திருநெடுங்களம்

 திருநெடுங்களம் (தரிசனம்13.3.2025)

அமைவிடம்

திருச்சி துவாக்குடியில் இருந்து 5 கி.மீ தொலைவில் உள்ளது.

ஒளிமதிச்சோலை.

இந்த சோலையில் தவம்புரிந்து வந்த உமையை, கார்ந்தர்வதிருமணம் செய்ய முற்படுகிறார். இதனால் அச்சமுற்ற தேவி. இங்கு ஓடியொளிந்து கொண்ட இடம் மே இந்த தலம். நித்தியசுந்தரேஸ்வரர் ஒப்பிலாநாயகியாக இததலத்தில் மானிடர்களுக்கு அருள்புரிகிறார் ஈஸ்வரன்.

திருப்பணிசெய்தவர்கள்

ஆதித்த சோழன், உத்தமசோழன், ராஜராஜசோழன், முதலாம் ராஜ ராஜ சோழன், விஜயநனர பேரரசு அரசர்கள். சுந்தரபாண்டியன்,  முதலானோர்.

கோவில் சிறப்பு

ஞானசம்மந்தரால் பாடபெற்ற தலம். ஆடி மாதத்தில் சூரிய ஒளிக்கதர் இறைவன் மீது படும்படியான கட்டமைப்பு மற்றும் ஸ்ரீதேவி பூதெவி சமேத வரதராஜபெருமாள் சன்னதி.

இத்தலபதிகமும், நானும்

இத்தல பதிகம் இடர்களைபதிகம் என்று அழைக்கப்படுகிறது. இடர் என்றால் துன்பம் மற்றும் தடை என்று பொருள். நான்கு ஆண்டுகளுக்கு முன்பு, சோ.சோ.மீ சுந்தரம் அவர்களின் உரைகேட்ட பொழுது, அவரின் கைலாயயாத்திரை அனுபவத்தை பகிர்ந்து கொண்டார். தரிசனம் கிடைக்காத சூழ்நிலையில் அனைவரும் இந்த பதிகம் பாடியதாகவும் (படித்ததாகவும்) உடனே தடை நீங்கி தரிசனம் கிடைத்தது என்று தெரிவித்தார். அன்று முதல் நான் இந்த பதிகத்தை கற்றுகொண்டு, பெரும்பான்மையான நாட்கள் பாடிவிடுவேன். அதுமட்டுமல்லாது எங்களின் நான்காண்டு பயணஅனுபவத்தில் நான் பலமுறை இந்த பதிகம் பாடி நல்ல தரிசனம் கிடைக்கும் பாக்கியமும் பெற்றுள்ளேன். கைலாயயாத்திரை செல்லும் முன் இந்ததல நித்ய சுந்தரேஸ்வரரை தரிசனம் செய்ய நினைத்தேன். இப்பொழுதான் வாய்ப்பு கிடைத்தது. கூடியவிரைவில் கைலாயயாத்திரை செல்லும் பாக்யம் பெற ஈஸ்வரன் அருள்புரிவார்.

இத்தல புகைப்படங்கள்



















No comments:

Post a Comment

சப்தமங்கைதலங்கள்.

  சப்தமங்கைதலங்கள். (தரிசனம்-13.7.2025)  அமைவிடம் கும்பகோணம் - தஞ்சாவூர் செல்லும் வழியில் உள்ள ஐய்யம்பேட்டை என்ற ஊரை சுற்றி அமைந்துள்ளது. ச...