பஞ்சவர்ணேஸ்வரர்( தரிசனம் - 12.3.2025)
திருச்சியில் இருந்து 6 கி.மீ. தொலைவில் உள்ள உறையூரில் மூன்று புகழ் பெற்ற ஆலயங்கள் உள்ளன. 1. உறையூர் நாச்சியார் கோவில், 2. வெக்காளியம்மன் 3. பஞ்சவர்ணேஸ்வரர்.
பெயர் காரணம்.
உத்தங்க முனிவரும் அவரது மனைவியும் கங்கையாற்றில் நீராடிய சமயம் முனிவரின் மனைவி, முதலையால் இழுத்து செல்லபட்டார். முனிவராக இருந்து ஞானம் இருந்தாலும், முனிவர் பித்தாக பல கோவிலுக்கு சென்றார். இக்கோவில் இறைவர் இவருக்கு காட்சி கொடுத்து ஆட்கொண்டார்.
உத்தங்க முனிவருக்கு ஐந்து காலங்களில் ஐந்து வண்ணங்களில் காட்சி தந்த தலம்.
1. காலை – ரத்தினலிங்கம்.
2.உச்சிகாலம் - ஸ்படிகலிங்கம்.
3. மாலை – பொன்லிங்கம்.
4. முதல் ஜாமம் - வைரலிங்கம்.
5.அர்தஜாமம் - சித்திர லிங்கம்
ஆடி மாதம் பௌர்ணமியில் இந்த காட்சி கொடுத்தமையால். ஆடிமாத பௌர்ணமி சிறப்பாக கொண்டாடப்படுகிறது. ஒவ்வொரு பௌர்ணமியுமே சிறப்பு அபிஷேகம் செய்யப்படுகிறது. இந்ததல இறைவனை தமிழில் ஐவண்ணநாதர் என்று அழைக்கன்றனர். ஐ என்பது ஐந்து எனப்படுகிறது. ஞான சம்மந்தரால் பாடப் பெற்ற தலம்.
தலபுராணம்.
கோழியூர் என்று அழைக்கப்பட்டு வந்த இந்த ஊரை வீரவாதித்தன் என்ற அரசன் ஆட்சிபுரிந்துவந்தான். உலாவரும் நேரத்தில் இவன் வந்த யானைக்கு மதம் பிடித்தது, ஒரு கோழிவந்து யானைமீது அமர்ந்து அதனை கொத்தி, மதத்தை தனித்தது. பின்னர் அந்த கோழி அருகில் இருந்த ஒரு வில்வமரத்தின்அடியில் சென்று மறைந்தது. அந்தவில்மரத்தடியில் இருந்த லிங்கத்தை கண்ணுற்ற அசரன் அங்கேயே ஒரு கோவில் கட்டினான் என்பதே இத்தல வரலாறு.
இக்கோவில் புகைப்படங்கள்.
No comments:
Post a Comment