அம்பிலாந்துறையார் (தரிசனம்- 13.3.2025)
அமைவிடம்
திருச்சி மாவட்டம், லால்குடி வட்டத்தில் அமைந்ததுள்ள ஒரு சிறிய ஊர், இந்த அம்பில்.
இங்கு மூன்று திருத்தலங்கள் மிக புகழ்பெற்று விளங்குகின்றன. 1. சுந்தரராஜபெருமாள் என்ற திவ்யதேசம், 2. அம்பில் ஆலந்துறையார் என்ற தேவாரபாடல்பெற்ற திருத்தலம், 3. அம்பில் மாரியம்மன்.
இறைவன் சத்யவாகீஸ்வரர், பிரம்மபுரீஸ்வரர், என்ற பெயரிலும், அம்பிலாந்துறையார் என்ற திருபெயரிலும், அம்பிகை சௌந்தரநாயகி என்ற பெரிலும் அருள்பாலிக்கின்றனர்.
தேவாரத்திருதலம்.
அப்பர் மற்றும் ஞானசம்மந்தரால் பாடப்பெற்ற தலம்.
தரிசனம்செய்தோர்.
வாகீசமுனிவர், பிரம்மன், ஞானசம்மந்தர் நாவுக்கரசர், சேக்கிழார் போன்றோர் வழிபட்ட தலம்.
செவிசாய்தவிநாயகர்.
ஆற்று வெள்ளம் காரணமாக ஞானசம்மந்தர் தென்கரையில் பாடிய பாடலை, விநாயகர், தலையை சற்று சாய்தவாரு கேட்டமையால் செவிசாய்தவிநாயகர் என்று அழைக்கப்படுகிறார்
பராந்தகசோழன்.
பராந்தக சோழன் 108 அக்னிஹோத்ரம் செய்யும் பிராமணர்களை இவ்வூரில் குடியமர்தி, சாமவேதம் பாராயணம் செய் வைத்தார். இந்த வேதபாராயணத்தை விநாயகர் செவிசாய்து கேட்டாராம். வேதத்தின் எளிய வடிவமே தேவார திருவாசக பாடல்கள். வேதமே இறைவன் இறைவனே வேதம் இதன் காரணமாக ஈஸ்வரன் மற்றும் அம்பிகையும் சாமகாணபிரியர்கள் என்று போற்றப்படுகிறார்கள் .
இத்தல புகைப்படங்கள்.
No comments:
Post a Comment