பாண்டிச்சேரி சித்தர்கள் (பகுதி–1 )

 பாண்டிச்சேரி சித்தர்கள் (பகுதி–1 தரிசனநாள்-23.3.2025)



முன்னுரை

நாங்கள் பாண்டிச்சேரியில், 22 ஆண்டுகள் வசித்தும் இங்குள்ள அனைத்து சித்தர்களின் ஜீவ சமாதிகளையும்  தரிசனம் செய்யும் எண்ணம் ஏற்படவில்லை. பத்து சித்தர்கள் மிக பிரபலாம இருக்கின்றனர். அவர்களின் பீடங்களுக்கு சென்று தரிசனம்செய்துள்ளோம்.

தரிசனம் செய்ய வேண்டும் என்ற எங்களின் விருப்பத்திற்கிணங்க, எங்களுடன் பஞ்சகேதார் பயணம் செய்த சகபயணியான நண்பர், இந்த பீடங்களின் பட்டியலை எங்களுக்கு அனுப்பிவைத்தார். அந்த பட்டியலை அடிப்படையாக கொண்டு நாங்கள், சித்தர்பீட தரிசனத்தை தொடங்கினோம். இந்த பட்டியலில் 33 சித்தர்களின் பீடங்கள் இருந்தன. பீடங்கள் பெரும்பாலும் ஆதிஷ்டாணம் என்று சொல்ல கூடிய சிவலிங்கங்களே பிரதிஷ்டை செய்யப்பட்டிருந்தது.

நாள்- 1. 

1.தட்சிணாமூர்த்தி சித்தர்;

அமைவிடம்

பாண்டிச்சேரியில்லிருந்து விழுப்புரம் செல்லும் சாலையில் பள்ளிதென்னல் என்ற ஊருக்கான பெயர் பலகையை பார்த்த உடன், நெடுஞ்சாலையிலேயே  வலதுபுரம் பெயர் பலகை வைக்கப்பட்டுள்ளது. அந்த பெயர்பலகையில் இருந்து 100 மீ. தொலைவில் அமைந்துள்ளது. சித்தர் பீடம் வரை காரிலேயே செல்லலாம்.

அடிப்படை செய்தி

தட்சிணாமூர்த்தி என்ற பெயர் கொண்ட ஒரு சித்தமருத்துவர் இந்த பீடத்தை பராமரித்து வருகிறார். இந்த சித்தர்  ஜீவ சமாதி அடைந்தவர். இந்த இடத்தில் மூன்று சமாதிகள் அமைந்துள்ளன. அவர் பல அற்புதங்கள் செய்ததாக வாய்வழி செய்தியாக கூறுகின்றனர்.








2. ராமபரதேசி சித்தர் சுவாமிகள்.

அமைவிடம்.

வில்லியனூர் பிரதனநான்கு சாலை சந்திபில் அமைந்துள்ளது. பாண்டியில்லிருந்து விழுப்புரம் செல்லும் பொழுது அந்த பிராதன நெடுஞ்சாலையின் வலது புரத்தில் அமைந்துள்ளது. இடதுபுரம் உள்ளது வில்லியனூர் ஊருக்கு செல்லும் பாதை.  கார்பார்கின் செய்ய முடியாத இடம்.

அடிப்படை செய்தி.

180 ஆண்டுகளுக்கு மேற்பட்டது இந்த சித்தரின் பீடம். வில்லியனூர் என்பது வில்வவனமாக இருந்ததாம். இங்குள்ள வில்ல மரத்தடியில் அமர்ந்து, ராமநாமம் ஜபித்து வந்ததால் இப்பெயர் பெற்றாராம். இவரும் பல அற்புதங்கள் செய்ததாக கூறப்படுகிறது. 




3. தேங்காய் சுவாமிகள்.

அமைவிடம்.

பாண்டிச்சேரி விழுப்புரம் நெடுஞ்சாலையில், வில்லியனூரை அடுத்து சில மீட்டர் தொலைவில் வலதுபுரம் மின்நிலையம் அமைந்திருக்கும். (Electric Transformer) அதற்கு நேர்எதிரில் வலதுபுறத்தில் பிரதான சாலையிலேயே இந்த பீடம் அமைந்திருக்கும். 

