காப்பித்தோட்டம். (16.11.2024)
அமைவிடம்
பெங்களுர், பன்னாரகட்டா என்ற இடத்திற்கு அருகில் "CITRUS TRAIL" என்ற பெயரில் தனியார் ஒரு காப்பிதோட்டம் அமைத்துள்ளனர். காப்பி தோட்டத்தில் ஊடுபயிராக மிளகு மற்றும் பாக்கு மரங்களை வளர்கின்றனர்.
இந்த தோட்டத்தின் வருமானத்தை பெருக்க தோட்டத்தின் உட்பகுதியில் உணவகத்தை தொடங்கியது மட்டுமல்லாமல் வார இறுதிநாட்களில் இயற்கை சுற்றுலா தலமாகவும் பயன் படுத்திவருகின்றனர்.
எங்கள் பேத்தியின மூன்றாவது பிறந்தநாள் அன்று நாங்கள் இந்த தோட்டத்தை சுற்றிபார்த்து மகிழ்ந்து இந்த உணவகத்தில் உணவருந்தினோம். இளைஞர்களே, பெரும்பாலும் இங்கு பொழுதை கழிக்கவருகின்றனர்.
No comments:
Post a Comment