உய்யகொண்டான்மலை (தரிசனம் - 12.3.2025)
அமைவிடம்
திருச்சிமாநகரத்திலேயே அமைந்துள்ள ஒரு மலைகோவிலாகும். நந்திவர்ம போத்தரைய பல்லவன் என்ற பல்லவ அரசனால் கட்டப்பட்ட கோவில். அப்பர், சுந்தரர், ஞானசம்மந்தர் என்று மூவராலும் பாடப்பெற்ற கோவிலாகும். திருப்புகழ் பாடப்பெற்ற தலம்.
வரலாறு
மார்கண்டேயன் தனக்கு 16 வயது என்ற விதியைநினைத்து, அனைத்து சிவபெருமான் கோவிலுக்கும் சென்று வழிபடலானான். பல தலங்களில் வழிபட்ட மார்கண்டேயனின் பக்தியை நினைத்து, உயிரை காப்பாற்ற உறுதிகொடுத்ததலம் இந்த உய்யகொண்டான்மலை.
ஸ்ரீபாலாம்பிகை மற்றும் அஞ்சனாட்சி என்று இரண்டு அம்பிகை சன்னதி இத்தலத்தில் உள்ளது.
தரிசனம் செய்தவர்கள்.
நாரதர், உபமன்யு, மார்கண்டேயமுனிவர், கரன், திரிசரன், அருணகிரிநாதர் போன்றோர் இத்தல இறைவனை வழிபட்டு பேறு பெற்றனர்.
கோவில்தகல்கள்
தர்மபுரஆதினத்தின் கீழ் இயங்குகிறது இந்த ஆலயம். 64 படிகள் ஏறி இறைவனை தரிசனம் செய்ய வேண்டும். கோவிலில் நுழைந்த உடன் ஆறுமுகபெருமான் சன்னதி அமைந்துள்ளது. எதிரே ஞானவாவி தீர்த்தம் உள்ளது. மொத்தம் 5 தீர்தங்கள் உள்ளன. இடர்காத்தார், பிட்சாடனர், சந்திரசேகரர், அர்தநாரீஸ்வரர். என்று சன்னதிகளும் உள்ளன.
ஜேஷ்டததேவி சன்னதி.
![]() |
Jeshtadevi Shrine |
இத்தல புகைப்படங்கள்
No comments:
Post a Comment