பாண்டிச்சேரி சித்தர்கள் (பகுதி 2)- (தரிசன நாள் 30.3.2025)
முன்னுரை
சித்தர் பீடங்கள் தரிசனத்தின் தொடர்ச்சியாக நாங்கள், 30.3.2025 ஞாயிற்றுக்கிழமை பத்து சித்தர்களின் சமாதியை தரிசனம் செய்தோம்.
1. ஸ்ரீ சக்திவேல் பரமானந்த சுவாமி- காராமணிக்குப்பம்.
அமைவிடம்.
காராமணிக்குப்பம் ரயில்வே line தாண்டியவுடன், வலதுபுறத்தில் பிரதான சாலையிலேயே அமைந்துள்ளது.
அடிப்படை செய்தி.
கடலூரில் பிறந்த இவர் சிறுவயதிலேயே தந்தையை இழந்தார். சொத்து தகராறு காரணமாக குடும்பத்தில் எற்பட்ட சுழலை பார்த்து குடும்பத்தை விட்டே வெளியேறினார். பிராமண சமூகத்தில் பிறந்ததால் வேதம் மற்றும் உபநிஷதங்கள் நன்கு கற்றுத்தேர்ந் தார். எந்திரங்களை வைத்து அம்பிகையை பூஜித்தும் வந்தார். காசி, ஹரித்வார், பண்டரிபுரம், காஷ்மீர் இவைகளை சுற்றிவந்து, பின் புதுவையை வந்தடைந்தார். இவரும் மற்ற சித்தர்கள் போன்று பல அற்புதங்களை நிகழ்தியுள்ளார். இந்த பகுதியில் நெசவாலை வருவதையும், ரயில்பாதை வருவதையும் முன்கூட்டியே மக்களிடம் தெரிவித்துள்ளார். பல மக்கள் இவரை தரிசனம் செய்ய வருவார்களாம். அவர்களிடத்தில் அவர் சமாதியாகும் நாளை குறிப்பிட்டு அன்று வருமாறு பணித்துள்ளார். இவர் சமாதியின் மேல் லிங்கம் பிரதிஷ்டை செய்து மக்கள் வணங்கிவருகின்றனர்.
2. மண்ணுருட்டி சித்தர்.
அமைவிடம்
புதுவை பேருந்து நிலையம் பின்புறம் உள்ளது. பேருந்து நிலையத்தை தொடர்ந்து, Animal Husbandary அலுவலகத்தற்கு முன் உள்ள தெருவில் சென்றால் ஒரு சிறிய சந்தில் இந்த சித்தர் பீடம் அமைந்துள்ளது.
அடிப்படை செய்தி.
மனதை ஒருநிலை படுத்த கையில் மண்ணை எடுத்து உருட்டி கொண்டே இருந்ததால் இந்த பெயர் பெற்றாராம். Thirukovilur-ல் ஒரு வைணவ குடும்பத்தில் பிறந்தவர். கல்லூரியில் படித்த ஒரு பட்டதாரி. பட்டபடிப்பை முடித்தவருக்கு மனதிலும், அவரின் நடவடிக்கையிலும் ஒரு பெரும் மாற்றத்தை உணர்ந்தார். இதன் காரணமாக திருவண்ணாமலை சென்று தவத்தில் ஈடுபட்டார். அவரின் தாயார் விருப்பத்திற்கினங்க வீட்டிற்கு வந்தாலும், பெரும்பாலான நேரத்தை தவத்திலேயே கழித்தார். அம்மாவின் இறுதிசடங்கை முடித்துவிட்டு கடலூர் பயணித்தார். பின்னர் புதுவை வந்து சுவாமி சித்தானந்தர், சமாதியில் அமர்ந்து தனிமைபடுத்திக்கொண்டார். அவருக்கு காலம் வரும்நேரத்தில் புதுவை கோவிந்த சுவாமி தோட்டத்தில் ஜீவசமாதியடைந்தார். இந்த தோட்டமே தற்பொழுது நகர மயமாக்கலில் இவ்வாறுள்ளது.
3. வேலாயுதசுவாமி முத்தையால்பேட்டை.
அமைவிடம்
முத்தியால்பேட்டை, பாரதிதாசன் மகளிர் கல்லூரிக்கு எதிரில் உள்ள வசந்தநகர் பகுதியில் உள்ளது.
அடிப்படை செய்தி.
1892 ஆம் ஆண்டு பிறந்து 1962 ஆம் ஆண்டு ஜீவ சமாதி அடைந்தார். இளம்வயதில் விராலிமலையில், தாண்டவராயர் என்பவரிடம், 12 ஆண்டுகள் குருகுல முறையில் கல்வி பயின்றார். செட்டி தெருவில் ஒரு வீட்டில் பலமுறை சொற்பொழிவாற்றியவர். நடைபயணமாக பல இடங்களுக்கு சென்று வந்தவர்.