அடிப்படை செய்தி

 வாய்வழி செய்தியும் சில Youtube செய்தியை அடிப்படையாக கொண்ட தகவலின் படி,

மக்களுக்கு சில செய்திகளை முன்கூட்டியே சொல்லி வந்தார் எனவும், அதை மக்கள் அலட்சியம் செய்தனராம். உதாரணமாக வில்லியனூர் பகுதியில் வரும் மழை பற்றியும் அதனால் ஏற்படகூடிய நட்டத்தைபற்றியும் எடுத்துரைதாராம். வழக்கம் போல் மக்கள் அதனை பெரிது படுத்தவில்லை. ஆனால் அது உண்மையாக நிகழ்ந்த பிறகு மக்கள் இந்த சுவாமிகளை தேடினார்களாம். பின்னர் அவரை பற்றி எந்த செய்தியும் கிடைக்கவில்லையாம். பின் பிரஞ்சுகாரர்கள் வந்து வில்லியனூரில் ரயில்நிலையம் கட்ட முற்பட்ட சமயம் இந்த இடத்தை தோண்;டும் போது, முதலில் ரத்ததைகண்டு, பின் தியான நிலையில்லியிருந்த இந்த சித்தரை மீட்டு, மருத்துவ பரிசோதனை செய்ததில் அவருக்கு உயிர் இருப்பது தெரிந்தது, பல நாட்கள் காத்திருந்தும் அவரின் தியானம் கலையாததால் இந்த இடத்தில் ஜீவசமாதி கட்டினர் என்பதே நான் தேடி தெரிந்து கொண்ட தகவல்கள். இதன் நம்பக தன்மைக்கு ஆதாரங்கள் என்னிடம் இல்லை.






4. மெய்ஞான ஞானதேசிகர்

அமைவிடம்

பாண்டிச்சேரி விழுப்புரம் தேசிய நெடுஞ்சாலையில் வில்லியனூ; என்ற ஊருக்கு இடதுபுறமாக திரும்பியவுடன். இடதுபுறமே 200மீ தொலைவில்  ஏகாம்பரநாதர் என்ற கோவில் உள்ளது. இந்த கோவிலில்  உள்ளது இந்த சித்தரிம் ஜீவ சமாதி.

ஆதாரத்துடன் உள்ள செய்தி.

ஆதாரம். கல்வெட்டு ஆய்வார் நா. வேங்கடேசன் அவர்களால் வில்லியனூர் வரலாறு என்ற நூலில் பதிபிக்கப்பட்ட செய்தி.

க.பி. 1563-ல் ஆட்சி செய்த விஜயநகர பேரரசர், மல்லிகார்சுண தேவ மகாராயர். என்பவர் இந்த வில்வநல்லூரில் கல்வி மடம் ஒன்று நிறுவினார்.  அந்த மடத்தில் 18 வது வயதில் முதல் ஆசிரியராக இந்த மெய்ஞான ஞானதேசிகர் நியமிக்கப்பட்டார். 120வது வயதில் இந்த இடத்தில் ஜீவ சமாதிஅடைந்தார்.





5. கோரக்கர்.

அமைவிடம்

வில்லியனூர் வழியாக உறுவையாறு என்ற இடத்திற்;கு செல்ல வேண்டும்.  உறுவையாறு என்ற ஆற்றின் பாலத்தை கடந்த உடன், இந்த பகுதி மக்களின் உதவியுடன் செல்லுங்கள். சித்தர் பீடம் வரை காரில் செல்லலாம். 18 சித்தர்களில் ஒருவர் இந்த கோரக்கர். இவரை பற்றிய செய்திகள் கிடைப்பது மிகவும் சுலபம். ஆர்வம் உள்ளவர்கள், இணைத்தை பாத்து தெரிந்கொள்ளலாம். 

அடிப்படை செய்திகள். 

