குருவாயூரப்பன் கோவில் தரிசனம் (12.3.3025)
12 ஆம் தேதி காலை எங்களின் தரிசனத்தை தொடங்கியவுடன், எங்களின் ஓட்டுநர் பரிந்துரையின் அடிப்படையில் முதலில் இந்த கோவிலுக்கு சென்றோம்.
முத்தரசநல்லூர் என்ற இடத்தில் இந்த கோவில் அமைந்துள்ளது. திருச்சியில்லிருந்து 4 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது.
நான்கு ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட புது கோவில். தனிபட்ட நபர் அவரின் கனவில் மகான் தோன்றி இக்கோவில் கட்ட பணித்ததாகவும்;; இதன் அடிப்படையில் கட்டிய கோவில் என்று இக்கோவில் வளாகத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது.
தனியார் கோவில் என்பதால் நன்கு பராமரிக்கப்படுகிறது. ;வளாகத்திலேயே ஒரு திருமணமண்டபமும் கட்டியுள்ளனர். உட்பிரகாரத்தில் சுவர் ஓவியம் செய்திருந்தது மிகவும் சிறப்பாக இருந்தது. இது கேரள மாநில பழமையான கோவிலில் இருப்பது போன்ற உணர்வை ஏற்படுத்தியது.
இத்தல புகைப்படங்கள்
![]() |
Kanchi Maha Periyava and Saibaba Shrine |
![]() |
Dinning Hall |
No comments:
Post a Comment