கோவிலில் ஒன்றாக தரிசனம் செய்ய முடிகிறது. நாங்கள் தரிசனம் செய்ததன்று மாசிமகம், இதன் காரணமாகவே, இந்த கோவிலும் நாகநாதரும் தரிசனம் செய்யமுடிந்தது. ஓம்நமசிவாயா.

இத்தல புகைப்படங்கள்.

















No comments:

Post a Comment

சப்தமங்கைதலங்கள்.

  சப்தமங்கைதலங்கள். (தரிசனம்-13.7.2025)  அமைவிடம் கும்பகோணம் - தஞ்சாவூர் செல்லும் வழியில் உள்ள ஐய்யம்பேட்டை என்ற ஊரை சுற்றி அமைந்துள்ளது. ச...