4. அக்கா பரதேசி சுவாமிகள்.
அமைவிடம்
வைத்திக்குப்பம் என்ற இடத்தில் அமைந்துள்ளது, இந்த கோவில். இந்த இடம் பாண்டியில் மிகவும் பிரபலமான ஒன்று.
அடிப்படை செய்திகள்.
19 ஆம் நூற்hண்டின் தொடக்கத்தில் இலங்கையில் உள்ள யாழ்பாணத்தில் பிறந்தார். மாசிலாமணி என்ற கண்ணையன் இளம்பருவத்திலேயே ஜோதிநிலையை அடைய யோகம் பயின்றார். சற்குருநாதர் என்று புகழ் பெற்ற இவர், மக்களால் ஏற்றுக்கொள்ள முடியாமல் பல இன்னல்களுக்கு ஆளானார். இலங்கையில் இருந்த நேரத்தில் மிகவும் பணம் படைத்தவர் இவர் மேல் கொதிக்ககும் அன்னத்தை கொட்டி அபிஷேகம் ஏற்றுக்கொள்ளுங்கள் என்று கூறி நகைத்தாராம். ஆனால் இவருக்கு எந்த துன்பமும் ஏற்படாததை கண்டு அவர் மகான் என்று புரிந்து பின் மன்னிப்பு கேட்டதாக இவரை பற்றிய ஒரு செய்தியுள்ளது. இலங்கையில் இருந்து புதுவைக்கு வந்த இவர், பிறரிடம் உணவை யாசகமாக பெற்று சாப்பிட்டு வந்தாராம். அப்பொழுது ஒரு பெண்மணி அவரை வேலை செய்து பிழைக்குபடி கூற, அதையே தெய்வவாக்காக பின்பற்றினாராம். செஞ்சியில் ஒரு காவலருக்கு பாதுகாப்பாளராக பணியாற்றிவரும் சமயம், அந்த காவலர் மீன் வாங்கி கொடுத்து அவர் வீட்டில் அதை சேர்த்து சமைத்துவைக்கும் படி கூறி இவரிடம் இந்த மீனை கொடுத்து அனுப்பினாராம். ஆனால் அவர் கொடுக்காமல் வேறொரு பெண்ணிடம் கொடுத்து மீனை பாதுகாக்கும் படி கூறினாராம். இரவு வீடு திரும்பிய காவலர், வீட்டில் மீன் கொடுக்காததை கண்டு இவரிடம் மிகவும் கோபமுற்றாராம். நாளைய பிணம், இன்றைய பிணத்தை திண்கிறது என்று கூறி, மீனிற்க்கு உயிருட்னார் எனறு அவர் நிகழ்திய ஒரு அற்புத செய்தியும் உள்ளது. இவரின் பிரதாண சீடர் நாராயணபரதேசி சுவாமிகள், இவரின் சமாதிக்கு மேல், நர்மதை நதியில் இருந்து கொண்டுவரப்பட்ட பாணலிங்கத்தை பிரதிஷ்டை செய்தார். பாலிண வேறுபாடு இன்றி அனைவரையும் அக்கா என்று அழைத்ததால் அக்கா பரதேசி என்ற பெயர் பெற்றார்.
5. நாராயணபரதேசி சுவாமிகள்
அமைவிடம்
வைத்திகுப்பத்தில் அமைந்துள்ள அக்கா பரதேசி சுவாமிகள் ஆலயத்தின் உள்ளேயே இவரின் சமாதியும் தனி சன்னதியாக அமைந்துள்ளது.
அடிப்படை செய்தி.
வைத்திகுப்பத்தில் உள்ள வம்பாகீரபாளையம் என்ற இடத்தில் மீனவ குடும்பத்தில் பிறந்த இவர், தெய்வ பக்தி நிறைந்தவராக விளங்கினார். ஒருநாள், கடலில் ஒரு பெரிய ஒளி தோன்றி, வைத்திகுப்பத்தில் உள்ள ஒரு அம்மன் கோவிலில் சென்று அங்கு இறைவழிபாடு செய்ய அந்த ஒளி வடிவஅம்பிகை பணித்தாள். இந்த அம்மனுக்கு மணோண்மனி என்று பெயரிட்டு பூஜித்து வந்தார். பின்னாளில் அந்த இடத்திற்கு ஒரு மகான் வருவார் என்றும், அவரையே குருவாக ஏற்றுக்கொள்ளவும் அந்த ஒளிபிழம்பு கூறியது. அந்தமாகானே அக்கா பரதேசி சுவாமிகள். இந்த நாராயண பரதேசி சுவாமிகளும், அவரின் குருநாதருக்கு அருகிலேயே சமாதியடைந்தார்.
