சந்திரசூடேஸ்வரர் (தரிசனநாள் - 10.11.2024)
அமைவிடம்
மரகதாம்பிகை சமேத சந்ரசூடேஸ்வர் திருக்கோவில், கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூரில் அமைந்துள்ளது. சிறிய மலையில் இக்கோவில் அமைந்துள்ளது.
சந்ரசூடேஸ்வரர் - பிறையை சூடியவர்.
மரகதாம்பிகை – மரகதகல் பச்சை வண்ணம் (பச்சை வண்ண மேனியள்;
புராணம்
பிரம்மாண்ட புராணத்தில் இந்த ஓசூர் பகுதியும் இந்த கோவிலும் குறிப்பிடபட்டுள்ளது. இதன் அடிப்படையில் இந்த கோவிலின் பழமை நமக்கு தெரிகிறது. ஹொய்சாளார்கள் என்ற ராஜ வம்ச அரசர்கள் இந்த கோவிலை 1260 ஆம் ஆண்டில் கட்டிஇருக்கலாம் என்ற அறியப்படுகிறது. சோழர்கள், விஜயநகரமன்னர்களால் கோவில் நன்கு விரிவடைந்துள்ளது. பெங்களுர் பகுதியில் உள்ள சோழ அரசர் கால கோவில் கல்டிவட்டுகளில் இந்த கோவிலுக்கு கொடுக்கப்பட்ட நன்கொடைகள் பற்றிய தகவல்கள குறிப்பிடபட்டுள்ளன.
தட்சிணதிருப்பதி.
தட்சிணதிருப்பதி என்று அழைக்கப்படும் ஸ்ரீவெங்கடேஸ்வரசுவாமி கோவில், காமன்தொட்டி என்ற இடம் அருகில் கோபசந்ரா என்ற இடத்தில் அமைந்துள்ளது. ஓசூர் அருகில் தேசிய நெடுஞ்சாலை 48-ல் அமைந்துள்ளது. கோவில் வளைவில் இருந்து 500 மீ. தொலைவில் கோவில் அமைந்துள்ளது.
சற்று உயரத்தில் மிகுந்த இயற்கை எழில் சூழ்நிலையில் அமைந்துள்ளது இந்த கோவில். திருப்பதி பெருமாள் போன்றே, பெருமாள் இத்தலத்தில் அருள்பாலிக்கிறார். கோவிலில் இருந்து தென்பண்ணையாறு பார்பதற்கு மிக அழகாக உள்ளது.
No comments:
Post a Comment