அகத்தியர் மற்றும் போகரின் மாணவர். இவர் பிறந்த ஊர், நாகப்பட்டிணம் அருகில் உள்ள வடக்கு பொய்கை நல்லூர்.  கோயமுத்தூரில் உள்ள வெள்ளியங்கிரி மலையில் இவரின் இளமை பருவம் சென்றது. மருத்துவம், ரசவாதம், தத்துவம் போன்றவற்றைப்பறிய குறிப்புகளை மக்களுக்கு கொடுத்துள்ளார்.










 6. நவபாஷாணசித்தர்.

அமைவிடம்.

பாண்டிச்சேரி வில்லியனூர் வழியாக உறுவையாறு, பின் திருகாஞ்சி என்ற ஊர் உள்ளது. திருகாஞ்சி – முருங்கம்பாக்கம் வழிதடத்தில் உள்ளது இந்த கோவில். சாலையில் வலதுபுறத்தில் கோவிலுக்கும் செல்லும் வழி என்று  பெயர் பலகை இருக்கும். அதனுள் 500 மீ சென்றால் வயல்வெளியில் அமைந்துள்ளது.  காரில் செல்ல முடியும். ஆனால் அந்த 500 மீ. செல்ல அந்த பகுதி மக்களின் உதவி தேவை.

சித்தர் பற்றிய அடிப்படை செய்தி.

வடலூரை சேர்நத இவர் பல இடங்களுக்கும் சென்று பல சிவதலங்களை வழிபட்டுவந்தார். திருகாஞ்சியில் உள்ள விஸ்வநாதரை வழிபட்டவுடன், இந்த பகுதி மக்கள் உடல் நல குறைவால் துன்பப்படுவதை அறிந்து, அவர்களுக்கு, மருத்துவ உதவி செய்ய இந்த இடத்திலேயே  தங்கிவிட்டார். தைபூசதன்று பச்சரிசி கஞ்சி செய்து நிவேதனம்( படைப்பது) செய்வது வழக்கமாகிவிட்டது.








7. வண்ணார பரதேசி சுவாமிகள்.

அமைவிடம்.

நவபாஷரணசித்தர் மற்றும் வண்ணார பரதேசி சித்தர் கோவில் இரண்டும், 500 மீட்டர் தொiவில் மிக அருகருகே அமைந்துள்ளது. இந்த வண்ணார பரதேசி பீடம் பிரதான சாலையில் அமைந்துள்ளது.

 அடிப்படை செய்தி.

 18ஆம் நூற்றாண்டில் வாழ்ந்தவர். யாரிடமாவது எப்பொழுதாவது உணவு கேட்டு சாப்பிடுவாராம். அப்படி யாரிடம் கேட்டு சாப்பிடுவாரோ அவர்கள் வீட்டில் எதாவது லேலை செய்து இந்த கடனை உடனே கழித்துவிடுவாராம். பல அற்புதங்கள் நடத்தியுள்ளார். உதாரணமாக, மயிலம் தேரோட்ட நிகழ்ச்சியன்று , சிலர் அவர்களின் குழந்தைகளை வீட்டிலேயே விட்டு விட்டு சென்றனராம். அப்பொழுது அந்த குழந்தைகள் அழுதால் அவர்களை, அவரின் அற்புதசக்தியை வைத்து, அந்த குழந்தைகளை ஒரு நொடியில் அங்கு அழைத்து சென்று அவர்களின் பெற்றோர்களை காண்பித்து விட்டு பிறகு மீண்டும் இந்தபகுதியிலேயே விட்டுவிடுவாராம். வித்தியாச மான அற்புதமாக இருந்ததால் நான் இதை இங்கு குறிப்பிட்டேன்.

இவரின் சிலைக்கு இரண்டு பக்கமும், அகத்தியரும் வள்ளலாரும்.






பகுதி இரண்டு தொடரும்.


No comments:

Post a Comment

சப்தமங்கைதலங்கள்.

  சப்தமங்கைதலங்கள். (தரிசனம்-13.7.2025)  அமைவிடம் கும்பகோணம் - தஞ்சாவூர் செல்லும் வழியில் உள்ள ஐய்யம்பேட்டை என்ற ஊரை சுற்றி அமைந்துள்ளது. ச...