6. கதிர்வேல் சுவாமி
அமைவிடம்
சித்தன் குடி பகுதியில் அமைந்துள்ளது. காமராஜ் சாலையில், உள்ள லீ ராயல் பார்க் நட்சத்திர ஹோட்டலை அடுத்துள்ள தெருவழியாக சென்றால், இந்த பீடத்தை எளிதில் அடைந்துவிடலாம்.
அடிப்படை செய்தி.
இந்த கதிர்வேல் சுவாமி அவர்களும் இலங்கை நாட்டின் யாழ்பாண நகரத்தை சேர்ந்தவர். அனைத்து ஆசைகளும், நீக்கி இறைவனை சரன் அடைதலே இவ்வுலகில் நிலையான ஒன்று என்பதை உணர்ந்து. இறைசிந்தனையில் அவரை ஈடுபடுத்திக்கொண்டார். புதுவையை வந்தடைந்து, சித்தன்குடி என்ற இடத்தில் தங்கினார். மிகுந்த மெல்லிய தேகமாக இருப்பாராம். ஒரு பாட்டியிடம் கிழங்கை கொடுத்து அதைஅவித்து தர சொல்லி மிக அபூர்வமாக உணவாக அருந்துவாராம். பிரஞ்சு அரசு அதிகாரிகள் கூட இவரை பார்தவுடன் தலையில் அணிந்திருக்கும் தொப்பிகை கழற்றி மரியாதை செய்வார்களாம். மிக குறைவாக பேசிவந்த இவர் வள்ளலாரிடம் தீட்ஷை பெற்ற பிறகு, முழுமையாக பேசுவதை நிறுத்திவிட்டாராம். சுப்ரமணிய பாரதியார் இவரை பற்றி பாட்டு எழுதியுள்ளதாக இந்த கோவில் குறிப்பு இருந்தது.1904 ஆம் வருடம் பிப்ரவரி மாதம் பௌர்ணமி அற்று சித்தியடைந்தார்.
7. சிவசடையப்பர்
அமைவிடம்.
புதுவை வழுதாவூர் சாலையில் உள்ள ராணி மருத்துவ மணை எதிரில் உள்ள ஒரு சிறிய தெருவில் அமைந்துள்ளது. காமராஜ் சாலை ராஜீவ்காந்தி சதுக்கத்திற்கு முன்பு உள்ள ரமண கேந்திரம் அருகில் உள்ள தெரு வழியாகவும் செல்லலாம்.
இவரை பற்றிய அடிப்படை செய்திகள் கூட பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.
8.கம்பளி சுவாமிகள்.
அமைவிடம்
தட்டாஞ்சாவடி தொழிற்பேட்டை பின்புறம் அமைந்துள்ளது.
அடிப்படை செய்திகள்
1873 ஆம் ஆண்டு ஜீவ சமாதி அடைந்தார்..தற்பொழுது Doctor Ananda Balayogi என்பவர் பராமரிப்பு செய்து வருகின்றனர். இவர் ஆடையை துறந்து வாழ்ந்தார், அதன் காரணமாக இந்த பகுதி மக்கள் இவர் மீது ஒரு கம்பளியை துணியாக போர்த்தினர் இதன் அடிப்படையிலேயே கம்பளி சுவாமிகள் என்று மக்களால் அழைக்கப்படுகிறார். இந்த சுவாமிகள் மடம் மிகவும் இயற்கை சூழலில் ரம்யமாக அமைந்துள்ளது.
9. கணபதி சுவாமி
அமைவிடம்
ராஜீவ்காந்தி சிக்னலில் இருந்து இசிஆர் ரோடில் திரும்பிய உடன், வலது புறத்தில் உள்ள குடிமைபொருள் வழங்கல் அலுவலகத்ததை தொடந்து சென்றால் இந்த கணபதி சித்தர் பீடத்தை அடைந்து விடலாம். இந்த ஜீவ சமாதிக்கு இரண்டு நுழைவாயிலகள் உள்ளன.
அடிப்படை செய்திகள்.
1879 ஆம் ஆண்டு பிறந்தார். 2001 ஆம் ஆண்டு மக நட்சத்திரத்தில் ஜீவ சமாதியடைந்தார்.
10. லிங்க ஞான தேசிகர் சுவாமி
No comments:
Post a Comment