மேட்டழகிய சிங்கர்

 மேட்டழகிய சிங்கர். (தரிசனம் 13.3.2025)

அமைவிடம்

ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில், தாயார் சன்னதிக்கு எதிரில் அமைந்துள்ள நரசிம்மர் சன்னதி.

நாங்கள், ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் அருகில் தங்கி இருந்ததால் ரெங்கநாதர் தரிசமே அரைநாள்ஆகிவிடும் என்பதாலும், நாங்கள் மேட்டழகிய சிங்கர், காட்டழகியசிங்கர், ஆற்றழகியசிங்கர் தரிசனம் என்ற அட்டவணையிட்டிருந்தோம். இந்த மூன்று நரசிம்மர்களையும் ஒருசேர தரிசனம் செய்தால், ஜென்மபாவம் நீங்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

மேட்டழகியசிங்கர்.

தயார் சன்னதிக்கு சென்று தரிசனம் செய்தோம், தாயார் சன்னதிக்கு எதிரில் உள்ளது கம்பராமாயண மண்டபம். மண்டபத்திற்கு எதிரே 15 படிகள் உயரத்தில் இந்த நரசிம்மர் சன்னதியுள்ளது. நரசிம்மர் மிக உக்ரமாக உள்ளார் என்பதால் அவருக்கு நெற்றிகண்னும் இருந்தது. கம்பராமாயணம் அரங்கேறிய நேரத்தில், இந்த நரசிம்மர் கர்ஜனை செய்து, ராமாயண கதையை உண்மை என்று ஆமோதித்தார், என்று இந்த சன்னதி பட்டாச்சார்யார் நமக்கு விளக்கம் கொடுத்தார்.

நாங்கள் தொடர்ந்து, பயணத்தில் இருந்ததால் மிகவும் களைப்பை உணர்ந்தோம். இதன் காரணமாக மற்ற இரண்டு சிங்கர்களையும் தரிசனம் செய்யவில்லை. காட்டழகியசிங்கரையும், ஆற்றழகியசிங்கரையும் தரிசனம் செய்த பின் பிளாக வெளியிடுகிறேன். 14.3.2025 காலை பல்லவன் ரயிலில் சென்னை சுபமாக வந்து சேர்ந்தோம். 

இத்தல புகைப்படங்கள்.











No comments:

Post a Comment

சப்தமங்கைதலங்கள்.

  சப்தமங்கைதலங்கள். (தரிசனம்-13.7.2025)  அமைவிடம் கும்பகோணம் - தஞ்சாவூர் செல்லும் வழியில் உள்ள ஐய்யம்பேட்டை என்ற ஊரை சுற்றி அமைந்துள்ளது. ச...