மானாகிராமம். (பயணித்தநாள்- 10.10.2024)
அமைவிடம்.
உத்ரகாண்ட் மாநிலம், சமோலி மாவட்டத்தில் அமைந்துள்ளது. புகழ்பெற்ற பத்ரிநாத் கோவிலில் இருந்து, 3 கி.மீ. தொலைவில் உள்ளது.
இந்தியாவின் முதல் கிராமம்.
2024 ஆம் ஆண்டு மே மாதம் 31 ஆம் தேதி முதல் “இந்தியாவின் முதல் கிராமம்” என்ற சிறப்புடன் அழைக்கப்படுகிறது. இந்தியா- திபெத் எல்லையில் உள்ளதால், இந்த கிராமம் இதுநாள் வரை “இந்தியாவின் கடைசி கிராமம்” என்று பெயர் பெற்று இருந்தது. நமது பாரத பிரதமர் இந்த கிராமத்தின் வளர்சியையும் பாதுகாப்பையும் மனதில்கொண்டு “இந்தியாவின் முதல் கிராமம்” என்று பெயர் சூட்டினார். இந்த கிராமம் கம்பளி ஆடைகளுக்கு புகழ்பெற்று விளங்குகிறது.
வியாசர் குகை
மகாபாரதம் என்ற இதிகாசம் இங்கு தான் எழுதப்பட்டது என்பதற்காக வியாசருக்கு ஒரு குகை கோவில் இங்கு உருவாக்கப்பட்டுள்ளது. முழுமுதற்கடவுளான விநாயகர் அவரின் தந்தத்தை பயன்படுத்தி எமுதியதால், விநாயர் குகை கோவிலும் சிறப்புற்று விளங்குகிறது.
சரஸ்வதி நதி.
இங்குதான் இந்தநதி உருவாகிறது. பின் அந்தர்வாகிணியாக (கண்ணுக்கு புலப்படாவண்ணம்) ஒடுகிறது என்ற கூறுவர். இங்கு சரஸ்வதிதேவிக்கு ஒரு கோவில் கட்டப்பட்டுள்ளது. நாங்கள் சரஸ்வதி பூஜை அன்று இந்த கோவிலை தரிசனம் செய்தது மட்டற்ற மகிழ்சியும் மனநிறைவையும் எங்களுக்கு அளித்தது.
No comments:
Post a Comment