அம்பில், சுந்தர்ராஜபெருமாள். (தரிசனம் - 13.3.2025)
அமைவிடம்
திருச்சி மாவட்டம், லால்குடி வட்டத்தில் அமைந்ததுள்ள ஒரு சிறிய ஊர்.
இங்கு மூன்று திருத்தலங்கள் மிக புகழ்பெற்று விளங்குகின்றன. 1. சுந்தரராஜபெருமாள் என்ற திவ்யதேசம், 2. அம்பில் ஆலந்துறையார் என்ற தேவாரபாடல்பெற்ற திருத்தலம், 3. அம்பில் மாரியம்மன்.
கோவில் சிறப்பு.
18 ஆம் நூற்றாண்டில் சோழர்களால் கட்டப்பட்ட கோவில். திருமழிசையாழ்வாரால் மங்களாசாசணம் செய்யபட்ட திவ்யதேசம்.
பஞ்சரங்க தலத்தில் ஒன்றாக உள்ள பள்ளிகொண்ட பெருமாள்.
இரண்டு நிலைகளில் அருள்பாலிக்கும்; ஆண்டாள்.
மண்டுக முனிவரின் சாபம் தீர்ந்த இடம்.
தற்சமயம் இந்த ஆலயம் பாலாலயம் செய்யப்பட்டுள்ளது. அதனால் நாங்கள் மூலவரை தரிசனம் செய்யமுடியவில்லை.
அம்பிலும் நானும்.
அம்பில் அருகில் உள்ள அரியூர் என்ற சிறிய கிராமம்தான், எங்கள் ஊர். ஆனால் என்னுடைய தாத்தா அவரின் 35 வயதிலேயே ரங்கூன் சென்று விட்டார். பிறகு நாங்கள் இங்கு செல்வதில்லை. என்னுடைய அப்பா நாங்கள் திருக்காட்டுப்பள்ளயில் இருந்த காலத்தில் எங்களை மாட்டு வண்டியில் இந்த ஊருக்கு அழைத்து சென்றார்.எங்களிடம் வண்டி மற்றும் மாடு கிடையாது. அவரின் நட்புவட்டத்தில் வாங்கி என் அப்பாவே வண்டியை ஓட்டினார் என்பதே என் நினைவலையில் உள்ள செய்தி.
இத்தல புகைப்படங்கள்
No comments:
Post a Comment