உறையூர் வெக்காளியம்மன். (தரிசனம்-12.3.2025)
திருச்சியில் இருந்து 6 கி.மீ. தொலைவில் உள்ள உறையூரில் மூன்று புகழ்மிக்க திருத்தலங்கள் அமைந்துள்ளன.
1.உறையூர் நாச்சியார், 2. வெக்காளியம்மன், 3. ஸ்ரீபஞ்சவர்ணேஸ்வரர்.
கோவில் வரலாறு
பராந்தக சோழன் ஆட்சிபுரிந்து வந்த காலத்தில் சாரமாமுனிவர் என்பவர், ஒரு நந்தவனம் (பூந்தோட்டம்)அமைத்து பூக்களைகளை தாயுமானவருக்கு அர்பணித்து வந்தார். அரசன் இந்த பூக்களை இவனுடைய மனைவி சூட்டிக்கொள் பயன்படுத்தினான். மன்னனிடம் இந்த செயல் தவறு என்று கூறினார். இவரின் கூற்றை அலட்ச்சியம் செய்தான் மன்னன். இதனால் கடும் கோபம்முற்ற சாரமாமுனிவர், இறைவனிடம் முறையிட்டார். கோபமுற்ற இறைவன் உறையூரேயே மணல் காற்று வீசி அழிய செய்தார். மக்கள் இந்த ஊரின் காவல் தெய்வமான வெக்காளியிடம் முறையிட்டனர். அம்மன் நிலவாகமாறி ஈசனின் கோபத்தை தனித்து, மக்களின் துயரை நீக்கினார்.
வெட்டவெளியம்மன்
அன்று முதல், மக்களின் வீடுகள் காற்றில் அடித்து சென்றதால் எப்படி துன்பட்டார்கள், அதுபோலவே நானும் வெட்ட வெயில் அமருவேன் என்று உறுதிபூன்டார். பின்னாளில் மேற்கூறை பலமுறை வேயப்பட்டும், அது தொடர்ந்து நிலையாக இல்லாமல் போனது. இதன் காரணமாக பிரதான அம்மன் சன்னதி வெட்டவெளியாகவே இருக்கும்.
வானமே கூறையாக உறைந்து இருக்கும் அம்மன், உடுக்கை, பாசாங்குசம், சூலம் இவற்றுடன் அருள்பாலிக்கிறார். வலதுகாலை மடித்து, இடதுகாலை அசுரன் மீது வைத்து அமர்நத நிலையில் காட்சி தருகிறாள்.
அம்மன் சன்னதியை சுற்றி ஒரு மண்டபம் மட்டுமே உள்ள, சிறய கோவிலாக இருந்தாலும், விஸ்வநாதர், விசாலாட்சி, காத்தவராயன், பெரியண்ணன், மதுரை வீரன், பொங்குசனீஸ்வரர், நவகிரசன்னதி என்று பிற சன்னதிகளும் அமைந்துள்ளது.
இக்கோவில் புகைப்படதொகுப்பு.
No comments:
Post a Comment